தனுஷ்-ரஞ்சித் இணையும் படத்தில் ‘கபாலி’ கெட்டப்பில் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய கபாலி மாபெரும் வெற்றிப் பெற்றதையடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்திலும் கபாலி பட கெட்டப் போல நரைத்த தாடியுடன் ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்காக அண்மைக்காலமாக நரைத்த தாடியுடன் காணப்படுகிறாராம் ரஜினிகாந்த்.

மலேசிய பிரதமருடன் சந்திப்பு, நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழா, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் இதுபோன்ற தாடியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்தநாளை தெறிக்க விட ரெடியாகும் தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி அஜித் தன் பிறந்தநாளை கொண்டாட்டுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தற்போதே அஜித் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

சில இடங்களில் இலவச நோட்டு புக்குகள், அன்னதானம் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் தியேட்டர்களும் தயாராகி வருகின்றன.

அன்றைய தினத்தில், அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான வீரம், ஆரம்பம், மங்காத்தா, வேதாளம், தீனா ஆகிய படங்களை சிறப்பு காட்சிகளாக திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

கடந்த ஆண்டும் பல திரையரங்குகளில் அஜித்தின் படங்கள் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய் ரசிகர்களை கவர ஏஆர். ரஹ்மான் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் ‘தளபதி 61’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற உள்ளதால், அதற்கான லொகேஷன் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் விஜய் நடனத்திற்கு ஏற்ப ஸ்பெஷலாக ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடலின் ட்யூனை கேட்ட படக்குழுவினர் குஷியாகி விட்டார்களாம்.

படக்குழுவினரே இவ்வளவு உற்சாகம் அடைந்தார்கள் என்றால், விஜய் ரசிகர்களுக்கு இப்பாடல் செம ஸ்பெஷல் பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘நடிகை நந்தினியின் நடத்தை சரியில்லை…’ கார்த்தி தாயார் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நந்தினி.

இவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஜிம் பயிற்சியாளர் கார்த்தியை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பிரிய, இவரது கணவர் கார்த்தி நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து நடிகையின் மாமியாரும், கார்த்தியின் அம்மாவுமான சாந்தி கூறியதாவது…

அவர்கள் இருவரும் பிரிய நந்தினியின் அப்பாதான் காரணம். எப்போது பணம் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எப்போதும் நண்பர்களுடன் சுற்ற வேண்டும் என்று சொல்வார் நந்தினி. கார்த்தி சொல்வதை கேட்க மாட்டார். அதான் அவன் இந்த முடிவை எடுத்துவிட்டான்.” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் கார்த்தி அம்மா.

அஸ்வின் தாத்தாவை தோற்கடித்த பவர் பாண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், சிம்பு ஆகிய இருவரும் நட்போடு இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் படங்களை போட்டியாகவே பார்க்கின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வின் தாத்தா டீசர் வெளியானது.

இது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 3.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, சாதனை படைத்தது.

இதனை மிஞ்சும் வகையில் தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலர் 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இளையராஜாவுக்கு இந்திய சினிமா சார்பில் பாராட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது, வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது , இளையராஜா அவர்களோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதை ஒரு Tributeட்டாக நடத்தவுள்ளோம்.

இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது,

இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும். இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும்.

இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார்.

நாம் சிரிக்கின்றபோதிலும் , நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்க்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் பேசியது :- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழா வருகிற வியாழன் அன்று மாலை 6மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து நடைபெறும் இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இவர்களுடன் துணை தலைவர் பிரகாஷ்ராஜ் , கௌரவ செயலாளர் K.E.ஞானவேல்ராஜா செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன் , எம். கபார் உடன் இருந்தார்கள்.

More Articles
Follows