ரஜினிக்கும் கமலுக்கும் இதில் கூட இத்தனை ஒற்றுமையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரு துருவங்களாக கமல், ரஜினி இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்து சினிமாவில் 2 தலைமுறைகள் வந்துவிட்ட போதிலும் இன்றுவரை இவர்களின் மார்கெட்டுக்கு மவுசு குறையவில்லை.

சினிமாவைத் தாண்டி இருவருக்கும் நல்ல நட்பு புரிதல் உள்ளது.

எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க முடியாது என்னுமளவுக்கு இவர்களிடையே பல ஒற்றுமைகளை கூறலாம்.

தற்போது இருவரும் தமிழக மக்களின் நலனை பேணிக் காக்க அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

கமல் தன் கட்சியை அறிவித்து விட்டார். ரஜினி விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இந்த ஒற்றுமைகளை தாண்டி இருவரிடையே தற்போது மற்றொரு ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் காலா மற்றும் 2.ஓ படங்கள் திரைக்கு வரவுள்ளன.

அதுபோல் கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவர்கள் இருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தபின் இருவரும் ஒவ்வொரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கிறது.

அதுபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இசையமைப்பாளர், டெக்னீஷியன்கள் மற்றும் நாயகி பெயர்களை இதுவரை இவர்கள் இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணைந்த 3வது காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, இமான் இசையமைக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

வடசென்னை பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

தற்போது 3வது காமெடியனாக ரோபோ சங்கரும் இணைந்திருக்கிறாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மார்ச் 5ல் பர்ஸ்ட் (லுக்) புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5ம் தேதி வெளியிட இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா முடிவு செய்துள்ளது.

அதனையடுத்து மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் ஒரு பாடலை வெளியிடவுள்ளனர்.

ஸ்ரீதேவி மரணத்தால் கதறியழும் மகள் ஜான்வி; ஆறுதல் சொன்ன ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு துபாய் நாட்டில் மரணம் அடைந்தார் நடிகை ஸ்ரீதேவி.

மரணம் அடைந்து 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் துக்கம் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுது கொண்டே இருக்கிறாராம் இவரது மகள் ஜான்வி.

கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் கூடியுள்ளனர்.

போனிகபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் வீட்டில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தங்கியுள்ளார்.

இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் அங்கு சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் மும்பை சென்று ஓட்டலில் தங்கி உள்ளனர்.

அவர்கள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறியுள்னர்.

மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கமலின் முன்னாள் மனைவி சரிகா, மகள்கள் சுருதிஹாசன், அக்சரா ஆகியோரும் ஜான்விக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பாடகர்கள் சித்ரா-உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்த த்ரயா போஸ்ட் ப்ரோடக்க்ஷன் ஸ்டூடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் ஸ்டூடியோ. முகப்பேரில் டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங், அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் உதயமாகியுள்ளது த்ரயா ஸ்டூடியோ.

ஜீலியும் நான்கு பேரும் படத்தின் இசையமைப்பாளர் ” ரகு சவன் குமார் ” சினிமா மீதான காதலால் ஒலியை துல்லித்தன்மையுடன் உருவாக்க இந்த ஸ்டூடியோவை நிர்மாணித்திருக்கிறார்.

இங்கு பயன்படுத்தபடும் கருவிகள் மிகப்பெரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தன் கனவு ஸ்டூயோவை உருவாக்கியிருக்கிறார்.

ஒலி சம்மந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங் , மிக்‌ஷிங், மாஸ்டரிங் போன்ற எல்லா போஸ்ட் புரடக்‌ஷனஸ் வேலைகளுக்கு வெளியே எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்றவாறு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இங்கே மிக்ககுறைந்த பட்ஜெட்டில் மிக நவீனமான தரமான போஸ்ட்புரடக்‌ஷன் வேலைகளை செய்து முடிக்க முடியும்.கடந்த ஜனவரி மாதம் பாடகி சித்ரா, உண்னிகிருஷ்னன் மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தனர்.

மூவரும் இந்த ஸ்டூடியோ தனித்தனமையுடம் மிகுந்த நவீனமாக தரமுடன் இருப்பதாக பாரட்டினர். சென்னை முகப்பேரில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவில் பல படங்களின் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்டூடியோவில் பெரிய நிறுவனக்களின் ஸ்டுடியோ போல் லைவ் ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது.

ஒரே நேரத்தில் 12 வயலின்கள் இணந்து வாசிப்பதற்கான இடம் இங்கு அமைந்துள்ளது.

மேலும் சென்னையிலேயே மிகத்துல்லியமான சவுண்டை உருவாக்கும் உபகரணங்கள் இங்கு உள்ளது.

இங்கு திரைப்பட வேலைகளை மேற்கொண்டவர்கள் இந்த ஸ்டூடியோவின் ஒலித்திறனை வியந்து பாராட்டினர்.

சவுண்டுக்கு எனத்தனியே ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கும் ஒரே ஸ்டூடியோவான த்ரயா ஸ்டூடியோ அமைந்துள்ளது.

வெகு குறைந்த காலத்தில் திரைப்பட தொழிநுட்ப கலைஞர்களின் நற்பெயர் பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ இப்போது பல படங்களுக்கு ஒலி வேலைகளை செய்து வருகிறது.

Thraya Digital audio recording studio situated in Mogappair Chennai

 

பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தார்.

ஆனால் அவை சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்தார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 25 ஆண்டுகளுக்கு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ல் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை முடித்துவிட்டு இப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2

More Articles
Follows