கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு தமிழ்நாட்டை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

இதில் காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.

இதனையடுத்து கஜா புயலால் வீடுகளை இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என ரஜினி அறிவித்திருந்தார்.

அதன்படி அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன.

இந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ட்விட்டரில் #மக்கள்_நலனில்_ரஜினி மற்றும் #RMMinGajaAffectedAreas என்ற இரு ஹேஸ்டாக் உருவாக்கி ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Rajini gave 10 house to Gaja flood affected peoples

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.

400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் ‘சௌக்காரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌக்கார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் ‘வளையாபதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

சிவாஜி கணேசனுடன் நடித்த ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதேபோல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘பாமா விஜயம்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில் கணவனை இழந்த இளம்பெண்ணின் உணர்வுகளை தனது நடிப்பால் வெளிப்படுத்திய விதம் இவரைக் குறிப்பிடும் படி அமைந்தது.

தனி நாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், கிடைத்த வாய்ப்பை விடாமல் இரு நாயகிகளில் ஒருவர், குணசித்திர வேடங்கள் என்று எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தி விடுவார். முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.

திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் வானொலியிலும், 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருக்கிறார். பல நாடகங்களில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும், பல படங்களில் பல வேடங்கள் ஏற்றிருந்தாலும், ரஜினிகாந்துடன் ‘தில்லு முல்லு’ படத்தில் இரட்டை பாத்திரத்தில் நடித்து நகைச்சுவையும் தனக்கு பொருந்தும் என்று நிரூபித்தார். அப்படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவித்தது. அதுமட்டுமல்லாமல், இவரின் நகைச்சுவை படத்திற்கும் பெரும் பலம் சேர்த்தது.

இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்திய ‘சௌக்கார்’ ஜானகி ‘இரு கோடுகள்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது வென்றார். மேலும், ஃபிலிம்பேர் மற்றும் சைமா இரண்டிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, எம்.ஜி.ஆர். விருது, நந்தி விருது ஆகியவையும் வென்றிருக்கிறார். இவர் கலை சேவையை கௌரவித்து தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது.

திரைத்துறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார்’ ஜானகி தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும்.

தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:-

‘சௌக்கார்’ ஜானகி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அதேபோல் என் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார். நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

மிகப்பெரிய நடிகை 70 ஆண்டுகளாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீதிருந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய நினைவு திறன் தான். இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதி முடிவடைந்து விடும். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இயக்குநர் ஆர்க.ண்ணன் கூறினார்.

தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கான பதிவில், ‘உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் நடத்திய அஜினோமோட்டோ /MSG விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய

உணவு திட்டமான அக்ஷய பாத்தி ராவின் விளம்பரத் தூதுவர். மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள்

பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல்

ஆனது.

இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ(MSG – MONOSODIUM GLUTAMATE) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு

கலந்துரையாடல் நடத்தினார்.

“MSG விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளார் எனினும் , இது குறித்து அதிகாரபூர்வமான கருத்துகள்

இன்றுவரை வெளிவரவில்லை. FDA அஜினமோட்டோவை பொதுவாக அனுமதித்தாலும் அஜினமோட்டோ

உள்ள உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக உபயோகித்தால் அடிவயிற்றில் பிரச்சனைகள், தைரொய்ட்

செயல்பாட்டில் பிரச்சனைகள் ஹார்மோன் சம நிலையற்ற நிலை, சாப்பாடு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள்

வர வாய்ப்பு இருக்கிறது .குழந்தைகளும் , கர்பிணி பெண்களும் அஜினமோட்டோ உள்ள உணவுகளை

அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”.

உலக அமைதிக்காக ஜேம்ஸ் கேமரூனுடன் இணையும் தமிழ் பெண் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையை ஒரு கடல் என்று சொல்வார்கள்.. ஆனால் ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என இசைக்கடலில் முங்கி முத்தெடுத்து பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.ஜனனி.

கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார் என்றால் இதைவிட மிகப்பெரிய சாதனை வேறு ஏதும் இருக்க முடியாது.

அதேபோல இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைமாமணி விருது என இந்திய விருதுகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான இந்த எஸ்.ஜே.ஜனனி இசைத்துறையில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறி இவ்வளவு சாதனைகளை செய்துள்ளார் என்பதுதான் இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்.

சிறுவயதிலேயே இவர் உருவாக்கிய பூங்காற்று என்கிற ஆல்பத்தில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பது இன்னுமொரு ஆச்சரியம் இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அதுமட்டுமல்ல இவரே இசையமைத்து பாடிய, புதிய உலகம் மலரட்டுமே என்கிற பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் “க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்” (Global Peace Song Awards) அமைப்பு “உலக அமைதிப் பாடல் விருதினை வழங்கியுள்ளது.

இந்தியாவில் அதில் தமிழகத்திலிருந்து சென்ற ஒரு தமிழ் பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது மிகப் பெருமையான விஷயம்..

அதுமட்டுமல்ல கலிபோர்னியாவில் உள்ள “ப்ராஜக்ட பீஸ் ஆன் எர்த்” (Project Peace On Earth) என்கிற அமைப்பு இவரை உலக அமைதி இசை தூதுவர்களில் ஒருவராகவும் அந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் நியமித்துள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்கள் இடம் பெற்றுள்ள அந்த குழுவில் இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள ஒரே நபர், அதிலும் ஒரு பெண் உறுப்பினர் என்கிற பெருமையும் தமிழகத்தை சேர்ந்த ஜனனிக்கு கிடைத்துள்ளது.

மேலும் பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழக மாணவியான இவருக்கு தற்போது விருது பெற்றுத்தந்துள்ள ‘புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற இந்தப்பாடல் பிரம்மா குமாரிகள் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்கு பெற்றன. அதில் முதல் பத்து இடத்தில் நாமினேட் செய்யப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் இந்த பாடல் இறுதிப்போட்டியிலும் தேர்வாகி இந்த விருதை பெற்றுள்ளது..

இதையடுத்து எஸ்.ஜே.ஜனனியை கௌரவிக்கும் விதமாக பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம் அமைப்பின் சார்பாக வரும் அக்டோபர் 20ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர்.. சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

நிறைய விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ள ஜனனி, கடந்த டிசம்பரில் வெளியான பிரபா என்கிற படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.. மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா கடைசியாக பாடல் பாடியது இந்த படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த ஆல்பத்தில் உள்ள மன்னன் இமயமலை எங்கள் மலையே என்கிற பாடலை கேட்டுவிட்டுத்தான் இவருக்கு பிரபா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்ததாம்.

“ஐந்து வயதில் இருந்தே எல்லாவிதமான மேடை கச்சேரிகளும் செய்து வருவதால், அனைத்து விதமான பாடல்களுடனும் இசையுடனும் பயணித்து வருவதாலும் சினிமாவில் இசை அமைப்பதற்கு எனக்கு எந்த வித சிரமமும் ஏற்படவில்லை.. அதுமட்டுமல்ல எனது குரு பாலமுரளிகிருஷ்ணா எனக்கு நிறையவே ஊக்கம் தந்தார்” என்கிறார் எஸ்.ஜே.ஜனனி.

மேலும் இஅவரது மாமா சங்கர் கணேஷ் இவரது ஒவ்வொரு முயற்சியிலும் இவரை உற்சாகப்படுத்தி பின்னணியில் மிகப்பெரிய தூணாக இருந்து வருகிறார். இதையடுத்து சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தாலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இசையமைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் எஸ்.ஜே.ஜனனி.

Music Composer SJ Janani team up with James Cameron for World Peace

More Articles
Follows