தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு ரஜினி வாழ்த்து

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Vishalதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து, சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் பெற்றி பெற்றனர்.

கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர்.

பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு பதவி ஏற்றார்.

புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷாலுக்கு ரஜினிகாந்த் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth praises Vishal for Producer Council President post

தமிழுக்கு முருகன்; தெலுங்குக்கு விநாயகர்… ஆர்யா எடுத்த அவதாரம்

தமிழுக்கு முருகன்; தெலுங்குக்கு விநாயகர்… ஆர்யா எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aryas Kadamban movie release updatesமஞ்சப்பை இயக்குனர் ராகவ் தன் இரண்டாவது படமாக இயக்கியுள்ள படம் கடம்பன்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரசா இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கு பதிப்புக்கு கஜேந்திரடு என்று பெயரிட்டுள்ளனர்.

கடம்பன் என்றால் முருகப்பெருமானையும். கஜேந்திரடு என்றால் விநாயகப் பெருமானை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aryas Kadamban movie release updates

gajendrudu

தாணு தயாரிப்பில் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம்

தாணு தயாரிப்பில் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Tamannah teams up for Kalaipuli Thanu projectரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படத்தை சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகியாக தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் தமன்னா இணையும் முதல் படம் இது என்பதும், விக்ரமின் 53வது படம் இது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

Vikram Tamannah teams up for Kalaipuli Thanu project

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை தீர்த்துக் கட்டும் த்ரிஷா

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை தீர்த்துக் கட்டும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha plays action role in Garjanai movieத்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள்.

இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார்.

அம்ரிஷ் இசையில் 3 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் 2 பாடல்கள் கதையோடு அமைத்திருக்கிறேன். மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘கர்ஜனை’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்’. என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை : அம்ரிஷ், ஒளிப்பதிவு : சிட்டி பாபு, படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, சண்டைக்காட்சி : சுப்ரீம் சுந்தர், பாடல்கள் : விவேகா, சொற்கோ, கருணாகரன், நடனம்: நோபல், படங்கள்: சீனு, மக்கள் தொடர்பு: இரா.குமரேசன்
நிர்வாகத் தயாரிப்பு: ஹேபாஸ்கர்,
தயாரிப்பு: ஜோன்ஸ்,
எழுத்து-இயக்கம்: சுந்தர்பாலு.

பவர் பாண்டியை மதிக்காத மடோனா; விஷாலிடம் செல்லும் புகார்

பவர் பாண்டியை மதிக்காத மடோனா; விஷாலிடம் செல்லும் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush madonnaதனுஷ் முதன் முறையாக இயக்கி, தயாரித்து நடித்துள்ள ப பாண்டி படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

எனவே இப்படக்குழுவினர் இதற்கான புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்காக இப்படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டாலும், மடோனா செபாஸ்டியன் கலந்து கொள்ளவில்லை.

இப்படத்தில் ஒப்பந்தம் ஆகும் சமயத்தில் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கையெழுத்திட்டு இருந்தாராம் மடோனா.

ஆனால், தற்போது மறுக்கவே, இந்த விஷயம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லக்கூடும் என சொல்லப்படுகிறது.

அப்படியானால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் சந்திக்கும் முதல் புகார் இதுவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Power Paandi action against their heroine Madonna Sebastian

இம்சை அரசனாகிறார் சூரி..? வடிவேலுவை கழட்டிவிட்ட ஷங்கர்

இம்சை அரசனாகிறார் சூரி..? வடிவேலுவை கழட்டிவிட்ட ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar Vadivelu sooriகடந்த 2006ஆம் ஆண்டு வடிவேலு நாயகான நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார்.

இதற்கு வடிவேலுவும் ஒப்புக் கொண்டதாக வந்த செய்தியினை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில், ஷங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க முன்வந்ததாம்.

இதனையறிந்த வடிவேலு, தன் சம்பளத்தை இரட்டிப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வடிவேலுவை கழட்டிவிட்டு, சூரியை ஹீரோவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம் புலிகேசி குழுவினர். (அறிவிப்பு வரை காத்திருப்போம்…)

Soori will replace Vadivel in Imsai arasan 23am pulikesi sequel

More Articles
Follows