நீங்க நடிகர் சங்கத் தலைவரானால் நல்லாயிருக்கும்.. பாக்யராஜீக்கு ரஜினி வாழ்த்து

நீங்க நடிகர் சங்கத் தலைவரானால் நல்லாயிருக்கும்.. பாக்யராஜீக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini wishes Bhagyaraj and his Swamy Sangaradass team in Nadigar Sangam electionதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார்.

மேலும் தேர்தல் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். விஷால் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கார்த்தி பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

இவர்கள் அணிக்கு ’சுமாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயரிட்டுள்ளனர்.

அவர் அணியில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ்…

பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை.

ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன்.

நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார்.” என பாக்யராஜ் தெரிவித்தார்.

Rajini wishes Bhagyaraj and his Swamy Sangaradass team in Nadigar Sangam election

மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல் வாழ்த்து

மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal wishes Nassar and Pandavar Ani for Nadigar Sangam Electionsநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் M. நாசர் பேட்டி.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் M. நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் Si.கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.

” இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம்.இந்தமுறை வேறொரு களமாக இருக்கிறது.

அதை சந்திக்கவேண்டியது கடமை.நாங்கள் கடந்த 3 ஆண்டு காலம் செய்த பணிகள் சாட்சியாக நிற்கிறது.அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.”

தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு “அரசியல் தலையீடு என்பது அறவே கிடையாது.

இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம்.

அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி நான் எப்போதும் நம்புவதும் சரி இந்த அமைப்பு எந்த ஒரு பாகுப்பாடுமின்றி செயல்படும்.

மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ, எந்த ஒரு பாகுப்பாடும் இல்லை.

நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை இதற்க்கு தான் முன்னுரிமை.அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்கு தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை.” என்றார்.

Kamal wishes Nassar and Pandavar Ani for Nadigar Sangam Elections

சிகரெட் வேண்டாம்; மாம்பழம் சாப்பிடுங்க… சந்தானம் அடித்த ‘டகால்டி’

சிகரெட் வேண்டாம்; மாம்பழம் சாப்பிடுங்க… சந்தானம் அடித்த ‘டகால்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dagaalty first look isse Santhanam promises will not promote smokingகாமெடியனாக வளர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

இனிமே இப்படித்தான் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அவரின் அடுத்த படமான ‘டகால்டி’ பட போஸ்டர் வெளியானது.

அந்த பட போஸ்டரில் சந்தானம் தம் அடிப்பது இருந்தது.

இப்பட போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்தன.

இதனையடுத்து சிகரெட்டுக்கு பதிலாக சந்தானம் மாம்பழம் சாப்பிடுவது போல் போஸ்டர் வெளியானது.

இதுகுறித்து சந்தானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“டகால்டி’ முதல் பார்வை போஸ்டர் கவனக்குறைவாக பதிவேற்றப்பட்டது. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகை பிடிப்பதை அது ஊக்குவிப்பதாக இருந்தது என்பதை உணர்கிறேன்.

என்னுடைய வருங்காலப் படங்களில் அப்படிப்பட்ட போஸ்டர்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Dagaalty first look isse Santhanam promises will not promote smoking

பிறந்த நாளில் தளபதி 63 பர்ஸ்ட் லுக் வேண்டாம்..; விஜய் உத்தரவு..?

பிறந்த நாளில் தளபதி 63 பர்ஸ்ட் லுக் வேண்டாம்..; விஜய் உத்தரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 63 first look poster release preponedதளபதி 63 படத்திற்காக விஜய்யுடன் அட்லி, ஏஆர். ரஹ்மான் மற்றும் ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், சௌந்தர் ராஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்பட சூட்டிங் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மீனம்பாக்கம் பின்னி மில்லில் போடப்பட்ட செட்டிலும், இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்ட கால்பந்தாட்ட மைதானம் செட்டிலும் நடைபெற்றன.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 22-ஆம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாளுக்கு முன்னதாக ஜூன் 18 அன்றே வெளியிட இருப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன.

ஒருவேளை இது விஜய்யின் உத்தரவாக இருக்குமோ?

Thalapathy 63 first look poster release preponed

சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்

சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது, இது அவருக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு தருணமாகவும் அமைந்தது.

இது குறித்து இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, “சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த ரோடுகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட காமிராக்களைப் பயன்படுத்தி முழு காட்சியை படம் பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஒரு உண்மையான மோதல் என்று நினைத்த மக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்து விட்டார்கள். நாங்கள் சில விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டு, எங்கள் வேலைக்குத் திரும்புவதற்கு முன்பு, சசிகுமார் சாரை அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினர். இது ஒரு சாதாரண வரவேற்பாக இல்லாமல், ஒரு பெரும் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டனர். உண்மையில், சசிகுமார் சார், தனது சொந்த மாநில எல்லைகளுக்கு அப்பால் தனக்கு இந்த அளவு அங்கீகாரம் கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, அதனால் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை கொண்டிருந்தார். அவரால் சில நிமிடங்களுக்கு பேச முடியவில்லை. இத்தகைய அன்பும் பாசமும் தான் எங்களை போன்ற நடிகர்களுக்கு எப்பொழுதும் ‘உத்வேகம்’ தரக்கூடியவை, அவர்களுக்காக மிகச்சிறந்த நடிப்பையும் படங்களையும் தர வேண்டும் என சசிகுமார் சார் கூறினார்” என்றார்.

மும்பையில் 15 நாட்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருக்கும் படக்குழு, ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்திருக்கிறது. “சலீம்” திரைப்படத்தில் என்.வி.நிர்மல்குமாருடன் பணிபுரிந்த கணேஷ் சந்திரா இந்த படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். ஆனந்த மணி (கலை), சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எம்.வெள்ளபாண்டியன் படத்தின் வெளியீட்டு தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.

More Articles
Follows