லாரிகளில் தண்ணீர்; சிட்லபாக்கம் ஏரி சுத்தம்..; அசத்தும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார். எனவே தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஏராளமான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக லாரிகளில் குடி தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், தர்மபுரி உள்ளிட்டசில மாவட்டங்களில் வீடுகள் தோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து கொடுத்துள்ளனர்.

மேலும் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சிட்லப்பாக்கம் ஏரியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தம் செய்து தூர்வாறும் வேலைளை தொடங்கியுள்ளனர்.

இந்த பகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்றுபார்வையிட்டு ரஜினி ரசிகர்களை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த நற்செயலை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

திரும்ப தொட்டா சரியா வராது… கரகாட்டக்காரன் 2 பற்றி ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் ‘கரகாட்டக்காரன்’.

இதன் படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது…

பொதுவா, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது.

கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார்.

ஆனால், அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது.

முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், ‘பழநி 1’, ‘பழநி 2’னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும்.’. இவ்வாறு ராமராஜன் கூறியுள்ளார்.

ஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள “கண்டுபிடி” என்கிற ஆல்பம் பாடல் வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதில் நாயகன், நாயகியாக கார்த்திக்முனிஸ் ,சுமா பூஜாரி நடித்துள்ளனர்.

இதன் அறிமுகநாயகன் கார்த்திக் முனிஸ் சிவாகாசியைச் சேர்ந்தவர்.இவர் அடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.அந்தத் திரைப்படத்தையும் இசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலில் நடித்துள்ள நாயகனைப் பற்றி இயக்குநர் எம்சி ரிக்கோ கூறும் போது ” கார்த்திக்முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும்,திறமையும் உள்ளவர்

அவரின் முன்று வருட சினிமா முயற்சியில் முதன்முதலாக அவர் என்னுடைய இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம் இப்பொழுது படம் ஆரம்பக் கட்ட வேலையில் உள்ளது.

என் பாடலில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராகுல் , படத்தொகுப்பாளர் எம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன்.படத்தில் முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள் .அவர்கள் யார்யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

எங்கள் டீம் ஒர்க் கிரியேஷன் புரொடக்ஷன் தயாரித்த “கண்டுபிடி” என்ற பாடலை உங்கள் இணையதளத்தில் பார்த்து மகிழுங்கள் எங்களுக்குப் பார்வையாளர்களான உங்களுடைய ஆதரவை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என்கிறார் இயக்குநர் எம்சி ரிக்கோ இந்த பாடலைத் திரைப்பட தயாரிப்பாளரும்,ஓவியருமான ஏ.பி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

“கண்டுபிடி”மற்றும் “மொரட்டு சிங்கிள்” தமிழ் ஆல்பத்தை ஸ்ரீதர் வெளியிட இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,மரகதநாணயம் போன்ற படங்களில் நடித்தவரும்,கதாநாயகன் படத்தினை இயக்கிய இயக்குநருமான முருகானந்தம்பெற்று கொண்டார்.

இயக்குநர் முருகானந்தம் பாடலைப் பற்றிக் கூறுகையில் “எம்சி ரிக்கோவின் இசையும்,பாடலும் இயக்கமும், கேட்பதற்கும்,பார்ப்பதற்கும் மிக அருமை..

இதில் நடித்த நாயகன், நாயகியின் நடிப்பு பாராட்டத்தக்கது
.இருவரின் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது. இருவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் கார்த்திக்முனிஸ் நடிப்பிற்க்கு புதியவர்போல் தெரியவில்லை பாடலில் அவருடைய நடிப்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது..

பாடலில் நடித்த நாயகன் நாயகி இருவரும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்..
பாடலை பாடிய பாடகர் ஜெகதீஷின் குரலும் பாடல் வரிகளும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.என் நண்பன் ரிக்கோ அடுத்ததாக திரைப்படம் இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்தக் குழு திரைப்படம் இயக்கியும் வெற்றிபெறும் என்பதற்கு இந்தப்பாடலே சான்று ” என்று இயக்குநர் முருகானந்தம் கூறினார்.

நடிகர் சங்க தேர்தல்; கமல்-விஜய் வாக்களித்தனர்; ரஜினி-அஜித் வரல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.

தற்போது நாசர் இந்த சங்கத்தின் தலைவராக உள்ளார். கடந்த சில நாட்களாக பல பிரச்சினைகள் குறித்து செய்திகள் வெளியானது.

ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த அணியை எதிர்த்து நடிகர் கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது.

இதில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஒரு வழியாக நேற்றோடு நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்து விட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.

சங்க உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் 1604 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

தர்பார் சூட்டிங் மும்பையில் நடப்பதாலும் தபால் ஓட்டு தாமதமாக வந்ததாலும் தன்னால் வாக்களிக்க சென்னைக்கு வரவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், விஷால், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார்.

அஜித் வாக்களிக்க வரவில்லை. ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என தெரிவித்தார்.

முன்னாள் நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர்.

இந்த தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வருகிற ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாமல் போனதற்கு கமல் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Kamals opinion about Rajini unable to vote in Nadigar Sangam Election

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது .

தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தளபதி விஜய் அவர்களின் மற்ற திரைப்படங்களில் இருந்து பிகில் படம் தனித்து காணப்படும் . இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :

தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி
கலை – T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்
நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்

கைப்புள்ள விஜய்.; வண்டுமுருகன் அஜித்..; தல-தளபதி ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை பட டிரைலர் வெளியானது. இதில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார் அஜித்.

ட்ரைலர் டிரெண்ட் ஆகும்போது அதற்கு நிகராக விஜய் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து டிரெண்டிங் செய்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் பட போஸ்டர்கள் வெளியானது. இதனை இவர்கள் ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த கலாய்ப்பு டிரெண்டிங் வடிவேலுவின் கேரக்டர்கள் & கெட் அப் பக்கம் திரும்பியது.

கைப்புள்ள விஜய் என அஜித் ரசிகர்கள் கலாய்க்க, வண்டு முருகன் அஜித் என விஜய் ரசிகர்கள் கலாய்க்க இவை இரண்டும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது.

இந்த ரசிகர்களின் இந்த மோதலால் மற்ற ரசிகர்களும் நடுநிலையாளர்களும் எரிச்சல் அடைந்தனர்.

இதை தடுக்க சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஏதாவது செய்வார்களா?

As usual again Vijay and Ajith fans clash in twitter

More Articles
Follows