தியேட்டர்களில் ச்சும்மா கிழி.; ஜப்பானிலும் ரஜினி தர்பார்.; கொண்டாடும் ஜப்பானியர்கள்

தியேட்டர்களில் ச்சும்மா கிழி.; ஜப்பானிலும் ரஜினி தர்பார்.; கொண்டாடும் ஜப்பானியர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்த படம் ‘தர்பார்’. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் இருந்தது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் 2020 பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீசானது. அப்போதே பெரும் வரவேற்பு கிடைத்தது.

மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். எனவே வெளிநாடுகளிலும் தர்பார் பட்டைய கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜப்பானில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது தர்பார் திரைப்படம்.

அங்கு ரிலீஸ் நாள் முதல் 21 தேதி வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வசூல் வேட்டை நடத்தி வருவதாக ரஜினி பிஆர்ஓ ரியாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனை ஜப்பானில் ‘தர்பார்’ திருவிழாவாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Rajinikanths Darbar Thiruvizha at Japan

கோலிவுட்டில் முதலிடம் : தனுஷ் செய்த சாதனை..; ரஜினி கமல் விஜய் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

கோலிவுட்டில் முதலிடம் : தனுஷ் செய்த சாதனை..; ரஜினி கமல் விஜய் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அசுரன் நடிகர் தனுஷ்.

ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரு படங்களுக்கும் தேசிய விருதை வென்றுள்ளார்.

நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார் தனுஷ்.

கோலிவுட் சாதனைகளை தொடர்ந்து பாலிவுட் & ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்று வருகிறார்.

தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

தற்போது நேரிடையாக 2 தெலுங்கு படங்களில் நடிக்கவுள்ளார்.

இதனால் நாளுக்குள் நாள் இவரது புகழ் கொடி கட்டி பறக்க தொடங்கியுள்ளது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடித்து வரும் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து, வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், சேகர் காமுல்லா என முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இவர் ட்விட்டரில் தன் படம் குறித்த தகவல்களை அடிக்கடி பதிவிடுவதால் ட்விட்டரிலும் பாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ட்விட்டரில் 10 மில்லியன் (1 கோடி ஃபாலோயர்களை கொண்ட முதல் நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து நடிகர் கமல் & சூர்யா 68 லட்சம் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் பாலோயர்களுடன் ரஜினிகாந்த் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

32 லட்சம் ஃபாலோவர்ஸ்களுடன் வைத்திருக்கும் விஜய் (அட்மின்) 4 ஆவது இடத்தில் உள்ளார்.

இதனால் தனுஷை விட டாப் ஹீரோக்களாக வலம் வரும் ரஜினி கமல் விஜய் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னணி நடிகர்களான அஜித் விக்ரம் ஆகியோர் ட்விட்டரில் அக்கௌண்ட் வைத்துக் கொள்ளவில்லை.

Dhanush is first actor in kollwood reached 10 Million followers in twitter

கார்த்தியை கண்டும் கண்டுக் கொள்ளாத விஜய்.; அட இதுதானா மேட்டரூ.!

கார்த்தியை கண்டும் கண்டுக் கொள்ளாத விஜய்.; அட இதுதானா மேட்டரூ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

விஜய் -பூஜா ஹெக்டே பங்கேற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கார்த்திக்கின் சர்தார் பட சூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தந்தை -மகன் என இருவேறு கெட்டப்புகளில் கார்த்தி நடித்து வருகிறார்.

ஒரு கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதே கெட்டப்பில் சென்று விஜய்யை சந்தித்துள்ளார் நடிகர் கார்த்தி.

வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் முதலில் அவரை அடையாளம் தெரியாமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் விஜய்.

பின்னர் கார்த்தி தன்னை அறிமுகம் செய்து பேசிய பின்னர்தான் கார்த்தியை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தாராம் விஜய்.

Actors Vijay and Karthi met at Chennai Gokulam Shooting spot

50 ஆண்டுகால திரைவாழ்வில் இந்தளவு விலகியதில்லை..; கமல் நெகிழ்ச்சி

50 ஆண்டுகால திரைவாழ்வில் இந்தளவு விலகியதில்லை..; கமல் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் 232 வது படமான ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமலே தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

கமலுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

நேற்று பூஜையுடன் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கியது.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்..

“பள்ளி மாணவர்கள் மீண்டும் சந்திப்பதைப்போல உணர்கிறேன். 50 ஆண்டுகால திரைவாழ்வில் இந்த அளவுக்கு படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்ததில்லை.

எனது சக தோழர்கள் அனைவரையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலில் பணிபுரிய வரவேற்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Kamal tweets on Vikram movie shoot

சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டண உயர்வு வழக்கு..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டண உயர்வு வழக்கு..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தியேட்டர்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு.

இது தொடர்பான அரசாணை 2017ல் பிறப்பித்தது.

அப்போது.. மாநகராட்சிகளில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயம் செய்தது.

அத்துடன் பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் நகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டணத்தை அதிகரிக்க கோரி வாகன நிறுத்துமிடத்துக்கு உரிமம் பெற்ற இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்.. தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் & மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது…

“திரையரங்குகளில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

திரையரங்கு வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயர்த்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானது.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

High court verdict on theatre parking charges

ஐகோர்ட் தீர்ப்பில் பதிவான விமர்சனத்தை நீக்கவும் அபராதத்தை ரத்து செய்யவும் விஜய் மேல் முறையீடு

ஐகோர்ட் தீர்ப்பில் பதிவான விமர்சனத்தை நீக்கவும் அபராதத்தை ரத்து செய்யவும் விஜய் மேல் முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவுவரி செலுத்தவில்லை விஜய்.

இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்யப்படவில்லை.

நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் தன்னுடைய உண்மையான இயற்பெயரில் (சி.ஜோசப் விஜய்) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு…

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை என்றார்.

விஜய்யின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.

திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாட்டை ஆளும் அளவுக்கு நடிகர்கள் உயர்ந்துள்ளனர். ரீலிலும் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்களாக நடிகர்கள் திகழ வேண்டும்.

எனவே சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.

இத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வரும் திங்கள்கிழமை ஜூன் 19 ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

அந்த மனுவில்… “தான் வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த மனுவில் நடிகர் விஜய் தரப்பு தெரிவித்திருக்கிறாராம்.

Thalapathy Vijay decides to re-appeal High Court’s statement

More Articles
Follows