2.0 பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க ரஜினி தடை

Rajini warns his fans for selling 2pointO tickets at high priceஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ.550 கோடி பட்ஜெட்டில், 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

வருகிற நவ.,29ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது.

மிகப்பிரம்மாண்டமாக இப்படம் தயாராகியுள்ளதால் இப்படத்தின் டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில மன்ற நிர்வாகிகள் 2.0 பட டிக்கெட்டை அதிக விலைக்கு வெளியில் விற்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி, தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்க கூடாது.

ரசிகர்களிடமிருந்து தியேட்டர்கள், இருக்கைக்கு ஏற்ப நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்க கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini warns his fans for selling 2pointO tickets at high price

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post