கபாலிக்கு வருடாபிஷேகம்; கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

kabali posterகடந்த வருடம் 2016 ஜீலை 22ஆம் தேதி ரஜினி நடித்த கபாலி படம் ரிலீஸ் ஆனது.

இந்திய சினிமாவையே திரும்பிக் பார்க்கும் அளவுக்கு இப்படத்தின் விளம்பரங்களை செய்திருந்தார் இப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.

குழந்தைகள் விரும்புக் சாக்லேட், பெண்கள் விரும்பும் தங்கம், விமானம் என என ஒன்றுவிடாமல் திரும்பிய பக்கமெல்லாம் கபாலி மயமாக இருந்தது.

தென்னிந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் கபாலி படம் ரிலீஸ் ஆன நாளன்று விடுமுறையே அறிவித்து இருந்தது.

விளம்பரங்கள் போதும் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித்தே ஒருமுறை சொல்லியிருந்தார் என்றால் பாருங்களேன்.

இப்படம் இன்றுவரை மதுரை உள்ள இம்பாலா தியேட்டரில் ஒரு வருடத்தை கடந்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே இதற்கு விழா எடுக்க முடிவுசெய்த ரஜினி ரசிகர்கள் கபாலி வருடாபிஷேகம் என்ற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

நாளை ஜீலை 30ஆம் தேதி இந்த விழா மதுரையில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க ரசிகர்கள் மதுரையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

காலை 10.30 மணிக்கு திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் இந்த கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

மேலும் ரஜினியின் அரசியல் கட்சி பற்றிய ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மதிய உணவுக்கும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மணி இம்பாலா தியேட்டருக்கு ஊர்வலம் செல்கிறார்களாம்.

காலா சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும்இயக்குனர் ரஞ்சித் இதில் கலந்துக் கொள்ள முயற்சித்து வருகிறாராம்.

மேலும் நடிகர்கள் ஜான் விஜய், நடிகர் ஜீவா, நடிகை லட்சுமி, இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Rajinikanth fans going to celebrate Kabali Varudabishegam at Madurai

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More

Latest Post