2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறி பதவி கொடுத்த ரஜினி

2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறி பதவி கொடுத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini vijayஅண்மைக்காலமாக தமிழகத்தை அதிர்ச்சியடையும் செய்திகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் தன் கள்ளக்காதலுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் சம்பவமும் தமிழக மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியது.

தற்போது அபிராமி மற்றும் பிரியாணி கள்ளக்காதலன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளை இழந்து தவித்து வரும் அபிராமியின் கணவரும், குழந்தைகளின் தந்தையுமான விஜய்யை நடிகர் ரஜினிகாந்த், போயஸ் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

ரஜினியை பார்த்ததும் கதறி அழுதார் விஜய். அவரை ரஜினி ஆசுவாசப்படுத்தினார்.

இதனையடுத்து ரஜினி ரசிகரான விஜய்க்கு குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு முக்கிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.

நான்கு ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்

நான்கு ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதிரையுலகில் பன்முக திறமைக் கொண்ட தனுஷ், தனது இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராகவும் ஜொலித்தார்.

அதன்பின்னர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் பிஸியானார் தனுஷ்.

இதனிடையில் சில நாட்களாக தனுஷ், நெல்லை பகுதியில் முகாமிட்டு தனது அடுத்த பட இயக்கத்துக்கான லொகேஷன்களை பார்த்து வந்தார்.

இந்நிலையில், தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவரின் புதிய படத்தில் நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சான் ரோல்டன் இசையமைக்க மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஓரின சேர்க்கைக்கு ஆர்யா-சித்தார்த்-த்ரிஷா-கஸ்தூரி ஆதரவு

ஓரின சேர்க்கைக்கு ஆர்யா-சித்தார்த்-த்ரிஷா-கஸ்தூரி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kollywood celebsஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று தீர்ப்பு வழங்கினர்.

இந்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்புக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வரவேற்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னணி நடிகையான திரிஷா கூறியிருப்பதாவது, ஓரின சேர்க்கை சம்பந்தமான 377 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி கிடைத்துள்ளது. ஜெய் ஹோ.. என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் கூறியதாவது…

மீண்டும் எமது மக்களை பாதுகாத்துள்ள மதிப்புமிக்க உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த நாள். இந்த நாளுக்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்!

நடிகர் ஆர்யா கூறியதாவது…

எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவரவர் உரிமை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறு. மாற்றங்களை ஏற்கவேண்டும். இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழிதான்

நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது,

ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. காதலுக்கு கண்ணும் வயதும் சாதியும் இல்லை என்பதுபோல் பாலினம் இல்லை என்பது எனது கருத்து. மேலை நாடுகளில் இது வினோதமானது இல்லை. அன்போடு நெருங்கிய இருவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும்.

இருவர் விரும்பி செய்தால் அது குற்றம் இல்லை. விரும்பாமல் நடக்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்தான் குற்றம். ஓரின சேர்க்கையாளர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

வன்முறையோ சீர்கேடுகளோ வரப்போவதும் இல்லை. ஓரின சேர்க்கைக்கு எதிரான விக்டோரியா மகாராணி காலத்து பழமையான சட்டத்தை ரத்து செய்து பரந்த மனப்பான்மையை புகுத்தி உள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஓரின சேர்க்கை பாவமோ, குற்றமோ இல்லை. அன்பு இயற்கைக்கு முரணானது இல்லை. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொல்வதுதான் இயற்கைக்கு முரணானது.” என கூறியுள்ளார்.

#BIGNews இன்று மாலை சன் பிக்சர்ஸின் *ரஜினி-165* பட டைட்டில் அறிவிப்பு

#BIGNews இன்று மாலை சன் பிக்சர்ஸின் *ரஜினி-165* பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 165கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் 165 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா இருவரும் நடித்து வருகின்றனர்.

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

மேலும் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 7ல் மாலை 6 மணிக்கு இப்பட டைட்டில் & மோசன் போஸ்டரை வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

*டார்ச் லைட்* டீமுக்கு சென்சார் கொடுத்த டார்ச்சர்.; அப்துல்மஜீத் வேதனை

*டார்ச் லைட்* டீமுக்கு சென்சார் கொடுத்த டார்ச்சர்.; அப்துல்மஜீத் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director abdul majeedவிஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கியுள்ள படம் ‘டார்ச் லைட்’ .

இது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்கிற பரபரப்பு நிலவி வருகிறது.

‘டார்ச் லைட் ‘படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .

அப்போது படம் பற்றி நாயகி சதா பேசினார். அவர் பேசும் போது , ” நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது.

‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.

அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை. சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது.

மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள்.

காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.

அது தான் பிரச்சினை . என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என்பதில். ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள்.

ட்ரெய்லர், போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா ?. ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள்.

சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதைதான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை.

ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ, சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை. குடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள்.

இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை.

அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது.

அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.

ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.

மொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.” இவ்வாறு சதா பேசினார்.

இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன்.

ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார், அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார்.

அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.

படம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ரிவைஸிங் கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டுகள் கொடுத்தார்கள்.

சினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை. சென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள் இப்படம் செப்டம்பர் 7ல் வெளிவருகிறது.” என்றார்.

நிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய், ஒளிப்பதிவாளர் சக்திவேல், இசையமைப்பாளர் ஜேவி, படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்,

‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங்- மாரீஸ், கலை – சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப். தயாரிப்பு அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்

சதா, ரித்விகா, வித்தியாசமான நடிப்பில் புதுமுகம் வருண்உதய், தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா. இயக்குநர் ரங்கநாதன், சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ளனர்

எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயார்; *தொட்ரா* பட எம்.எஸ். குமார் சவால்

எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயார்; *தொட்ரா* பட எம்.எஸ். குமார் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor-MS-Kumar-speaks-about-his-debut-movie-Thodraடைரக்டர் பாண்டிராஜன் மகன் பிருத்வி, வீணா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் தொட்ரா.

இப்படத்தை ஜெ.எஸ்.அபூர்வா புராடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆஞ்சி ஒளிப்பதிவு செய்ய, உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை தர்மபுரியில் நடந்த ஒரு (ஜாதி) காதல் கலப்பு திருமண உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இப்படத்திற்கு சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து படத்தயாரிப்பாளரும் இப்பட வில்லன் நடிகருமான எம்.எஸ். குமார் கூறியதாவது…

ஒரு மாஸ் மீடியாவில் ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்ல வேண்டும் என நினைக்கிறோம்.

இதனால் எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிக்க தயார்.” என கூறினார்.

More Articles
Follows