கபாலியை முந்திய பாகுபலியை தோற்கடித்த 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படத்தின் கேரள உரிமையை ரூ. 7 கோடி கொடுத்து மோகன்லால் வாங்கியிருந்தார்.

இதனால் தனது புலி முருகன் படத்தையே தள்ளி வைத்திருந்தார்.

அதன்படி கபாலியும் அவருக்கு லாபத்தை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து, பாகுபலி2 படத்தின் கேரள உரிமையை பிரபலம் ஒருவர் ரூ. 11 கோடி கொடுத்து வாங்கியிருந்தார்.

இப்படம் கேரளாவில் நல்ல வசூல் வேட்டை செய்தது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான 2.0 படத்தின் உரிமைக்கு கேரளாவில் அதிக போட்டி எழுந்துள்ளதாம்.

அதன்படி தற்போது வரை ரூ. 16 கோடிக்கு விலை பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Rajinikanth starrer 2.0 movie Kerala trade news updates

AAA படத்த பர்ஸ்ட் 3 நாளைக்கு பார்க்காதீங்க ப்ளீஸ்… – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிற ஜீன் 23ஆம் தேதி வெளியாகவுள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனாகான் உள்ளிட்டோர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிம்பு ஏற்றுள்ள மதுர மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை முதல் 3 நாட்களுக்கு பார்க்க வேண்டாம் என சிம்பு அதிரடியாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது…

என்னைய ரொம்ப ரொம்ப ரொம்ப நேசிப்பவர்களுக்காக இதை நான் சொல்கிறேன்.

படத்தை பார்த்து ஏதாவது கலாய்க்கலாம் என வந்தால், ஏன் நினைத்தால் கூட படத்தில் ஒரு துளியும் உங்களுக்கு கிடைக்காது.

எனவே நீங்க பர்ஸ்ட் 3 நாளைக்கு வந்து படம் பார்க்க வேண்டாம். அப்புறம் பார்க்கிறது உங்க இஷ்டம்.

ஒருவேளை நீங்க முதல் நாள் பார்த்துதான் ஆவேன் என்றால், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். வாங்க. பாருங்க.” என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் இந்த அசராதவன் சிம்பு.

Please dont watch my AAA movie in first 3 days of release says Simbu

 

விவேகம் ஆடியோ டீசர் வெளியானது; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் விவேகம்.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகவர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி சாதனை புரிந்துள்ள நிலையில், இன்று (ஜீன் 15, 2017) சற்றுமுன் இப்படத்தின்  சர்வைவா பாடல் ஆடியோ டீசரை வெளியிட்டுள்ளனர்.

இதில் நான் பண்பானவன், தோல்வி உந்தன் படிக்கட்டு, உச்சம் ஏறி கொடிகட்டு, வெற்றி வாகை சூடு என்ற வரிகளும் அடங்கியுள்ளது.

இப்பாடலை அனிருத்துடன் இணைந்து ராப்பிசை கலைஞர் Yogi-B பாடியுள்ளார்.

இப்பாடலுக்கான வரிகளையும் Yogi-B-யே எழுதியுள்ளார். 34 விநாடிகள் ஓடக்கூடிய பாடலின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சர்வைவா பாடலை மட்டும் ஜீன் 19ஆம் தேதி வெளியிடயிருக்கிறார்களாம்.

இந்த டீசர் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தள்ளதால், ஆனந்த வெள்ளத்தில் நனைந்து வருகின்றனர்.

Surviva song teaser from Vivegam released

கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த பட டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறைவி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதன்பின்னர் தனுஷ் ஒரு சில படங்களில் நடித்து இயக்கியும் தயாரித்தும் வந்தார்.

எனவே பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்க சென்றுவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தன் சொந்த ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

ரத்னகுமார் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ‘மேயாத மான்’ என்ற டைட்டில் வைத்துள்ளனர்.

வைபவ் நாயகனாக நடிக்க, பிரியா என்ற புதுமுகம் நாயகியாக நடித்து வருகிறார்.

இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மற்ற விபரங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ரம்ஜான் தினத்த்தில் 23ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

காலாவில் ரஜினியின் ஜோடி ஹியூமா குரேஷி இல்லை; ஜோடி இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் ஹியூமா குரேஷி, அஞ்சலி பட்டீல் உள்ளிட்ட பல நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய கேரக்டரில் ஹியூமா குரேஷி நடிப்பதால் இவர்தான் ரஜினியின ஜோடி என நினைத்திருந்தனர்.

ஆனால் இவர் ரஜினியின் கேங்ஸ்டர் குரூப்பில் ஒருவராக வருகிறாராம்.

தற்போது ரஜினியின் ஜோடி விவரம் கிடைத்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறாராம்.

இவர் ராமன் அப்துல்லா, நாளைய தீர்ப்பு, சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி ‘தென்னாட்டான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் என பன்முகம் கொண்ட ஆர்.கே. சுரேஷ், அண்மைகாலமாக பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார்.

இவரின் அடுத்த படத்திற்கு ‘தென்னாட்டான்’ என்று பெயரிடப்பட்டு அதன் பூஜை போடப்பட்டது.

இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார்.

திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.

படக்குழுவினர் கலந்து கொள்ள தயாரிப்பு அலுவலகத்தில் பூஜை எளிமையாக போடப்பட்டது.

ஆகஸ்ட் இறுதியில் இதன் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

RK Suresh Next Action Avatar Thennattan movie Pooja Starts today

More Articles
Follows