தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அண்ணாத்த அண்ணாத்த… சாரல்.. மருதாணி ஆகிய படங்கள் ஏற்கெனவே வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.
விரைவில் வா சாமீ.. வா சாமி என்ற பாடல் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி மற்றும் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
‘அண்ணாத்த’ படத்தின் தெலுங்கு டப்பிங்கின் பெயர் ‘பெத்தண்ணா’.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் அண்ணாத்த வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல டிஜிட்டல் நிறுவனமான கியூப் வாங்கியுள்ளது.
ரஜினியை பொறுத்தவரை உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். எனவே அண்ணாத்த படத்திற்கு அமெரிக்காவிலும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் அண்ணாத்த மற்றும் பெத்தண்ணா என்ற இரு மொழிகளிலும் படமும் அங்கு வெளியாகிறது.
அமெரிக்காவில் சுமார் 260 தியேட்டர்களில் படத்தை வெளியிடவுள்ளதாகவும் நவம்பர் 3ம் தேதியே படத்தின் பிரிமீயர் காட்சிகளை திரையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் டிக்கெட் விலை ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.
9 டாலர் முதல் 15 டாலர் வரை படத்தின் பிரிமீயர் காட்சிகள் மற்றும் முதல் நாள் முதல் காட்சிகளுக்கான டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை ரூ 1200 முதல் 1500 வரையாகும்.
தமிழகத்தில் முக்கியமாக சென்னையில் ‘பேட்ட, தர்பார்’ ஆகிய படங்களின் முதல் நாள் முதல் சிறப்புக் காட்சி கட்டணம் ரூ 800 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Rajinikanth’s Annaatthe : Tickets at High Prices