தவறு செய்பவர்களை களையெடுக்க ரஜினிகாந்த் அமைத்த டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என அதிரடியாக செயல்பட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

எனவே தற்போது மாவட்டம் மற்றும் கிளை வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார் அவர்.

இதுவரை அமைக்கப்பட்ட குழுவினர் பற்றி பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதனால் தவறான நபர்கள், தவறு செய்கிறவர்களை பற்றி விசாரித்து களையெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த குழுவில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்தராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புகார்கள் மற்றும் கருத்துக்களை இந்த குழுவினரிடம் மன்றத்தினர் தெரிவிக்கலாம்.

இந்த குழு மாதம் ஒரு முறை கூடி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini forms 6 member disciplinary panel for his Rajini Makkal Mandram

ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் 3 ஹீரோயின்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘செம’ படம் இந்த மே மாதம் 25ஆம்ட தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அவரது நடிப்பில் ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களை அடுத்து ஏஏஏ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

இப்படத்தை ஷங்கரின் 2.0 பாணியில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருகின்றனர்.

இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். இவர் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மற்ற இரண்டு முக்கிய கேரக்டர்களில் சோனியா அகர்வாலும்,
சஞ்சிதா ஷெட்டியும் இணைந்துள்ளனர்.

3 heroines teams up with GV Prakash and Adhik Ravichandrans project

பள்ளி புத்தகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நூல்களை சில தினங்களுக்கு முன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்.

1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகி உள்ளன.

இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் இளையராஜா குறித்த பாடமும் ‘ஆஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composers Ilayaraj and ARRahman lessons in TN School Books

தணிக்கை குழுவினரிடம் சிக்கி தவித்த கமலின் விஸ்வரூபம்-2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் பூஜாகுமார், ராகுல்போஸ், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பாகம் பல எதிர்ப்புகளில் சிக்கி தவித்தது.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே வெளியானது.

முதல் பாகத்தை போலவே தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கியுள்ளது.

இதனால் 17 சர்ச்சை காட்சிகளை நீக்கி யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதற்கு படக்குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

CBFC orders 17 cuts for Kamalhaasans Vishwaroopam 2

ரசிகர்களுடன் விஜய் ஆலோசனை; அடுத்த கட்ட திட்டம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு பறக்கவுள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.

மேலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இது தளபதியின் வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay met his fans and took photos with them

ஆர்.வி.உதயகுமாரின் உதவி இயக்குனர் பழநிவேலன் இயக்கும் பண்ணாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார்,வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகுகிறது.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா. பழநி வேலன்.

இவர் , கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.

இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ்.

‘பண்ணாடி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வருகிறது.

RV Udhayakumars associate Palanivelans directs Pannadi

More Articles
Follows