Just in ‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என ரஜினி தரப்பில் அறிக்கை

Just in ‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என ரஜினி தரப்பில் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.்

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இந்த நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Rajinikanth fan club condemns the “goat sacrifice” incident for Annaatthe First Look celebrations

Rajini statement

தீபாவளி ரேஸ் : ‘அண்ணாத்த’ & ‘மாநாடு’ படங்களுடன் மோதும் ‘பகவான்’

தீபாவளி ரேஸ் : ‘அண்ணாத்த’ & ‘மாநாடு’ படங்களுடன் மோதும் ‘பகவான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்” மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மக்களின் நாயகன் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார்.

இத கொஞ்சம் பாருங்க : ‘பிக்பாஸ்’ ஆரிக்கு வில்லனாகும் ‘ஜிமிக்கி கம்மல்’ நடிகர்

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப்பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துகொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆரி அர்ஜீனன்.

ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்க, படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

(ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் கோப்ரா படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்னாக நடிக்கிறார்.

தொழில் நுட்ப குழுவினர் விபரம்

இயக்கம் – காளிங்கன்

ஒளிப்பதிவு – முருகன் சரவணன்

இசை – பிரசன் பாலா

படத்தொகுப்பு – அதுல் விஜய்

நடன அமைப்பு – கலா மாஸ்டர்

ஸ்டண்ட் – ஹரி தினேஷ்

பாடல்கள் – சம்பத் G

உடை வடிவமைப்பு – வினயா தேவ்

ஸ்டில்ஸ் – மணிகண்டன்

லைன் புரடியூசர் – முருகன் சரவணன்

இணை தயாரிப்பு – V. ஶ்ரீனிவாசா

தயாரிப்பு – C.V. மஞ்சுநாதா

Aari Arjunan’s Bhagavan to clash with Rajini and Simbu films

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய வாலிபர் கைது

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய வாலிபர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி அவர்களின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்யபட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றிவது பதிவாகி இருந்தது.

அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் அவர் நகை திருடியது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர்.

மேலும் இவர் மீது மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 இற்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Arrest has been made in jewellery theft in Soori’s relative function

‘டோஸ்ட் மாஸ்டர்’ கௌரவத்தை பெற்றார் நடிகை பார்வதி நாயர்

‘டோஸ்ட் மாஸ்டர்’ கௌரவத்தை பெற்றார் நடிகை பார்வதி நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகைகள் ஒரு விழாவில் கலந்து கொண்டால், அந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரிடத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

நடிகையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது முதல், அவருடன் கலந்துரையாடுவது, அந்த விழாவில் அவர் பேசும் பேச்சு, பேச்சு மொழி உள்ளிட்டவைகள் மூலம் அவரின் திரை ஆளுமை தவிர தனித்துவமான திறமைகளும் வெளிப்படும் வாய்ப்பு உண்டாகிறது.

இதன் காரணமாக நடிகைகள், நகைக்கடைகள், உணவகங்கள் என வணிக நோக்கம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய விழாக்களில் நடிகைகள் கலந்துகொண்டு பேசும்போது, அவர்களின் பேச்சில் வெளிப்படும் சுவராசியமான தகவல்கள், மேடை ஆளுமை, வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் உற்சாகத்தை உண்டாக்கும் உண்டாகும் பேச்சு .. என பல விஷயங்கள் இருக்கிறது.

இந்நிலையில் உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘டோஸ்ட்மாஸ்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.

140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் இந்த ‘டோஸ்ட்மாஸ்டர்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்வியியல் துறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது.

இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர்.

உதாரணமாக கூற வேண்டுமென்றால் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளை வென்ற சாதனையாளர்களை தான் கௌரவ விருந்தினர்களாக பேசுவதற்கு அழைப்பார்கள்.

இத்தகைய சாதனையாளர்களும் ‘டோஸ்ட் மாஸ்டரி’ன் உயரிய சர்வதேச தரத்திலான நோக்கத்தை உணர்ந்துகொண்டு மிகுந்த விருப்பத்துடன் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இதுபோன்றதொரு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அங்கு இளைய தலைமுறை மற்றும் இணைய தலைமுறையின் விருப்பத்திற்குரிய நடிகையான பார்வதி நாயர் அவர்களை பேச்சாளராக அழைத்திருந்தார்கள்.

டோஸ்ட்மாஸ்டரின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் நடிகை பார்வதி நாயரின் அற்புதமான பேச்சு அனைவரின் புருவத்தையும் வியப்பில் உயர்த்தியது. மாடலிங் மங்கையாகவும், விளம்பரங்களில் தோன்றும் வசீகர பெண்ணாகவும் திறமையான நடிகையாகவும் மட்டுமே அறிந்திருந்த பார்வதி நாயர், அன்றைய கூட்டத்தில் பேசிய பேச்சு, அவரின் தனித்திறமையை அடையாளப்படுத்தியது.

சரளமான பேச்சு… எளிமையான உதாரணங்கள்… அழுத்தமான நோக்கங்கள்… என ஒரு சுய முன்னேற்ற பேச்சாளருக்குரிய அத்தனை ஆளுமைகளும் இவரின் பேச்சில் இடம்பெற்றிருந்தது. கூட்டத்தை வசியப்படுத்தி வளமான சொல்லாட்சியை இவர் தடையில்லாமல் கைவரப் பெற்றிருந்தார். இவரின் பேச்சு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதன்பிறகுதான் நமக்கெல்லாம் நடிகை பார்வதி நாயர்- பள்ளியில் படிக்கும்போதே மேடைப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஏராளமான விருதுகளை வென்றவர் என்பதும், சுயமுன்னேற்ற பேச்சுக்களை பேசி ஏராளமான தன்னம்பிக்கை நாயகர்களை உருவாக்கியது என்பதும் தெரியவந்தது. விழாவின் இறுதியில் அவருக்கு ‘டோஸ்ட் மாஸ்டர்’ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமான திரை உலக பிரபலங்கள் இல்லத்திலேயே முடங்கி, தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி வந்தபோது, நடிகை பார்வதி நாயர் மட்டும் இத்தகைய பணியுடன் கூடுதலாக மேடைப் பேச்சு திறமையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்ததால், இனி அவரை நடிகை என்ற அடையாளத்துடன் மட்டும் சுருக்கி கொள்ளாமல், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உத்வேகத்தை வழங்கும் தன்னம்பிக்கை பேச்சாளராக அடையாளப்படுத்த வேண்டும் என தோன்றியது.

சர்வதேச அளவிலான ‘டோஸ்ட்மாஸ்டர்’ விருதை வென்ற நடிகை பார்வதி நாயருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனிடையே நடிகை பார்வதி நாயர், சர்வதேச அளவில் பிரமிக்கத்தக்க அளவிலான பேச்சாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் டெட்எக்ஸ் (TEDx) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் பேச்சரங்கங்களில், பல முறை கௌரவ பேச்சாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டவர் என்பதும், அதில் ஒரு முறை அவர்களின் அழைப்பை ஏற்று, தன்னுடைய சுருக்கமும், வீரியமும், ஆழமும் கொண்ட பேச்சால் அனைவரையும் வியக்கவைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Parvati Nair won the international ‘Toastmaster’ award

நீட் தேர்வுக்கு எதிராக போராடி அடுத்த தலைமுறையைக் காப்போம்..; தனுஷ் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல்

நீட் தேர்வுக்கு எதிராக போராடி அடுத்த தலைமுறையைக் காப்போம்..; தனுஷ் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் போனில் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

“… இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் இந்த சோகம் வரக்கூடாது.

எல்லோரும் சேர்ந்து இந்தத் தேர்வுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்” என்று தனுஷின் தாய் கதறியழுதபோது “…ஈடுசெய்ய முடியாத இழப்பிது.

இழந்த நம் பிள்ளைக்கான ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக இன்னும் வலுவாகப் போராடி அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைக் காப்போம்” . என்று ஆறுதல் தெரிவித்தார்.

மாணவர் தனுஷ் அவர்களின் உடலுக்கு மாநில செயலாளர் சரத்பாபு ஏழுமலை அவர்களும், மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களும் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் செல்வி அனுசுயா, திருமதி. அனிதா சசிகுமார், நகர செயலாளர் திரு. கண்ணன், சதீஸ்,ஜெகன், குமரேசன், முரளி, முருகன், ஈஸ்வரன், லக்‌ஷயா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.

MNM leader kamal haasan has condolences over the phone to the parents of a student who committed suicide

Neet Student Dhanush
Neet Student Dhanush
அஜித் அற்புதமான மனிதர்.. அதான் ‘தல’..; வியப்பில் நடிகர் நவ்தீப்

அஜித் அற்புதமான மனிதர்.. அதான் ‘தல’..; வியப்பில் நடிகர் நவ்தீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இது என்ன மாயம்’ படத்தில் 2வது ஹீரோவாக நடித்தவர் நவ்தீப். மேலும் ஆர்யாவுடன் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்திலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த ஏகன் படத்தில் அவரது தம்பியாக நடித்தவர் தான் இந்த நவ்தீப்.

இந்த நிலையில் அஜித்துடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில்..“இன்ஸ்பிரேஷன் இப்படித்தான் இருக்கும், திரையிலும் திரைக்குப் பின்னாலும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், “இந்த மனிதர் தூய்மையானவர்.

‘ஹாய்’ என அவர் அழைக்கும் குரல் உங்களை வியக்க வைக்கும்.

அவருடைய எளிமையான குணம், எளிமை அதற்காக தான் அவர் ‘தல’,” எனப் பாராட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் எடுத்துக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Navdeep has a fan boy moment with Thala #Ajith

More Articles
Follows