கம்பத்தில் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா; சொந்த செலவில் உதவிகள் வழங்கிய நிர்வாகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கம்பம்: ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் திரளான பொதுமக்கள், மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இயக்குநரும் நடிகருமான ஈ ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அடுக்குப் பாத்திரங்கள், ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், மாணவ மாணவிகளுக்கு எழுதுப் பொருட்கள், நோட்டுகள், தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை மன்ற நிர்வாகிகளை வைத்து வழங்கச் செய்தார் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் பேசுகையில், “பணம், பதவி எதையும் எதிர்ப்பார்த்து நான் ரஜினிக்கு ரசிகனாகவில்லை.

எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன்.

அது ரஜினியிடம் கற்றுதுதான். நான் இன்னும் ரஜினியைச் சந்திக்கக் கூட இல்லை. அவரது கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. முப்பது ஆண்டுகளாகவே நான் இப்படித்தான்.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ரஜினி மன்றத்தினர் நல்ல கட்டமைப்பில் இருக்கிறார்கள்.

தேர்தலின்போது மற்ற கட்சிகளை விட வலுவான போட்டியாளர்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் இருப்பார்கள்,” என்றார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் ஜெய்புஷ்பராஜ், மாவட்ட இணை செயலாளர் பொன் சிவா, கம்பம் நகர செயலாளர் செந்தில், இணை செயலாளர் சரவணன் மற்றும் மற்றும் நகர நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்தினர்

விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ரஜினி இப்ராகிம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Rajini Makkal Mandram first function in Theni district Kambam

விஜய் படத்தில் அறிமுகமாவது என் பாக்கியம்… : ஜஸ்டின் பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவிக்கு இனிமையான melody பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே.

தொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகையல்ல.

பிண்ணனி இசை கோர்பிலும் சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் கூட அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.

” நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் “அர்ஜுன் ரெட்டி” புகழ் விஜய் தேவேர்கொண்டா.

இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.

இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ” மரோ பிரபஞ்சம்” ,என்ற குறும் படத்தில் பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது.

விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்க்கு ஒத்த, எஸ் ஜே சூர்யாவின் பெயர் இடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது.

மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ, இசை கலைஞனுக்கும் அப்படியே.

காற்றின் தேசம் எங்கும் செல்லும் காணமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

Music Composer Justin Prabakaran entering into Telugu Cinema

போராட்டத்தை அடக்கினால் அது மேலும் பரவும்..; கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் சினிமா படங்களைப் போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியையும் பரபரப்பாகவே வைத்துள்ளார் கமல்ஹாசன்.

தினம் ஒரு அறிவிப்பு, தினம் ஒரு சந்திப்பு, தினம் ஒரு ட்வீட், பத்திரிகையாளர் சந்திப்பு என அதிரடியாக இயங்கி வருகிறார்.

மும்பையில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்துவிட்டு தற்போது சென்னை வந்துவிட்டார்.

அதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.

அவர் பேசுகையில்,

உயிர், பயிர் காலம் சம்பந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது அடக்குமுறை. போராட்டத்தை அடக்கினாலும் அது மேலும் பரவும்.

ஆகவே இவ்விவகாரத்தில் பிரதமர், தமிழக கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு தான் நடக்கிறது என்றார்.

இது தொடர்பாக தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே”. என பதிவிட்டிருக்கிறார்.

Kamal reaction for TN Peoples protest and Police arrest in Cauvery Issue

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா; மம்மூட்டியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடக மாநிலத்தை சொந்த மாநிலமாக கொண்டிருந்தாலும் அனுஷ்காவுக்கு அமோக வரவேற்பு கொடுத்தது என்னமோ தெலுங்கு திரையுலகம்தான்.

தெலுங்கில் அசத்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் இதுவரை நேரடியான மலையாள படங்களில் நடித்தது இல்லை.

இந்நிலையில் விரைவில் தொடங்கவுள்ள ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

அதில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்ர்.

இப்படத்தை சரத் சந்திப் என்வர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து, ‘பரோல்’ என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka to romance with Mammootty in malayalam movie

விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டரை பாராட்டும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

இவர்களுடன் ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஆரண்யகாண்டம் பட புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

அந்த கேரக்டரில் சேதுபதியின் பர்பாமென்ஸ் பாராட்டிக் கொண்டே இருக்கிறாராம் சமந்தா.

Samantha praises Vijay Sethupathis Shilpa character in Super Deluxe

என்னை யாருமே பாராட்டல; இனி அதுதான் தொடரும்..; சிவகார்த்திகேயன் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலான ஹீரோக்கள் இளைஞராக சினிமாவில் அறிமுகம் ஆகும்போது பெண்களை கிண்டல் செய்வதும், தண்ணி அடிப்பதும் உள்ளிட்ட காட்சிகளில் அதிகம் நடித்திருப்பார்கள்.

பின்னர் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் உருவாகும்போது, பன்ச் டயலாக் பேசி, கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

இதே பாணியை தான் சிவகார்த்திகேயன் தன் படங்களில் செய்து வந்தார்.

ரெமோ படத்தில் வேறொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட நாயகி கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்க சொல்ல டார்ச்சர் கொடுப்பார்.

சிறுவர் சிறுமிகளை அதிகம் கவர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா? என கடுமையாக விமர்சித்தனர்.

அதன்பின்னர் வெளியான வேலைக்காரன் படத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் நம்முடைய உணவே விஷமாகிவிட்டது என எச்சரிக்கை செய்யும் வகையில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.

நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நான் சாதாரண சின்ன நடிகன்தான்.

அந்த காட்சியில் நடிக்க நடிக்க மாட்டேன், இப்படி அப்படி நடிக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியாது.

இயக்குனர்கள் சொன்னதை செய்தேன்.

வேலைக்காரன் படத்திற்கு பின் எனக்கு சமூக பொறுப்பு கூடியிருப்பதாக நம்புகிறேன்.

வேலைக்காரன் படத்தில் மது குடிக்கும் காட்சியோ, பெண்களை கிண்டல் செய்யும் காட்சியோ இடம் பெறவில்லை.

அதுபோன்ற பாடலும் இல்லை. ஆனால் அதை யாருமே பாராட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

இனி வரும் எனது படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது.

என்னை இயக்கும் டைரக்டர்களும் பொறுப்பை உணர்ந்து அதுமாதிரி காட்சிகளை வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyans new condition to his movie directors

More Articles
Follows