2019 பொங்கல் தினத்தை குறிவைக்கும் ரஜினி-விஜய்சேதுபதி படம்

Rajini Vijay Sethupathi combo movie targeting 2019 Pongal release dateரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த வாரம் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் திரைக்கு வந்த நாளே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க டேராடூன் சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர்.

நாயகியாக நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

தற்போது இப்பட சூட்டிங் டேராடூன் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ஒரு மாதம் சூட்டிங்கை அங்கு முடித்துவிட்டு அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2019 பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Rajini Vijay Sethupathi combo movie targeting 2019 Pongal release date

Overall Rating : Not available

Latest Post