BREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

BREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DWtl0fxVAAAY0XLBREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள
காலா படம் ஏப்ரல் 27ல் வெளியாகிறது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கியுள்ள ரஜினியின் 2.0 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என கூறப்பட்டது.

ஏனென்றால் ரஜினி தன் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப் பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

இப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்தகவலை சன் டிவி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் ஒரு இந்து துரோகி; அவரை வாழ்த்துகிறேன்.. எச். ராஜா

கமல்ஹாசன் ஒரு இந்து துரோகி; அவரை வாழ்த்துகிறேன்.. எச். ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

H Raja and Kamal haasanநடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.

தன் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டு 6 கைகள் இணைந்த கட்சி கொடியை சின்னத்துடன் அறிமுகப்படுத்தினார்.

கட்சி தொடங்கும் அன்று ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னர் அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார்.

பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

அன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதுதான் தன் கட்சியை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிடமும் கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “ .ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல்.

அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு, அங்கு இருக்கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லக்கூட நேரமில்லை.

ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை கூட வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி.

இருந்த போதிலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய விருது கிடைத்தால் விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்.. ஜிவி.பிரகாஷ்

தேசிய விருது கிடைத்தால் விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்.. ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and vijayபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நாச்சியார்’.

இதுநாள் வரை ஜிவி. பிரகாஷின் நடிப்பை இகழ்ந்தவர்கள் கூட இந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய்யும் ஜிவி. பிரகாஷைப் பாராட்டியுள்ளாராம்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளதாவ… “நாச்சியார் படம் பார்த்துவிட்டு விஜய் அண்ணா எனக்கு மெசேஜ் செய்தார்.

கடந்த வருடம் அவருடைய பிறந்தநாளில் சந்தித்தபோது, பாலா படத்தில் நடிப்பதற்காக வாழ்த்து சொல்லியிருந்தார்.

இந்த படத்தில் என் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்.

அவர் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படி எனக்குத் தேசிய விருது கிடைத்தால், அதை விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்” என்றார்.

என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தரவேண்டாம் : ரஜினி

என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தரவேண்டாம் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஇன்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் பேசிய பேச்சின் முக்கிய துளிகள் இதோ…

1. ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும்.

2.மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்.

3.ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன் .

4.இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ஃப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும் .

5.அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம்.

6.அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.

7.எனது ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம்; அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.

8.விரைவில் உங்கள் அனைவரையும் உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன்.

9. காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரவேற்கிறேன்.

10.கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது; கமல் சிறப்பாக செயல்படுவார்.

11.32 மாவட்ட நிர்வாகிகளை ஒரே நேரத்தில் சந்திக்க சிறிது நேரம் ஆகும்; நேரம் வரும்போது நேரடியாக சுற்றுப்பயணம் மூலம் ரசிகர்களை சந்திப்பேன்.

12. நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brammanda nayagan posterஅனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள ‘அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படம் ஆண்டாளை மையப்படுத்தி எடுத்துள்ளதால் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் வைரமுத்து ஆண்டாளின் பெருமைகளை உணர்ந்தவர் உயர்த்தியவர் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

” படம் பெருமாள் வரலாறு ,அவர் மீது பக்தி கொண்டவரின் பக்தி பற்றி அழகாகச் சொல்கிற படம். இது ஆந்திராவில் ஓடி வெற்றி பெற்ற பக்தி மணம் கொண்ட பிரமாண்ட வெற்றி படமாகும்.

படத்தையே பார்க்காமல் விளம்பரத்துக்காக வழக்கு போட்டுள்ளதால்

படத்துக்குப் பிரச்சினை எழுந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.

இப்படி விளம்பரம் தேட வழக்கு போடுகிறவர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும் ,உறவினரோடும் ஊர்க்காரர்களோடும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்த்து விட்டு ஆண்டாளைப் பற்றி தவறாக எதுவும் உள்ளதா என தெரிந்து கொள்ளட்டும்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

இன்று முதல் உலமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்.

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and arvind kejiriwalமதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சியின் பெயரை அறிவித்தார்.

கமல்ஹாசனின் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் இரு கட்சிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளை நிராகரித்து விட்டு கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.

அரசியல் மாற்றாக உருவாகியுள்ள கமல் கட்சிக்கு தமிழக மக்கள் இனி வாக்களிக்கலாம்.

அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக கமல் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிற தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

More Articles
Follows