தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த். தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை இன்று சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்.
இன்று டிசம்பர் 26 ஆம் தொடங்கிய இச்சந்திப்பு 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.
முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது…
” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் காலா படத்தின் சூட்டிங்க், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது.
என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை.
இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மன்னிக்கவும்.
ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை மகளை வெட்டினார். மகன் தாயை வெட்டினார். கற்பழிப்பு இப்படி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் நாள்தோறும் வருகிறது.
மேலும் நெகட்டிவ்வான மீம்ஸ் வருகிறது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும். பாசிட்டிவ்வான விஷயங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார் ரஜினிகாந்த்.
முன்னதாக ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.