BREAKING கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்.. கந்தனுக்கு அரோகரா..; தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு

BREAKING கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்.. கந்தனுக்கு அரோகரா..; தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Rajini spoke to TN Chief Minister regarding Coronaகறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் விவகாரம் தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது

தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட அந்த வீடியோவும் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசைப் பாராட்டி ட்விட்டரில்…

“கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajinikanth tweet about Kandha Sasti Kavasam Controversy

தாத்தாவாகிறார் சீயான் விக்ரம்.; மாமாவாகிறார் துருவ்.! அக்‌ஷிதா ஹாப்பி.!

தாத்தாவாகிறார் சீயான் விக்ரம்.; மாமாவாகிறார் துருவ்.! அக்‌ஷிதா ஹாப்பி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiyaan vikramநடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா. இவர் நடிகர் துருவ்வின் சகோதரி ஆவார்.

அக்‌ஷிதாவுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் விக்ரம் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கிறார்.

விரைவில் அவர் தாய்மையடைய உள்ளார்.

இதனால் விக்ரம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதன்மூலம் நடிகர் விக்ரம் தாத்தாவாக போகிறார். துருவ் மாமாவாக போகிறார்.

There was a problem playing this video.

செல்போனில் சினிமா எடுப்பது எப்படி?.. மூன்றே நாளில் கற்க இதோ ஒரு வாய்ப்பு

செல்போனில் சினிமா எடுப்பது எப்படி?.. மூன்றே நாளில் கற்க இதோ ஒரு வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

movie making in mobileசினிமா ராண்டேவூ வழங்கும்
‘ஷைலார் புரொடக்ஷன்ஸி’ன் “கைபேசியில் சினிமா எடுப்பது எப்படி?”
– ஒரு பயிலரங்கம்.

‘மர்மதேசம்’ நாகா, ஒளிப்பதிவாளர் அருன்மணி,
நடிகர்/சமூகப்பணியாளர் ஷைலஜா சேட்லூரின் வழிகாட்டுதலில் கைபேசியில் சினிமா எடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மூன்று நாட்கள்
நேரம் மாலை 3-5 மணிவரை. ஜுலை 24, 25 & 26 தேதிகளில்.

கட்டணம் ரூ.4200 + 18% ஜிஎஸ்டி
சினிமா ராண்டேவூ ஆயுள்-சந்தாதாரர்களுக்கு
ரூ. 3800 + 18% ஜிஎஸ்டி

பதிவு செய்து கொள்ள
Pradeep 9514895141

ரஜினி தேசியவாதி.. அவர் கந்தசஷ்டி விவகாரத்தில் வாய்ஸ் கொடுக்கனும்… – பாஜக. முருகன்

ரஜினி தேசியவாதி.. அவர் கந்தசஷ்டி விவகாரத்தில் வாய்ஸ் கொடுக்கனும்… – பாஜக. முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் விவகாரம் தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது.

இது குறித்து பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கூறியதாவது…

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இன்று இந்துக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து கோவையில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும்… அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி தேசியவாதி. எனவே அவர் கந்தசஷ்டி விவகாரத்தில் குரல் கொடுக்கவேண்டும்.

அவர் மட்டுமல்ல அத்தனை பேரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

பிறந்த நாளில் அருள்நிதி அமர்க்களம்.; பைவ் ஸ்டாருக்கு ஒரு படம்.. எருமசாணிக்கு ஒரு படம்

பிறந்த நாளில் அருள்நிதி அமர்க்களம்.; பைவ் ஸ்டாருக்கு ஒரு படம்.. எருமசாணிக்கு ஒரு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arulnithiநடிகர் அருள்நிதி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு இவர் ய
நடிக்கவுள்ள இரு படம் அறிவிப்புகள் வெளியானது.

பொல்லாதவன் ஆடுகளம் போன்ற படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் டைரி என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும் யூடியூப் புகழ் எரும சாணி புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இதன் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி முதல்வர் வேட்பாளரானால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்புள்ளது.. – ‘துக்ளக்’ குருமூர்த்தி

ரஜினி முதல்வர் வேட்பாளரானால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்புள்ளது.. – ‘துக்ளக்’ குருமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth guru murthy1990 முதலே நடிகர் ரஜினிகாந்த் மீது அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டது.. அவரும் கழுவுற மீனில் நழுவுற மீனாகவே இருந்து வந்தார்.

கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அதிரடியாக அறிவித்தார்.

அதன்பின்னர் விரைவில் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

ரசிகர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினார்.

எனவே ரஜினி தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவரது ரசிகர்களும் நினைத்தனர்.

ஆனால் 2020 மார்ச் 12ஆம் தேதி எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும் ரசிகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகம் இழந்தனர்.

ஆனால் ரஜினியை எதிரியாக நினைத்த அரசியல்வாதிகள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் ரஜினி தன் முடிவை மறு சிந்தனை (பரீசிலனை) செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் துக்ளக் பத்திரிக்கையில், வாசகர் ஒருவரின் கேள்விக்கு… ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் மட்டும் கூறுவது எதை காட்டுகிறது என கேட்க.. ”தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது” என பதிலளித்துள்ளார்.

அதாவது ரஜினி தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது” என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows