தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்பெல்லாம் மாதந்தோறும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த்.
அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு ரசிகர்களை சந்திப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் ரசிகர்களை ரஜினி ரகசியமாக சந்திக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இது தொடர்பான கடிதம் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மன்றத்திலுமிருந்து சுமார் 250 பேரை ரஜினி வரச் சொல்லியுள்ளதாக சொல்கின்றனர் ரசிகர்கள்.
கிட்டதட்ட 7000 பேர் இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் அவர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இச்சந்திப்பானது, ஏப்ரல் 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாம்.
இதில் நிச்சயம் அரசியல் தொடர்பான எந்த ஒரு விஷயமும் ஆலோசிக்கப்படாது எனவும் சொல்லப்படுகிறது.
Rajini will be having secret meeting with his fans in April 2nd week 2017