இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்ல..; அண்ணாத்த ஆர்டர் போட்டும் அடங்காத ரசிகர்கள்

இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்ல..; அண்ணாத்த ஆர்டர் போட்டும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை.

எனவே நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் சின்னத்தை அறிவிக்க வேண்டும் என தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வந்தனர்.

இதனையடுத்து இனி யாரும் ரஜினி தொடர்பாக போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டது ரஜினி தலைமை மக்கள் மன்றம்.

ஆனாலும் இதனை மீறி ரஜினி ரசிகர்கள் திண்டுக்கல் & கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில்…
“நாச்சிக்குப்பத்தின் மன்னன் ஆட்சி மலரட்டும்”, “திராவிட அரசியல் இனி போதும்”…

“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்; இப்போ இல்லைன்னா இனி எப்பவும் இல்லை” என்ற வாசகங்கள் உள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

rajini fans posters

Rajini Fans put up posters in many districts urging him to take political plunge

BREAKING மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்..; அவரின் வாழ்க்கை குறிப்பு

BREAKING மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்..; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sudhangan journalistதமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் (வயது 63 ) இன்று (12-09-2020) காலமானார்.

உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கியவர் பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் போனார். அங்கே அப்போது இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன்.

அதனால் இவர் பெயர் மாற்ற வேண்டிய சூழல். எனவே ரங்கராஜனான இவர் சுதாங்கன் ஆனார்.

1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தார்.

பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . 1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார்.

80 களில் நாடு முழுவதும் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்தார் .

கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்ட பெருமையும் சுதாங்கனுக்கு சேரும்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என கள நிலவரங்களை செய்தியாக்கியவர் சுதாங்கன்.

அன்றைய அமைச்சர்கள் மறுப்பு அறிக்கை வெளியிட்டபோது தொகுதியில் நலப்பணிகள் நடக்கவில்லை என்பதை வீடியோ ஆதாரங்களாக முதன்முதலில் வெளியிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தொகுதிக்கான நலப் பணிகளை செய்ய உத்தரவிட்டார் என்பது வரலாறு.

1992ம் வருடம். ஜூனியர் விகடனின்பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறி தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தார்.
நிர்வாகம் இரு குழுமங்களாக மாறிய நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பைக்காக தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை துவக்கி அதன் துவக்க ஆசிரியராக ஆனார்.

1996ம் வருடத்திலிருந்து தொடர்ந்து விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாக பேட்டி எடுத்த அனுபவம் இவருக்கு உண்டு.

தொடர்ந்து 36மணி நேரம் 19தேர்தல் முடிவுகளை விஜய டிவியில் கொடுத்த அனுபவம் உண்டு.

நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழுதியவர். எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா கொலை முயற்சி வழக்கின் ஒரு பதிவாக தினமணி கதிரில் சுட்டாச்சு சுட்டாச்சு என்கிற பெயரில் 52வாரங்கள் வந்த தொடர் பின்னர் புத்தகமாக வந்தது.

கற்பனை சாராத கட்டுரை தொகுப்புதான் தேதியில்லாத டைரி. இதுவும் இப்போதும் பலரால் பாதுக்காக்கப்படும் ஆவணம் என்றால் அது மிகையல்ல.

Senior journalist Sudhangan passes away

கோவளம் பீச்சில் சர்ஃபிங் கற்றுக்கொள்ளும் ‘சிங்கப்பெண்’ காயத்ரி ரெட்டி

கோவளம் பீச்சில் சர்ஃபிங் கற்றுக்கொள்ளும் ‘சிங்கப்பெண்’ காயத்ரி ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gayathri reddyபிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி.

அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை
தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay of Life Surfing School மூலம் கற்றுக்கொண்டு கடல் அலைகளுடன் மோதி விளையாடி வருகிறார்.

இப்போது இவரைப் பார்த்து இன்னும் சில பெண்கள் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தான் ஒரு சிங்கப்பெண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி ரெட்டி.

மிஷ்கின் என்னை மறந்திருக்கலாம்; அவர் சொன்ன அறிவுரையால் உயர்ந்தேன்… – பாடலாசிரியர் கதிர் மொழி

மிஷ்கின் என்னை மறந்திருக்கலாம்; அவர் சொன்ன அறிவுரையால் உயர்ந்தேன்… – பாடலாசிரியர் கதிர் மொழி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mysskin kathir mozhi‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி .

‘தண்ணி வண்டி’ படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குப் பத்தாவது படம்.

எனக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப் படுத்தியவர் ‘உச்சிதனை முகர்ந்தால்’ இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.

‘என் பாட்டுச் சத்தம் கேட்டு தீப்பிடிக்குது காத்து’ என்ற வரியை பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பு வழங்கினார்.

பின்பு இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் :சித்து +2 ‘என்ற படத்திற்கு எழுதினேன்.ஆனால் அது இடம் பெறாமல் போனது.

கவிஞர் அறிவுமதி அய்யா அவர்கள் நான் பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறைய மெட்டுகள் கொடுத்து பயிற்சி செய்ய ஊக்கப் படுத்தினார்.

பின்பு ‘சபாஷ் சரியான போட்டி’ ,’திரு.வி. க. பூங்கா’ போன்ற படங்களுக்கு எழுதினேன்.கால வேகத்தில் திருமணம், சென்னையை விட்டு பிரிவு என்று காலங்கள் உருண்டு ஓடினாலும் பாடலுக்காக மீண்டும் சென்னை வந்தேன்.

நான் வாய்ப்பு தேடிய காலத்தில் மிஷ்கின் அவர்கள் கூறிய வார்த்தைகளை இன்றும் பின்பற்றுகிறேன்.
நீ பாடல் துறையில் வளர வேண்டுமானால் கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து உன்னுடைய லட்சியத்தை அடைய முயற்சி செய் என்று அறிவுரை வழங்கினார்.
என் வரிகளைப் பாராட்டி அவரே ஒரு விலையுயர்ந்த வாக்மேனும் பரிசளித்தார்.
அவர் கூறிய படி நான் இன்று SDNB வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளேன்.

என்னை மிஷ்கின் சார் மறந்திருக்கலாம்.

கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் எப்போதும் என் கவிதைகளையும் பாடல்களையும் உற்சாகமும் ஊக்கமும் தந்து இன்னும் என் பாடல் பயணத்தின் கூடவே வரும் ஓர் ஆசானாக திகழ்கிறார்.

மீண்டும் பாலாஜி தரணிதரன் அவர்களின் ‘ஒரு பக்க கதை’ தான் என்னைச் சென்னையில் குடியேற வைத்தது.அதில் ஒரு அழகான பாடல்
அமைந்தது.அது எனக்கு பெரிய அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தது.

:என்னோடு விளையாடு’ வில் நான் எழுதிய காலை தேநீர் பாடல் தான் எனக்கு பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுத் தந்தது.

அடுத்து வெங்கட சுப்ரமணியம் ‘மைக் டெஸ்டிங்’ என்ற படத்திற்கு பாடல் எழுதினேன்.அது இன்னும் வெளிவரவில்லை.

கன்னட மொழிபெயர்ப்பு படத்திற்கும் எழுதியுள்ளேன்.அதுவும் வெளி வரவேண்டியுள்ளது.

‘தண்ணி வண்டி’ பாடல் வாய்ப்பு மோசஸ் அவர்கள் மூலமாக கிடைத்தது.
ஒரு இரவில் 11 மணிக்கு டியூன் அனுப்பி எழுதப்பட்டது.

எனது பாடல் பயணத்தில் ஒரு நண்பனாகவும் விலகாத பயணத்தின் வழிப் போக்கனா கவும் மோசஸ் அவர்கள் இருப்பதாக உணர்கிறேன்.
இசையை உணர்ந்து அவர் நினைக்கும் வரிகள் வரும் வரை சமரசம் செய்யாத தன்மையும் இந்த வெற்றிக்கு காரணமாக உணர்கிறேன்.

அவரால்தான் இயக்குநர் மாணிக்க வித்யா அறிமுகம் கிடைத்தது.வரிகளின் ரசனைக் காரராக வேலை வாங்குவதில் கண்டிப்பானவராகவும் இருந்ததும் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.

தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் நேரில் வாழ்த்திய நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

பாடலை முழுமையாகக் கேட்டு மனதார இயக்குநர் கே.பாக்யராஜ் சார் பாராட்டினார். அது ஆஸ்கார் விருது போல் பெருமைப்பட வைத்தது.பாக்யராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இயக்குநர் விஜய் மகேந்திரன் அவர்கள் பாடல் வரிகளையும் இசையையும் பாராட்டி வாழ்த்தியதை எனக்கு கிடைத்த பூங்கொத்தாகக் கருதுகிறேன்.

அண்ணாதுரை இயக்குநர் சீனிவாசன்
ஸ்டான்லி , அனிஸ், அனந்த் ராஜ் என நிறைய இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அறிவுமதி அய்யாவின் பாடல் பற்றிய பாராட்டுதலும்
அப்பாவுக்கு எதுக்கு நன்றி என்ற வாஞ்சயும் கண்களில் கண்ணீர் வரவழைத்தனர்.

எண்ணம்தான் வாழ்க்கை என்பது நான் எங்கு சென்றாலும் என் பாடல் என்னை விட்டு விலகாது என்பதை இத்தருணம் உணர்த்துகிறது.
எப்போதும் என்னோடு இருக்கும் தோழி செந்தமிழ் கோதைக்கு நன்றி.

இன்னும் என்னை இயங்க வைக்கும் என் கல்லூரி SDNB வைணவ கல்லூரிக்கும் நன்றி.

lyricist kathir mozhi talks about mysskin

சிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்..? தயாரிப்பாளர் சு கா-க்கே தெரியாத அப்டேட் கொடுத்த ஆவி

சிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்..? தயாரிப்பாளர் சு கா-க்கே தெரியாத அப்டேட் கொடுத்த ஆவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanadu producer suresh kamatchiவெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’.

சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் பிரேம் ஜி, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர்.

சிம்புக்கும் படக்குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் நிறுத்தப்பட்டது.

இதனால் சிம்பு மீது அவரது
ரசிகர்களே கோபம் அடைந்தனர்.

அதன் பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் படம் தொடங்கவிருந்த்து.

இதனிடையில் கொரோனா ஊரடங்கால் அனைத்து பட சூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் சினிமா சூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும் பெரிய பட்ஜெட் பட சூட்டிங்குகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் மாநாடு படம் டிராப் ஆகிவிட்டதாக பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதனை சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் கண்டித்துள்ளார்.

அதில்….

“மாநாடு” படம் ட்ராப் என அடிக்கடி செய்தி போடுவதின் உள் நோக்கம் தான் என்ன விகடனாரே?? @vikatan @CinemaVikatan
என் மீது வன்மமா? அல்லது சிம்பு மீதா? தயவுசெய்து தவறான செய்திகளை ஊதிவிடும் உங்கள் Source ஐ மாற்றுங்கள்.

விரைவில் மாநாடு ஷூட்டிங் போகும் தேதி அறிவிக்கப்படும்.

Maanadu producer reply to Vikatan

ஸ்ரேயா பிறந்த நாளில் 6 மொழிகளில் பர்ஸ்ட் லுக்.; இளையராஜா இசையில் ‘கமனம்’

ஸ்ரேயா பிறந்த நாளில் 6 மொழிகளில் பர்ஸ்ட் லுக்.; இளையராஜா இசையில் ‘கமனம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.

இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார்.

நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் “கமனம்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.

ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்குழு:

கதை-திரைக்கதை-இயக்கம்: சுஜனா ராவ்
தயாரிப்பாளர்கள்: ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் V.S
இசை: இசைஞானி இளையராஜா
DOP: ஞான சேகர் V.S
வசனம்: சாய் மாதவ் புர்ரா
படத்தொகுப்பு: ராமகிருஷ்ணா அராம்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

shriya in gamanam

Director Krish Launches Shriya Saran First Look In Pan India Film ‘Gamanam’

More Articles
Follows