தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 வாரம் அவர் தங்குகிறார்.
இதனிடையில் அவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு ஹாயாக தனியாக சுற்றி வருகிறார்.
அங்கு அவர் ஒரு எஸ்கலேட்டரில் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி உள்ள ஒரு படம் வைரலாகி வருகிறது.
இதே போன்ற ஒரு போஸ் சிவாஜி படத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஒரு காட்சியில் இருக்கும். எனவே அதையும் இந்த போட்டோவும் வைத்து… தலைவருக்கு ஸ்டைல் கூடவே பிறந்தது என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.
மேலும் அங்குள்ள மெட்ரோ ரயிலில் ரஜினி பயணித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்ட்டாகி உள்ளது.
