தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பாதி கோடம்பாக்கமே நடித்துள்ளது.

இப்படம் நாளை தீபாவளிளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

உலகளவில் 1195 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 620க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இதனிடையில் இந்த படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ஏரியா வாரியாக எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதன்படி..

கோவை 80 தியேட்டர்கள், செங்கல்பட்டு ஏரியாக்களில் 75 தியேட்டர்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் 30 தியேட்டர்களில் வெளியாகிறது.

சேலம், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களில் 70 தியேட்டர்களிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 50க்கும் அதிகமான தியேட்டர்களிலும், வட ஆற்காடு ஏரியாவில் 42க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாகிறது.

சென்னை ஏரியாவில் 32 தியேட்டர்களில் வெளியாகிறது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நாளை மட்டும் 84-90 காட்சிகளில் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். இதனால் அவர் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்காது.

அரசியலை வைத்து தான் ரஜினி தன் படங்களுக்கு விளம்பரம் தேடினார் என என பலரும் சொன்ன நிலையில் உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸ்? அதுவும் கொரோனா காலத்திலும் இப்படி அரங்கு நிறைந்த காட்சிகளா? என வியக்க வைக்கிறார் இந்த அண்ணாத்த.

ஆக 45 ஆண்டுகளாக ரஜினியிசம் இன்னும் தொடர்ந்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajinikanth’s Annaatthe TN theatre release details

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இரவில் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் நடிகர்கள் விஷால் ரமணா.

அதன்படி இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையாம். எனவே தற்போது தனது வேண்டுதலையும், நேர்த்திகடனையும் செலுத்தியிருக்கிறார் விஷால்.

விஷால் தரிசனம் செய்துள்ளபோது நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா செல்வமணியும் திருப்பதி வந்துள்ளார்.

இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Vishal visits Tirupati ahead of his film Enemy’s release tomorrow on Diwali

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. இந்த படத்தில் அன்புச்செல்வன் என்ற பெயரில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்தார்.

இந்த கேரக்டர் இன்று வரை ரசிகர்களால் மறக்கப்படாத கேரக்டராக இருக்கிறது. இதே வார்த்தையே நம் ஜெய்பீம் விமர்சனத்திலும் பார்த்தோம்.

இந்த நிலையில் அன்புசெல்வன் என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை வினோத் குமார் இயக்கவுள்ளதாகவும் அதில் கௌதம் மேனன் மிரட்டல் போலீசாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தயாரிப்பு நிறுவனம் : செவன்டிஎம்எம் ஸ்டூடியோஸ்

இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டு அதில் கௌதம் மேனனை வாழ்த்தினார்.

இந்த போஸ்டரை பார்த்த கௌதம்.. இந்த செய்தி எனக்கே ஷாக் கொடுக்கிறது. இந்த படத்தில் நான் நடிக்கவேயில்லை. இந்த வினோத் குமார் என்ற இயக்குனரை நான் பார்க்கவேயில்லை.” என அதிர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Gautham Menon’s shocking reaction to his new film poster

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது தனது 2வது இன்னிங்சில் பட்டைய கிளப்பி வருகிறார். அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

கொரட்டலா சிவா இயக்கும் ‘ஆச்சாரியா’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதற்கு தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ எனப் டைட்டில் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் அஜித் நடித்த ‘வேதாளம்’ பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

இந்த படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு பாபி இயக்கத்தில் மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதற்கு தற்காலிகமாக சிரஞ்சீவி 154 என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க கமல் மகள் ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

Kamal daughter to romance Chiranjeevi in her next film

இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29 அன்று காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய சினிமாவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 1 பெங்களூர் சென்று புனித் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஒரு நாள் ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்தேன். அப்போது புனித் என்னைப் பாராட்டினார்.

சில நேரங்களில் போனில் பேசுவோம். அப்போது ஒரு நாள் “உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூருக்கு வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

எனவே அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்படியொரு தருணம் நடக்கும் என நினைக்கவே இல்லை.

நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். அவருடைய நல்ல உள்ளத்திற்காகவே அவர் எப்போதுமே நினைவில் நிற்பார்.

ஒரு நாயகனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் புனித் சார்.” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Actor Sivakarthikeyan breaks down after paying homage to Puneeth Rajkumar in Yeshwanthpur

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனர் மார்டின் பிரகாட் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான மலையாள படம் நாயட்டு. (நயட்டு).

இதில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஒரு நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் கலந்து யதார்த்தமாக உருவான படம் இது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படத்திற்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் மவுசு கூடியது.

தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

அதன்படி தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இதில் ராவ் ரமேஷ், அஞ்சலி, பிரியதர்ஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படங்களை இயக்குனர் கருணா குமார் இயக்குகிறார்.

இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார்.

Nayattu movie remake rights updates here

More Articles
Follows