‘உயிர் நண்பா வினோத் கண்ணா மிஸ் யூ…’ ரஜினிகாந்த் உருக்கம்

‘உயிர் நண்பா வினோத் கண்ணா மிஸ் யூ…’ ரஜினிகாந்த் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth-Vinod-Khannaபாலிவுட் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான வினோத் கண்ணா இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

அவரை இழந்துள்ள இந்திய திரையுலகம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தன் இரங்கலை சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Narendra Modi‏Verified account @narendramodi 7m7 minutes ago

Will always remember Vinod Khanna as a popular actor, dedicated leader & a wonderful human. Pained by his demise. My condolences.

இந்நிலையில் வினோத் கண்ணாவின் நெருங்கிய நண்பருமான ரஜினியும் தன் ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

என் உயிர் நண்பா உன்னை மிஸ் செய்கிறேன். உன் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அரசன் உள்ளிட்ட ஓரிரு படங்களில் ரஜினியும் வினோத் கண்ணாவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth‏Verified account @superstarrajini
My dear friend Vinod Khanna… will miss you, RIP. My heartfelt condolences to the family.

Rajinikanth condoles death of his dear friedn Vinod Khanna

arasan

சிம்புவின் ‘AAA’ படத்தின் பார்ட் 2 ரிலீஸ் தேதி

சிம்புவின் ‘AAA’ படத்தின் பார்ட் 2 ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu aaa movieஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் முதல் பாகத்தில் சிம்புவின் இரண்டு கேரக்டர்கள் இடம் பெறுகிறது.

மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்கள் கொண்ட படம் வருகிற ஜீன் மாதம் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளதாம்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

Simbus AAA sequel release will be on 2017 Christmas

வினோத் கண்ணா மறைவால் ‘பாகுபலி2’ காட்சிகள் ரத்து

வினோத் கண்ணா மறைவால் ‘பாகுபலி2’ காட்சிகள் ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vinodh kanna passed awayபிரபல நடிகரும் அரசியல்வாதியுமான வினோத் கண்ணா இன்று காலை மும்பையில் காலமானார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மும்மையில் நடைபெறவிருந்த பாகுபலி 2 படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

Baahubali 2 Premiere shows cancelled in Mumbai due to Veteran Actor Vinod Khanna death

அட்லி படத்தில் விஜய்-காஜல் அகர்வால் கேரக்டர் தகவல்கள்

அட்லி படத்தில் விஜய்-காஜல் அகர்வால் கேரக்டர் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Kajal Agarwalஅட்லி இயக்கத்தில் உருவாகும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதில் விஜய் 3 விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார் விஜய்.

1960ஆம் ஆண்டுகளில் நடைபெறும் கதையில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மருத்துவராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.

தற்போது வளர்ந்துவரும் படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் டாக்டர்களாக நடிக்கவிருக்கிறார்களாம்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

Vijay and Kajal Agarwal character updates in Atlee movie

தனுஷின் ஹாலிவுட் பட சூட்டிங் தகவல்கள்

தனுஷின் ஹாலிவுட் பட சூட்டிங் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir updatesகோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் தனுஷ், முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

ஆனால் இப்படத்தின் தகவல்கள் மட்டுமே வந்த நிலையில், இதன் சூட்டிங் குறித்த தகவல்கள் இல்லை.

இந்நிலையில், அதற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் வருகிற மே 14 முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பகிர் எனும் கேரக்டரை மையப்படுத்தியே இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ (ஆர்ட்டிஸ்ட் திரைப்படம்) முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir shooting updates

dhanush hollywood movie

புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் வினோத் கண்ணா காலமானார்

புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் வினோத் கண்ணா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actor Vinod Khanna passes away in Mumbaiபிரபல பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான வினோத் கன்னா இன்று 70 வயதில் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பாஜக எம்.பியான வினோத் கண்ணா, கடந்த 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.

கடந்த 1968-2013 ஆண்டு வரை சுமார் 141 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான மேரி அப்னே, மேரா கோன், மேரா தேஷ், கத்தார், ஜெயில் யாத்ரா, இமிதிஹான், இன்கார், குச் தாகே, அமர் அக்பர் அந்தோணி, ராஜ்புட், குத்ராத், கார்நமா உள்ளிட்ட படங்கள் பிரபலமானவை.

பா.ஜ.க கட்சியை சேர்ந்த வினோத் கன்னா, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர்.

வினோத் கன்னா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Bollywood Actor Vinod Khanna passes away in Mumbai

vinodh kanna passed away

More Articles
Follows