தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விக்ரம் – சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய பிதாமகன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.
இத்துடன் என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருக்கிறார் துரை.
மேலும் ரஜினியின் ‘பாபா’ படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி இருக்கிறார் வி.ஏ.துரை.
(அந்த சமயத்திலேயே தனக்கு ரூ.51 லட்சம் சம்பளமாக ரஜினி வழங்கியதாக தெரிவித்திருக்கிறார் விஏ. துரை)
கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.
இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
தயாரிப்பாளர் நிலை அறிந்து நடிகர் சூர்யா உடனடியாக ரூ 2 லட்சம் வழங்கினார். மேலும் நடிகர் கருணாஸ் ரூ 50,000 கொடுத்து உதவியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் துரை உடல்நலம் குறித்து அவரிடமே விசாரித்த ரஜினி.. “நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.
‘ஜெயிலர்’ சூட்டிங் முடிந்த உடனே உங்களை வந்து சந்திக்கிறேன் என சொல்லி ஆறுதல் தெரிவித்தாராம்.
இத்துடன் வி.ஏ.துரைக்கு ரஜினி உதவிக்கரம் நீட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
Rajinikanth extends support to producer VA Durai
VA Durai worked as an executive producer in Rajinikanth’s ‘Baba’, and he was paid Rs 51 lakh for his work in the film.
He has also produced several films like ‘Ennama Kannu’, ‘Lootu’, ‘Pithamagan’ and ‘Gajendran’,