விஜய்யை ஓவரா வாழ்த்தி ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய மாநாடு பட புரொடியூசர்

விஜய்யை ஓவரா வாழ்த்தி ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய மாநாடு பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans trolls Suresh Kamatchi for his Birthday Wish to Vijayஇளைய தளபதி விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அண்மையில் வெளியான மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் காமாட்சி. தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதில்… என்னதான் கொரானா முடக்கிப்போட்டாலும், #மாஸ்டரால் திரையரங்குகளை திருவிழாவாக்கவும்.. சினிமாவை மீட்டெடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வசூல் சூப்பர்ஸ்டார், கலையுலக தளபதி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. #Master #HappyBirthdayThalapathy

இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு கமெண்டுக்களை போட்டு வருகின்றனர்.

விஜய் கால்ஷீட் வாங்க இப்படி பேசுகிறாரோ?

சூப்பர் ஸ்டார்ன்னா அது என்னைக்குமே ரஜினி ஒருவர்தான். அவர்தான் இந்த வயதிலும் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார். அவரால் எவரும் நஷ்டமடையவில்லை என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவேளி வேண்டும். அப்படியிருக்கையில் மாஸ்டர் வெளியானால் எப்படி சமூக இடைவெளி தியேட்டரில் கடைபிடிக்க முடியும். ரசிகர்கள் முண்டியடித்து வரமாட்டார்களா?

தியேட்டரில் கூட்டம் குறைவாக வந்தால் மட்டுமே சமூக இடைவெளி சாத்தியம். அப்படியானால் விஜய் படத்துக்கு கூட்டம் வராதா..?

தியேட்டருக்கு கூட்டம் வந்தால் தயாரிப்பாளருக்கு லாபம் வரலாம். ஆனால் மக்கள் கொரோனாவினால் உயிரிழந்தால் யார் பொறுப்பு..,?

ஒருவரை வாழ்த்த வேண்டும் என்பதற்கு ஏன் இப்படி பதிவிட்டுள்ளார்.? என்பது தான் புரியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்… கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் இப்போது வெளியாக கூடாது என இயக்குனர் கேயார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajini fans trolls Suresh Kamatchi for his Birthday Wish to Vijay

https://twitter.com/sureshkamatchi/status/1274892103797993472

ஆன்லைனில் ரீலீசாகும் படங்களுக்கும் சென்சார்.; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஆன்லைனில் ரீலீசாகும் படங்களுக்கும் சென்சார்.; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Online OTT movie release should be censored says Bihar CM கொரோனா பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக அனைத்தும் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

எனவே ஆன்லைன் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் அண்மையில் வெளியானது.

தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் பெறப்படும். சென்சார் சர்ட்டிபிகேட் இல்லாமல் படங்கள் வெளியாக முடியாது.

ஆனால் ஓடிடி தளங்களில் (அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்கள்) வெளியாகும் படங்களுக்கு தணிக்கை (சென்சார்) அவசியமில்லை என்ற நிலையே உள்ளது.

இந்த நிலையில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைதளங்களின் வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Online OTT movie release should be censored says Bihar CM

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans help to Soldier Palani family who lost his life in China clashஇந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் மரணமடைந்தார்.

தமிழக அரசு சார்பாக அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பழனி குடும்பத்திற்குத் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜீன் 22ல் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பர்த்டே கொண்டாட செலவை அவரது குடும்பத்திற்கு ரசிகர்கள் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Vijay fans help to Soldier Palani family who lost his life in China clash

பற்றி எரியட்டும்.. எனக்கென்ன கவலை…; லிங்கா நாயகியின் அதிரடி முடிவு

பற்றி எரியட்டும்.. எனக்கென்ன கவலை…; லிங்கா நாயகியின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Linga fame Sonakshi Sinha On Trolls Mocking Her Twitter Exitபாலிவுட்டில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இவர் இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் ஆவார்.

தமிழில் லிங்கா படத்தில் தன் தந்தையின் நண்பர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு ட்விட்டர் தளத்தில் விலகுவதாக அறிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
இது தொடர்பான அவரின் பதிவில்…

‘எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான், மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன்’ என பதிவிட்டூள்ளார்.

Linga fame Sonakshi Sinha On Trolls Mocking Her Twitter Exit

தன் தம்பி எல்வினை ஹீரோவாக்கும் லாரன்ஸ்; செம பர்த்டே கிப்ஃட்

தன் தம்பி எல்வினை ஹீரோவாக்கும் லாரன்ஸ்; செம பர்த்டே கிப்ஃட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrences brother Elvin to debut as a heroநடன இயக்குனரும் நடிகரும் டைரக்டருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..

நண்பர்களுக்கு வணக்கம் ..

இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது.

ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதாரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Raghava Lawrences brother Elvin to debut as a hero

சைனா தயாரிப்புகள் இனி வேணாம்.; சாக்‌ஷி அகர்வாலின் தேசப்பற்று

சைனா தயாரிப்புகள் இனி வேணாம்.; சாக்‌ஷி அகர்வாலின் தேசப்பற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sakshi Agarwal boycotts Chinese productsஇந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் நாடே அதிர்ச்சியானது.

ஏற்கெனவே சீனாவில் இருந்து உருவான கொரோனா நோயால் இந்தியாவில் பலர் மரணம் அடைந்து வரும் நிலையில் சீனாவின் இந்த கொடூர தாக்குதலால் சீனாவை வெறுத்து வருகின்றனர் இந்தியர்கள்.

எனவே சீனா தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டாம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலும் தன் உறுதிமொழியை அறிவித்துள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.

எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்

Actress Sakshi Agarwal boycotts Chinese products

More Articles
Follows