யாருக்கும் ஆதரவில்லை; தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டு : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் வழக்கம்போல தன் அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவித்துள்ளர்.

அதில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினியின் கையெழுத்து இடப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது.

மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டங்களை வைத்திருக்கும் கட்சிக்கு சிந்தித்து வாக்களியுங்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth announced not to contest in Parliament election

காதலர்களை கவர்ந்த ‘காத்து வாக்குல ஒரு காதல்’ பட டீசர்; யோகிபாபு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.

காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு. அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.

சீரடி சாய்பாபா வழங்கும் எஸ். பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி. நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார்.

மற்றும் தெறி வில்லன் சாய்தீனா , கல்லூரி வினோத் , ஆதித்யா கதிர் , லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ. வெங்கடேஷ், எஸ். எஸ். குமரன் படங்களின் படத்தொகுப்பாளர்.
இசை ஜுபின். இவர் பழைய ‘வண்ணாரப்பேட்டை’, ‘விண்மீன்கள்’ படங்களின் இசையமைப்பாளர். பப்ளிசிட்டி டிசைன் ரெட் லைன்.

படம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும் போது , ” படம் பார்த்து விட்டு இப்படி ஒரு காதலி கிடைக்கவில்லையே என ஆண்களும் இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அளவுக்கான காதல் கதை.

காதலின் மகத்துவம் கூறும் இந்தப் டத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா , விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது. ” என்கிறார்.

படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Actor Yogi babu praises Kaathu Vaakula oru Kadhal movie teaser

 

32 விருதுகளை குவித்த டு லெட் படமும் கமர்ஷியல் படம்தான் : செழியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார்.

ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட் ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் செழியன்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது.. நடுத்தர மக்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘ டு லெட் ’ படத்தின் மையக்கரு.

பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது.. அவ்வளவுதான்.. அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம்.

பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது. மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.. இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை.. ஒருவேளை ‘ டு லெட் ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும்போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.

விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்பு தானே என ஒதுக்கிவிட தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி..

ஆம்.. இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

அதேசமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும் அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே..
.
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும்.. அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார்.. அது எப்படி என்றால் இப்படித்தான்.. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது விருது பெறுவது இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தை தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன

சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப்படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகை கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன.. இந்த வணிகம் இங்கே பலருக்கு தெரியவே இல்லை.

இந்த படத்தை தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை.. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தை தயாரித்தார்.

உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும்போதுதான் அதை இன்னும் மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன்.. அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் செழியன்.

இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

32 Award winner To let movie is also commercial movie says director Chezhiyan

டிஆர் முன்னிலையில் சிம்பு தம்பி குறளரசன் இஸ்லாமியர் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவரும் அரசியல் கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர்-உஷா தம்பதியருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இதில் சிம்பு என்ற எஸ்டிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

அவரின் இளைய மகள் குறளரசன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்த இது நம்ம ஆளு பட மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இடையில் சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இந்நிலையில், டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கெனவே டி ராஜேந்தர் இஸ்லாம் மதம் மீது அதிக பற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் முஸ்லிம் மதத்துக்கு மாறி அந்த மத பெண்ணை மணந்து கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Simbus brother Kuralarasan converts to Islam in Presence of TR

ஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

வெகு நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பிலேயே இருந்தது.

அண்மையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்ற நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பட்டது.

தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் உடன் மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

Dhanushs Enai Noki Paayum Thota censored with UA certificate

வன்முறையை மன்னிக்க முடியாது; முடிவு கட்டும் நேரமிது.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் புலவாமா பகுதி உள்ளது.

இங்கு 2,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு மோதினர்.

இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அகமது என்ற 23 வயது தீவிரவாதி நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பொறுத்தது போதும்…

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.’’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack

More Articles
Follows