கொரோனா நிவாரணம் : 750 தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடந்த ஒரு மாதமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் செல்லும் நிலை உள்ளது.

இதனால் தினக்கூலிகள், வணிகர்கள் முதல் பலரும் தங்கள் வருமானத்தை இழந்து உள்ளனர்.

இவர்களை போல பெப்சி உள்ளிட்ட சினிமா சார்ந்த தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வசதியான நடிகர்கள், கலைஞர்கள் பலரும் உதவி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் வழங்கியிருந்தார்.

மேலும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல சங்கத்தினருக்கும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.

நலிவடைந்த 750 தயாரிப்பாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மே முதல் வாரத்தில் வழங்கவுள்ளார் ரஜினி.

இந்த தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் துணைத் தலைவர் கே. ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Rajini plans to help 750 producers in Corona Crisis

நடன கலைஞர்களின் பசியை போக்க முதல்வருக்கு மன்சூரலிகான் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வருக்கு நடிகர் மன்சூரலிகான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கினால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்று தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் போல, மேடை நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இவ்வாறு தனது கோரிக்கையில் நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

Mansoor Ali Khans request to TN CM for Stage Artists

விஜய்சேதுபதியுடன் கூட்டணி.; மீண்டும் இயக்குனராகும் (கி)ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பையனாக சினிமா ஆசையை வளர்த்து கொண்டர் ராமராஜன்.

பின்னர் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்.

சில ஆண்டுகளில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தை இயக்கி டைரக்டர் ஆனார்.

பின்னர் ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி மாபெரும் ஹிட்டானது.

அதன்பின் ராமராஜன் நடிப்பில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணி என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். எனவே கிராமத்து ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக உயர்ந்தார் கி-ராம ராஜா.

கிட்டதட்ட 45 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறாராம் ராமராஜன்.

அதன்பின்னர் மெல்ல மெல்ல அவரது மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர் அண்ணன், அப்பா, மாமா, வில்லன் கேரக்டர்கள் என பல வந்தாலும் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ண்ணட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் இயக்கத்தில் இறங்கவிருக்கிறாராம்.

நடிகர் விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் பெற்று விட்டாராம்.

எனவே கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மக்கள் செல்வன் மற்றும் கி-ராமராஜன் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Actor Ramarajan to direct Vijay Sethupathis next

சூர்யா போட்ட ரூட்டில் ‘லட்சுமி பாம்’ போடும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ’பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரிடையாக இணையத்தில் ரிலீஸ் செய்யவுள்ளார் அப்பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறப்பது தாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவை சூர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சூர்யா ரூட்டை பாலோ செயது நடிகர் லாரன்ஸ்ம் அவரின் படத்தை இணையத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ’லட்சுமி பாம்’ படத்தை தான் ஆன்லைனில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தற்போது எடிட்டிங், கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை வீட்டிலிருந்தே எடிட்டர்கள் செய்து வருவதால் வருகிற ஜூன் மாதம் பம் ரிலீசுக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது.

Akshay and Lawrences Laxmmi Bomb release Straight On Digital Platform

சுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜீன் அல்லது ஜீலைக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Soorarai Pottru release targets on 15th August 2020

சிம்புவுக்காக கேங்ஸ்ட்டர் கதையுடன் காத்திருக்கும் திரௌபதி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிச்சர்டு, ஷீலா நடிப்பில் உருவான ‘திரௌபதி’ படத்தை இயக்கியிருந்தார் மோகன். இந்த படம் வெளியாகும் முன்னரே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

எனவே எந்த விளம்பரமும் இல்லாமல் பல கோடிகளை அள்ளி வசூல் வேட்டையாடியது.

இந்த நிலையில் மோகனின் அடுத்த படத்தின் ஹீரோ? என்ற கேள்வி எழவே மீண்டும் ரிச்சட்டு நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சிம்புவின் கால்ஷீட் வைத்திருக்கும் ஒரு தயாரிப்பாளர் மோகனை தொடர்பு கொண்டு இயக்க கேட்டராம்.

மோகனும் சிம்புக்காக ஒரு கேங்க்ஸ்டர் கதையை ரெடி செய்துள்ளாராம்.

வடசென்னையை சார்ந்த மீனவ மக்களுக்கான கதையாம் அது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. சிம்பு என்ன சொல்கிறார் என பார்ப்போம்…?

Draupathi director Mohan waiting for Simbus Call Sheet

More Articles
Follows