தளபதி, படையப்பா, குசேலனுக்கு பிறகு கபாலிதான்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரஜினி படங்களில் அவரது பெயர் வரும்போதே தியேட்டர் ஆர்ப்பரிக்கும்.

டைட்டில் கார்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒவ்வொரு எழுத்துக்களாக வந்து சேர்வதற்குள் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

அதுபோல்தான் அவரது அறிமுக காட்சி அமைந்திருக்கும். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் அவர் தோன்றுவார்.

இந்த காட்சி படம் தொடங்கி 5 நிமிடங்களில் வந்துவிடும்.

ஆனால் தளபதி, படையப்பா மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுக காட்சி சற்று தாமதமாகத்தான் வரும்.

அதுபோல் விரைவில் வெளியாகவுள்ள கபாலி படத்திலும் ரஜினியின் அறிமுக காட்சி திரையில் வர கிட்டதட்ட 15 நிமிடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இம்… அதுவரை தியேட்டர்களில் ஸ்கீரின் கிழியாமல் இருந்தால் ஓகேதான்.

‘கபாலி’க்கும் ‘தல-57’க்கும் இப்படி ஒரு தொடர்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் வந்து ரஜினியைப் போல் சாதிப்பவர் அஜித்.

மேலும் இவர்களிடையே எளிமை, அமைதி, ஓபன் டாக், வெளித்தோற்ற நம்பிக்கையின்மை என பல விஷயங்கள் ஒற்றுமையாகவே உள்ளன.

இந்நிலையில் இவர்களின் சமீபத்திய படங்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கபாலி படத்தில் இளமையான ரஜினி, வயதான தாடி வைத்த கேங்ஸ்டர் ரஜினி, தாடியில்லாத ரஜினி என பல தோற்றங்களில் அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இவை அனைத்துக்கும் காரணம் டிசைனர் அனுவர்தன் என்பவர்தான்.

இவர்தான் அஜித்தின் தல 57 படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

அஜித்தின் பில்லா, ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களுக்கும் இவரே டிசைனராக பணிபுரிந்து இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் ‘முதல்வன் 2’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய படம் முதல்வன்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், ரகுவரன் நடித்த இப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் அனில் கபூர் நடிக்க ‘நாயக்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ‘நாயக் 2’ பாகத்திற்கான கதையை ராஜேந்திர பிரசாத் எழுதி வருகிறாராம்.

இவர் பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்தான் ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்ளின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்னத்திடம் இருந்து பெற்று இருக்கிறாராம் தீபக் முகுட்.

விஜய் பிறந்தநாள்: ‘வெற்றி’ கிடைக்காத அதிருப்தியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை நடிகர் விஜய் தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

எனவே அவரது ரசிகர்கள் கொடி, போஸ்டர், பேனர் என தங்கள் உற்சாக கொண்டாட்டங்களை முன்பே ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இரத்ததானம், அன்னதானம், கல்வி சார்ந்த உதவிகள் உள்ளிட்ட நற்பணிகளையும் செய்யவிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் விஜய்யின் ஹிட்டடித்த படங்களை திரையிட உள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி தியேட்டரில் நாளை காலை 9 மணிக்கு கத்தி படம் ஸ்பெஷல் காட்சி நடைபெறுகிறது.

ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னையிலுள்ள வெற்றி திரையரங்கில் திரையிட முடியாத சூழ்நிலை என கூறிவிட்டார்களாம்.

எனவே அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

‘கபாலி’ தம்பியாக உருவெடுத்த விவேக்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி டீசர் மற்றும் பாடல்கள் பட்டைய கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர்.

இப்படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.

இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை மட்டுமல்ல திரையுலக நட்சத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

நானும் வந்துட்டேன்னு சொல்லு.. தலைவர் படம் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பாக்க ரெடியா இருக்கேன்னு சொல்லு! கபாலி தம்பிடா!

என ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் விவேக்.

லிங்கா பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்கா என்றாலே நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் நடித்த படம்தான்.

ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கோ மற்றொரு லிங்காவும் ஞாபகத்திற்கு வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் ஆவார்.

இன்று லிங்கா ராஜா தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தனுஷ் ரசிகர்களும் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

லிங்கா, ரஜினியின் மூத்த பேரன் என்பதால் ரஜினி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More Articles
Follows