1500 நலிந்த கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம்

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.

மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மக்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் தின வருமானத்தை நம்பியுய்ய ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை போல சினிமாவை நம்பி வாழும் பல தொழிலாளிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ் தினம் தினம் ஒரு அறிவிப்பாக பல லட்சங்களை நிவாரண நிதியாக கொடுத்து வருகிறார்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSIகக்கு சில வாரங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் உள்ள உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் என 1500 பேரின் குடும்பத்தினருக்கு (24 டன் அத்தியாவசிய) அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக கொடுத்துள்ளார்.

ரஜினியின் ரசிகர்களும் தமிழ்நாடு முழுவதும் தங்களால் இயன்ற வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors

Overall Rating : Not available

Latest Post