தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.
ஆனாலும் ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு உடல்நிலை எப்போது சரியாகிறதோ அப்போது படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ளலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.
இதனிடையில் தன் உடல்நிலை காரணத்தால் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என கடிதம் வெளியிட்டு அறிவித்தார்.
விரைவில் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறாராம் ரஜினி.
மறுபுறம் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ பட சூட்டிங் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.
Rajini health and Annatthae movie shoot updates