தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது…
“உணவில் அதிக அளவில் உப்பை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
என் வீட்டுக்கு புதிதாக வந்த சமையல்காரர் சிறப்பாக சமைத்தார். ஆனால், எனக்கும் என் மனைவிக்கும் BP ஏறிக்கொண்டிருந்தது.
எப்போதும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன். பின்னர் ஏன் BLOOD PRESSURE அதிகரிக்கிறது என புரியாமலிருந்தேன்.
பின்னர் தான் தெரிந்தது அளவுக்கு அதிகமாக நாங்க உப்பை பயன்படுத்திகிறோம்.
நம் மனித உடல் என்ன ஓர் அற்புதம்..
ஆச்சரியமாக உள்ளது. பிறந்ததிலிருந்து 80 ஆண்டுகள் வரை இதயம் ‘லப் டப்’ என துடித்துக் கொண்டிருக்கிறது.
இதை வேறு எந்த மெஷினாலும் செய்ய முடியுமா? எவ்ளோ விஞ்ஞானிகள் இருந்தாலும் ஒரு துளி ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியுமா?
இதெல்லாம் தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அவர்களை பார்த்தால் சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.”
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Rajinikanth latest speech about his health condition