ட்ரெண்டிங்கில் #நான்தான்டா_ரஜினி #உதவாக்கரை_உதய்.; இலங்கை – தூத்துக்குடி முதல் கள்ளக்குறிச்சி வரை.. ஓர் அலசல்

ட்ரெண்டிங்கில் #நான்தான்டா_ரஜினி #உதவாக்கரை_உதய்.; இலங்கை – தூத்துக்குடி முதல் கள்ளக்குறிச்சி வரை.. ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழக முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு காரணமான எந்த அதிகாரிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் போராடிய மக்கள் பலரும் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு நடந்து சில தினங்களுக்கு பின்னர் தூத்துக்குடி மக்கள் சந்திக்க சென்றார் ரஜினிகாந்த்.

அப்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவரை சந்தித்த போது.. “ஒருவர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்டார். நான்தான் பா ரஜினிகாந்த் என்றார் ரஜினி.

எனவே ரஜினியை கிண்டல் அடித்தனர்.

மேலும் நான்தான்பா ரஜினிகாந்த் என்பதும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

(சில நாட்களுக்குப் பிறகு ரஜினியை கேள்வி கேட்டவர் ஒரு பைக் திருட்டு வழக்கில் கைதானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அப்போது இந்த சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்..”போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர். எனவேதான் போராட்டம் கலவரமாக மாறியது. அடிக்கடி போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்றார்.

இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினிக்கு எதிராக திரும்பினர். போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகளா ?என ரஜினிக்கு எதிரான அறிக்கைகளை விட்டனர்.

அந்த சமயத்தில் நடிகர் உதயநிதி ரஜினியை கிண்டல் அடித்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் ரஜினி சொன்னது உண்மைதான்.. போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரமாக மாறியது” என விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதிக்கு மரணத்திற்கு எதிரான போராட்டம் உருவானது.

இந்த போராட்டமும் ஓரிரு தினங்களில் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் சக்தி பள்ளியை அடித்து உடைத்தனர். பஸ்களை எரித்தனர். அங்கிருந்த மேஜை ,நாற்காலி ,ஃபேன் ,ஏசி உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர்.

(தற்போது இது குறித்து ரஜினிகாந்த் வாய் திறக்கவில்லை.)

தற்போது திமுகவைச் சார்ந்த உறுப்பினர்களும் மற்ற அரசியல் பிரபலங்களும் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதால் கலவரமாக மாறியது என்றனர்.

இதே போன்ற போராட்டம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ரஜினியை கிண்டல் அடித்த பிரபலங்கள் இன்று மட்டும் ரஜினி சொன்ன அதே வார்த்தையை சொல்வது ஏன்? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கள்ளக்குறிச்சிக்கு இதுவரை உதயநிதி எம்எல்ஏ நேரிலும் செல்லவில்லை.

இதனையடுத்து #உதவாக்கரை_உதய் & #நான்தான்டா_ரஜினி என்ற டிரெண்டுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.

கூடுதல் தகவல்…

கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கருணாநிதி ஆண்டபோது இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.

அப்போது இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் கண்டன கூட்டங்களும் நடந்தன.

அப்போது நடிகர் சங்க சார்பிலும் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் பேசுகையில்.. “அப்பாவி மக்களை.. பெண்களை… குழந்தைகளை கொன்று குவித்த அரசு உருப்படாது. இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்.. அவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது” என்று ரஜினிகாந்த் பேசினார்.

தற்போது 2022 இல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் பசி பட்டினியினில் வாடி வருகின்றனர்.

பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடந்து வருகின்றன.

இதனையடுத்து ரஜினி சாபம் பலித்தது.அன்றே சொன்ன ரஜினிகாந்த்.. என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini fans Vs Udhayanidhi fans clash on social medias.

பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகும் திறமையும் நிறைந்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் நித்யா மேனன்.

இவர் விஜய் சூர்யா விக்ரம் துல்கர் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’, ‘முடிஞ்சா இவனப்படி’ போயிட்டு படங்களில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

தற்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் நிறைய படங்கள் செய்துள்ளார்.

மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆறாம் திருகல்பனா’.

தற்போது படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் பிரபலமான கேரள ஹீரோ ஒருவரை நித்யா காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் நித்யா மேனனின் திருமண அழைப்பிதழை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

South indian Actress Nithya Menen is getting married soon?

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் ‘சூரி’ கதையின் நாயகனாக நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’.

இதில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்களுடன் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் 4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. இங்கு 400 பேர் தங்கி பணிபுரிந்தனர்.

விரைவில் 5ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இந்தப் படத்தில் இணைகிறாராம்.

இவர் ஏற்கெனவே .விஜய்சேதுபதி, அஞ்சலி உடன் ‘சிந்துபாத்’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi & Suriya

Suriya to team up with Vijay Sethupathi again.;

மம்மூட்டிக்கு வில்லனாகும் விஷால் – சிவகார்த்திகேயன் பட நடிகர்

மம்மூட்டிக்கு வில்லனாகும் விஷால் – சிவகார்த்திகேயன் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதய் கிருஷ்ணா திரைக்கதையில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ளார் மம்முட்டி.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இதில் மம்முட்டி போலீஸாக நடிக்கிறார்.

இதில் மம்மூட்டியுடன் அமலாபால், ஸ்நேகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வில்லனாக தமிழ் நடிகர் வினய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பல படங்களில் நாயகனாக நடித்த இவர் சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் ஏற்கெனவே ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும் ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த புதிய படம் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார் வினய் என்பது குறிப்பிடத்தக்கது.

thupparivaalan vinay

doctor vinay

Mammootty’s Villain Vishal – Sivakarthikeyan film actor

விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ்.

இந்தப் படத்தின் இமாலய வெற்றி மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்துள்ளார் ‘லோகேஷ் கனகராஜ்’.

இதனையடுத்து விரைவில் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் லோகேஷ்.

தற்போது தற்காலிகமாக ‘விஜய் 67’ என இந்தப்படம் அழைக்கப்படுகிறது.

இதில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படம் அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனை முடித்துவிட்டு மைத்ரி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் ரகசியமாக நடைப்பெற்றதாம்.

ஏற்கனவே தமிழ் இயக்குனர் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கிய படத்தில் சல்மான்கான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

விக்ரம் படத்தின் ‘அடுத்த பாகம்’ மற்றும் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் லோகேஷ் இயக்கவுள்ள பட வரிசையில் நிலுவையில் உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
salman khan

Lokesh going to Bollywood after completing Vijay film.

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் என்ன ஆனது? என்று விக்ரமுக்கு தெரியாத நிலையில் அவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ ஆகிய இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

அடுத்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்த இரு படங்களும் வெளியாக உள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.

தற்காலிகமாக ‘சியான் 61’ என்று பெயரிட்டுள்ளனர்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

“இந்த படம் 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்-பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக இருக்கும்” என ரஞ்சித் தெரிவித்து இருந்தார்

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ‘ராஷ்மிகா’.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்திலும் ‘ராஷ்மிகா’ நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சியான் 61

KGF movie style ‘Chiyaan61’.; ‘Varisu’ actress opposite Vikram

More Articles
Follows