ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Bannersதிராவிடத்தில் திளைத்து வரும் தமிழக அரசியலில் முதன்முறையாக ஆன்மிக அரசியலை கொண்டு வரவுள்ளார் ரஜினிகாந்த்.

இனிமேதான் நீங்க ஆன்மிக அரசியலை பாப்பீங்க என அதிரடியாக அண்மையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இவரது ரசிகர்கள் ஆன்மீக பெரியாரே என்ற வாசகங்களை வடிவமைத்து பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் ரஜினிக்கும் பெரியார் கெட்டப் டிசைன் செய்துள்ளனர்.

கடவுள் பற்றிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிய பகுத்தறிவாளர் பெரியார்.

தற்போது அவரது உருவத்தில் இப்படியொரு போஸ்டரை ரசிகர்கள் அடித்துள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Banners

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rekka fame director Rathina Siva teams up with Simbuமுதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பாக சிம்புவை டைரக்டர் சந்தித்து பேசியதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு மொட்ட சிவா கெட்ட சிவா பட புகழ் அம்ரீஷ் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Rekka fame director Rathina Siva teams up with Simbu

முதல்வர் ரஜினி என்ற மந்திரச்சொல் அதிர்வலையை உண்டாக்கும் : தமிழருவி மணியன்

முதல்வர் ரஜினி என்ற மந்திரச்சொல் அதிர்வலையை உண்டாக்கும் : தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Rajini word will become magic word It will create Vibes says Tamilaruvi Manianவேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடைபெற்றது.

ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் தமிழருவி மணியன் பேசுகையில்…

“ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.

ரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்

காந்திக்கும் ரஜினிகாந்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.

தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார் ரஜினி.
ரஜினி ரசிகர்களான உங்களை, இப்போது மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார்.

நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.

காந்திக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? உடனே இதை சிலர் ஏளனம் பேசுவார்கள். ஏறுகிற மேடைக்கு ஏற்றார்போல் கச்சேரி வாசிக்கும் கலைஞன் நானில்லை. என் நெஞ்சில் பட்டதை நேர்ப்படப் பேசுவதுதான் வழக்கம்.

இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒரு செப்புக்காசைக் கூட அறத்துக்கு மாறாக நான் பெற்றவனுமில்லை, நெறிக்கு மாறாக நான் வாழ்ந்தவனும் இல்லை. ஆகவே மனம் கனிந்து சொல்கிறேன்.

ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும், அன்பு செலுத்தும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த்.

உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன்.

ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது. ரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும்.

ரஜினிகாந்த்தை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போன்ற பல. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறேன்.

என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.

மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: “ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,” என்றார்.

இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது ஆறு. எவ்வளவு சுத்தமான தண்ணீராக இருந்தாலும், அது ஓரிடத்தில் தங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும். எனவே மனிதர்கள் தேங்கிவிடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும்

ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும்.

ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்.

அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்.

ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும்.

ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும்.

அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும். தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் ‘ரஜினிகாந்த் முதல்வர்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.

அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.” என்றார்.

CM Rajini word will become magic word It will create Vibes says Tamilaruvi Manian

rajini fans meeting jeeva

காலா உடன் களம் காண காத்திருக்கும் 22 சூப்பர் ஹீரோக்கள்

காலா உடன் களம் காண காத்திருக்கும் 22 சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala to clash with 22 heros of Avengers Infinity Warரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27ல் வெளியாகவுள்ளது. இந்தியளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என்ற ஹாலிவுட் திரைப்படமும் இந்த படத்துடன் மோத உள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம்.

மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு.

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.

ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு (தாநோஸ்) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இங்கே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளமே உள்ளது

ராபர்ட் டவுனி ஜூனியர் டோனி ஸ்டார்க் / ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

க்ரிஸ் ஹேம்ஸ்வார்த் தார் என்ற கதாபாத்திரத்திலும் மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர் / ஹல்க் கதாபாத்திரத்திலும் க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் ரோஜெர்ஸ் கதாபாத்திரத்திலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா / ப்ளாக் விடோவ் கதாபாத்திரத்திலும் தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர் / ஸ்பைடர் மேனாகவும்
சாட்விக் போஸ்மன் T ‘சல்லா / ப்ளாக் பாந்தராகவும் பவுல் பேட்டனி விசனாகவும் எலிசபத் ஒல்சென் வண்டா / ஸ்கார்லெட் விடசாகவும்
செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ் / வைட் வொல்பாகவும்
டாம் ஹிட்டில்சன் லோகியாகவும் நடித்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் மார்வல் உலகில் எல்லோரும் ஏற்று நடித்த தங்களுடைய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்கள்.

படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூசோ சகோதர்கள் – அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச்.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) வெளியாகிறது.

Kaala to clash with 22 heros of Avengers Infinity War

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் யூடியூப் கலைஞர்கள்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் யூடியூப் கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Odavum Mudiyathu Oliyavum Mudiyathu shoot completed within 45 daysதரமான கதை களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர்.

அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி.

இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் – ‘எருமசாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.

‘மெட்ராஸ் சென்ட்ரல்’ புகழ் கோபி – சுதாகர், ‘எரும சாணி’ புகழ் விஜய் – ஹரிஜா, ‘புட் சட்னி’ புகழ் அகஸ்டின், ‘டெம்பில் மங்கிஸ்’ புகழ் ஷா ரா – அப்துல் மற்றும் ‘BEHINDWOODS’ புகழ் வி ஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் பணியாற்றும் நடிகர் – நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் இருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா J பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் – கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

“அறுபது நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்து இருக்கிறார், அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட். அவர் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதிப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.

எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர் – நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

மேலும், ‘யூடியூப்’ சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை, ஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் ‘கிளாப்போர்ட்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது.

அதுமட்டுமின்றி, ஏராளமான இளம் ரசிகர்களை தங்களின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை காணொளிகள் மூலம் கவர்ந்து வரும் ‘எருமசாணி’ ஜோடி விஜய் – ஹரிஜா, கோபி – சுதாகர், அகஸ்டின், ஷா ரா, அப்துல் மற்றும் வி ஜே ஆஷிக் ஆகியோரை, முதல் முறையாக ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் காண உள்ளனர்.

எங்கள் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கோடை விருந்தாக வருகின்ற மே மாதம் எங்கள் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று மனநிறைவோடு கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனருமான வி சத்தியமூர்த்தி.

Odavum Mudiyathu Oliyavum Mudiyathu shoot completed within 45 days

omom sivakarthikeyan

ஸ்டிரைக் இல்லாம பிரச்னையை சரி செய்ய முடியாதா விஷால்..? அருள்நிதி கேள்வி

ஸ்டிரைக் இல்லாம பிரச்னையை சரி செய்ய முடியாதா விஷால்..? அருள்நிதி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Without Strike Why dont you solve the problems Arulnithi question to Vishalக்யூப் டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாகவேண்டும் என பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் மேற்கொண்டு வருகிறது.

இதனால் கடந்த 3 வாரங்களாக எந்த ஒரு புதிய தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்கள் பழைய ஹிட்டான படங்களையும், மற்ற மொழி படங்களையும் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அருள்நிதி விஷாலிடம் சரமாரியாக பல கேள்விகள் கேட்டுள்ளார்.

“ஒரு நல்ல காரியத்திற்காக தயாரிப்பாளர் சங்கம் போராடுவது நல்லதுதான். கேள்வி கேட்பது ஈசி என்பது எனக்கு தெரியும்.

ஆனால் வேலைநிறுத்தம் செய்யாமலேயே நீங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்திருக்கலாமே.

இதற்காக தான் உங்களை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்..? ” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

arulnithi tamilarasu‏ @arulnithitamil
It’s good that the producer council is fighting for the well being of all the producers .but it’s high time this strike gets over.i know questioning is easy .but u can try to handle this without the strike also.thats y ur elected.

Without Strike Why dont you solve the problems Arulnithi question to Vishal

More Articles
Follows