BREAKING முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

BREAKING முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)இன்று மே 17ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது கொரோனா நிவாரண நிதியாக ரூ 50 லட்சம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினிகாந்த் பேசியதாவது…

“தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும்.

இதை மக்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்”

என்று பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth donated Rs 50 lakhs to Corona Relief Fund

JUST IN ரஜினி & தனுஷ் படங்களில் நடித்த நிதீஷ் வீரா மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை..

JUST IN ரஜினி & தனுஷ் படங்களில் நடித்த நிதீஷ் வீரா மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran nitish veeraபுதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா.

இவரது சொந்த ஊர் மதுரை. அங்கேயே தன் பள்ளி & கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

பின்னர் சென்னை வந்திருக்கிறார்.

சில கட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமா சான்ஸ் வந்துள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவே வாய்ப்புகள் கூடியுள்ளது.

ரஜினியின் காலா மற்றும் தனுஷின் அசுரன் படங்கள் இவருக்கு சினிமாவில் மாபெரும் அடையாளத்தை கொடுத்துள்ளது.

நிஜத்தில் பாசிட்டிவ் எண்ணங்களை கொண்ட இவர் அசுரன் படத்தில் நெகவ்டிவ்வான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மே 17 நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் காலமானார். இவருக்கு தற்போது 45 வயதாகிறது.

இவருக்கு 8′ வயதிலும், 7′ வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் புது கார் வாங்கியிருக்கிறார் நிதிஷ்.

தனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து தன் காரை காட்டி அவர்களை காரில் ஏற்றி ஒரு ரவுண்ட் அடித்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nithish Veera passed away due to corona

ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ரெம்டெசிவர் மருந்துக்கு டிமாண்ட் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ரெம்டெசிவர் மருந்திற்காக பொதுமக்கள் நீண்ண்ண்ணட வரிசையில் காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையில் ஓரு சில இடங்களில் ரெம்டெசிவருக்காக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, ரெம்டெசிவரை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் 18 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.

அதைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt decides to sell Remdesivir directly to private hospitals

கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த திரைப்பிரபலங்கள் ஒரு பார்வை

கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த திரைப்பிரபலங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு தமிழக மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

திரையுலகினர் அளித்த நன்கொடை விவரம்…

நடிகர்கள் சிவகுமார் சூர்யா கார்த்தி குடும்பத்தினர் ரூ.1 கோடியை முதல்வரிடம் நேரடியாக நிதியளித்தனர்.

சௌந்தர்யா ரஜினியின் கணவர் குடும்பத்தினர் ரூ.1 கோடி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம்

நடிகர் உதயநிதி ரூ.25 லட்சம்

நடிகர் அஜித் ரூ.25 லட்சம்

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம்

இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம்

இயக்குனர் மோகன் ராஜா & நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் ரூ.10 லட்சம்

இயக்குனர் ஷங்கர் ரூ. 10 லட்சம்

ஆகியோர் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

Tamilnadu CM Corona Relief fund donation list

ஊரடங்கில் வெளியே வந்த நபர்.. அபராதம் விதித்த போலீசார்.. திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதல்வர்

ஊரடங்கில் வெளியே வந்த நபர்.. அபராதம் விதித்த போலீசார்.. திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக மருந்து வாங்க பைக்கில் திருவள்ளூருக்குச் சென்றார்.

செல்லும் வழியில் அவரை மறித்த போலீசார் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அந்த நபர் மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்தியுள்ளார்.

இதனால் மருந்து வாங்க பணமில்லாமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்

இந்த சம்பவத்தை அவர் முதலமைச்சருக்கு ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனைப்பார்த்த தமிழக முதல்வர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியுள்ளார்

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ளார் திருவள்ளூர் காவல் ஆய்வாளர்.

மேலும் அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார்.

TN Cm request Police to return the charged fine to poor man

மேற்கு வங்கத்தில் மே 31ஆம் வரை ஊரடங்கு..; டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் மே 31ஆம் வரை ஊரடங்கு..; டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா நாடெங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று மே 16 முதல் வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.

மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்படலாம்.

இவையனைத்தும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

தொழிற்சாலைகள் இயங்கத் தடை.

மேற்கு வங்கத்தை் தொடர்ந்து டெல்லியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியில் ஏற்கெனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பாதி்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஆனாலும் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அடுத்த வாரம் 23ம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இப்போது 4வது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

West Bengal and Delhi Government Covid 19 Lockdown updates

More Articles
Follows