ரஜினி-கமல்-ராஜமௌலி-சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆந்திர அரசு விருது

ரஜினி-கமல்-ராஜமௌலி-சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆந்திர அரசு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Rajamouli Chiranjeevi selected for Andhra Govt awardஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி – சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோரின் பெயர்களில் திரைத் துறையினருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படாத நிலையில், தற்போது அந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளனர்.

அதாவது 2014, 2015 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை இன்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

விருதுப் பட்டியல்:
2014 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – கமல்ஹாசன்
பிஎன் ரெட்டி விருது – எஸ்எஸ் ராஜமௌலி
நாகிரெட்டி – சக்ரபாணி – நாராயண மூர்த்தி
ரகுபதி வெங்கய்யா – கிருஷ்ணம் ராஜு நடுவர்
சிறப்பு விருது – சித்தால அசோக் தேஜா

2015 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – கே ராகவேந்தர் ராவ்
பிஎன் ரெட்டி விருது – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
நாகிரெட்டி – சக்ரபாணி – கீரவாணி
ரகுபதி வெங்கய்யா – ஈஸ்வர்
நடுவர் சிறப்பு விருது – பிசி ரெட்டி

2016 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – ரஜினிகாந்த்
பிஎன் ரெட்டி விருது – போயபட்டி சீனிவாஸ்
நாகிரெட்டி – சக்ரபாணி – கேஎஸ் ராமராவ்
ரகுபதி வெங்கய்யா – சிரஞ்சீவி
நடுவர் சிறப்பு விருது – பரிச்சூரி பிரதர்ஸ்

Rajini Kamal Rajamouli Chiranjeevi selected for Andhra Govt award

வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..?

வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imsai Arasan 23rd Pulikesi shooting postponed due to Vadivelu costume issueசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், இளவரசு, மனோரமா உள்ளிட்டோர் நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை தற்போது ஷங்கர் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு இம்மை அரசன் 24ஆம் புலிகேசி என்று பெயரிட்டுள்ளனர்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதை அடுத்து பர்ஸ்ட் லுக் வெளியானது.

மேலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் நடைபெற்றது.

ஆனால் ஒரு வாரம் ஆன நிலையில், வடிவேலுவின் காஸ்ட்யூம் டிசைனர் மாற்றப்பட்டதால் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இதனால் வடிவேலுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Imsai Arasan 23rd Pulikesi shooting postponed due to Vadivelu costume issue

சிம்பு ஒருவர்தான் கைவிடாமல் இருந்தார்… பிரபல இசையமைப்பாளர்

சிம்பு ஒருவர்தான் கைவிடாமல் இருந்தார்… பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dharan kumar‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண்.

அதன்பின்னர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்த ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சிம்பு பற்றி இவர் கூறியுள்ளதாவது-..

“நான் இசையமைத்த என் முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர்.

அப்போது சிலர் உறுதுணையாக நின்றார்கள். அவர்களுக்கு நன்றி.

அதன்பின்னர் சிலர் என்னை விட்டு விலகி சென்றனர்.

ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பவர் எஸ்.டி.ஆர். மட்டுமே” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பாராட்டால் அகம் மகிழ்ந்த அறம் படக்குழுவினர்

ரஜினியின் பாராட்டால் அகம் மகிழ்ந்த அறம் படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aramm posterகோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள வெளியான படம் அறம்.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதில் இன்றைய அரசியல்வாதிகளின் அலட்சியத்தை அருமையாக சாடியிருந்தார் இயக்குனர்.

பல தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்ற இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துள்ளார்.

அதன்பின்னர் ‘அறம்’ திரைப்படம் தமிழில் மற்றதொரு சிறந்த படைப்பு என பாராட்டியுள்ளார்.

இதனால் அறம் படக்குழுவினர் அகம் மகிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்தியுடன் மீண்டும் வருவேன்: சிம்பு உறுதி

புதிய செய்தியுடன் மீண்டும் வருவேன்: சிம்பு உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will come with new announcement says STR aka Simbuசில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் சிம்பு.

தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் ஹாலிவுட் படம் மற்றும் மணிரத்னம் படம் என பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தன் ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தீங்க. அதுக்கு ரொம்ப நன்றி.

உங்ககிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு. அதான் இப்போ பேச தோனுச்சி.

உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இப்போ இருக்கிற ஹேர் ஸ்டைல் புது படத்தோட கெட்டப் இல்லை. ஆனா இது வேறொரு விஷயம் சீக்கிரம் சொல்றேன். மீண்டும் வருவேன். நம்புங்கள்!

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் சிம்பு பேசியுள்ளார்.

I will come with new announcement says STR aka Simbu

சமூக பிரச்சினைகளை பார்த்தால் கோபம் வருது: கடுப்பாகும் கார்த்தி

சமூக பிரச்சினைகளை பார்த்தால் கோபம் வருது: கடுப்பாகும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theeran597 newவினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது…

நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம்.

நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது.

அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக பணியாற்ற துவங்கியுள்ளார்.

முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம் தான் வரும் , பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கவும் முடிந்துள்ளது.

இதனாலேயே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுபடுத்தியுள்ளார்.

தீரன்-னில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும் போது எப்படி ரியாகட் செய்வாரோ அதே அளவு தான் தீரனும் இந்த படத்தில் ரீயாகட் செய்வார்.

இதை நான் சிறுத்தை படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது.

அதை தான் பல காட்சிகளில் தீரன்-னில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. தீரன்-னில் நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள்.

போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து , சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டி தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது.

இதை சொல்லும் போது சாதரணமாக இருக்கும் திரையில் பார்க்கும் போது உங்கள் வியக்கவைக்கும். இது 1995-2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும்.

அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம். நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம். அது தவறு.

நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாக தீரன் கதை நாம் சொல்கிறோம். தீரன்-னின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ் தான் இந்த படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு “ நான் மகான் அல்ல “ படத்தில் நான் செய்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும்.

என்னென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன். தீரன் வீட்டில் இருக்கும் போது “ நான் மகான் அல்ல “ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான்.

போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள பிட்னசையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குனாதீசியங்களை , உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம்.

இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்யே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படி தான் என்னுடைய தூரமும் இந்த படத்தில் இருக்கும்.

ராஜஸ்தான் மாதிரியான ஒரு flat land-ல் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்னுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும் அதனால் தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது.

அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான். நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும் போது எனக்கு கோபம் வரதான் செய்கிறது. சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் தீ குளித்து பெண் குழந்தையோடு இறந்த அந்த சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது.

இதை போன்ற சம்பவத்தை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோணும் என்றார் கார்த்தி.

Karthi speaks about Social issues and his reaction towards it

karthi theeran rakul

More Articles
Follows