காலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்

Rajini fans disappointed scenes in Kaala movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படம் நேற்று ரிலீஸானது.

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பல ஏமாற்றங்களை கொடுத்தது.

ஆனால் கபாலியை விட காலா நன்றாகவுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கபாலி படம் ரஞ்சித் உடையது எனவும் காலா திரைப்படம் என்னுடையது என ரஜினிகாந்த் அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காலாவை பார்த்த சில ரஜினி ரசிகர்கள் தங்களை சில காட்சிகள் ஏமாற்றி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த காட்சிகள் இதுதான்…

க்யா ரே செட்டிங்கா..? வேங்கை மக ஒத்தையில நிக்க தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே என்ற டயலாக் காட்சி டீசர் வந்தபோதே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த காட்சி வரும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது. இந்த டயலாக் முடிந்தவுடன் பயங்கர சண்டை இருக்கும் சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த காட்சியில் சண்டை இல்லாமல் ரஜினி எஸ்கேப் ஆகிவிடுவார். அந்த டயலாக் பேசிய உடனே சண்டை இருந்தால் செமயாய் இருந்திருக்கும்.

எப்போதும் தலைவருக்கு அறிமுக காட்சி அசத்தலாக இருக்கும். எந்த டைரக்டர் என்றாலும் ரஜினிக்காக அந்த காட்சியை அதிக சிரத்தையுடன் எடுப்பார்கள்.

ஆனால் காலாவில் கிரிக்கெட் பேட் உடன் அறிமுகமாகும் காலா ஒரு பைட் கூட இல்லாமல் சென்று விடுவார். அட்லீஸ்ட் காட்சியையாவது பக்காவாக கொடுத்திருக்கலாம்.

கிரிக்கெட் ஆட இருப்பார். ஒரு சிக்ஸர் கூட இருக்காது. அப்படியே முதல் பந்தில் அவுட் ஆகிவிடுவார். இப்படி எதுவுமே அறிமுக காட்சியில் இல்லை.

படத்தில் நடித்துள்ள நாய்க்கு ஏகப்பட்ட பில்டப் இருந்தது. ரஜினியுடன் நடித்த அந்த நாயை மலேசியா ரசிகர் ஒருவர் ரூ. 2 கோடி கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருந்தார் எனவும் தகவல்கள் வந்தன.

இந்த நாயை செலக்ட் செய்வதற்கு முன் 30 நாய்கள் ஆடிசன் செய்யப்பட்டது என அந்த நாயின் பயிற்சியாளர் சைமன் தெரிவித்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அந்த நாயை தெரு நாய் போல காட்டிவிட்டனர். வில்லன் வரும்போது அந்த நாய் குரைத்திருக்கலாம். அதுவும் சும்மா காட்டிவிட்டார் ரஞ்சித்.

நிக்கல்.. நிக்கல்… கிளம்பு.. கிளம்பு அந்து போச்சி என்ற பாடல் வெறித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வரிகளுடன் அந்த பாடல் இடைவேளையில் முடிக்கப்பட்டது.

ஒருவேளை படத்தின் நீளத்திற்காக பாடலை குறைத்திருக்கலாம். அதற்கு பதில் ரஞ்சித்தின் கருத்துக் காட்சிகளை நீக்கிவிட்டு இந்த பாட்டை வைத்திருக்கலாமே என்றும் தெரிவித்தனர்.

க்ளைமாக்ஸில் ரஜினி இறப்பதாக காட்டப்பட்டுள்ளது. ரஜினி இறப்பதாக காட்சிகளை அண்மைகாலமாக எந்த இயக்குனரும் வைக்கவில்லை.

ஆனால் க்ளைமாக்ஸில் கபாலியில் துப்பாக்கி சுடும் சவுண்ட் கேட்கும். அப்படியென்றால் ரஜினி சுடப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்தது.

அதுபோல் காலாவில் ரஜினி இறப்பதாகவும் அதன்பின்னர் பல காலாக்கள் உருவாகுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

படத்தில் உள்ள கேரக்டர்கள் காலா இறக்கவில்லை என்கிறார்கள். இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.

எந்த வித மேக்கப் அப்பும் இல்லாமல் முடியில்லாமல் (விக் கூட வைக்காமல்) பொதுவெளியில் வரும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

அப்படி இருக்கையில் நேரில் கூட 70 வயதான ரஜினிகாந்த் ஸ்மார்ட்டாக இருப்பார். ஆனால் படத்தில் 60 வயது நபராக ரஜினி காட்டப்பட்டிருந்தாலும் கன்னங்களில் கைகளில் பயங்கர சுருக்கங்கள் இருந்தன.

அதை கூட சரியாக கவனிக்காமல் ரஞ்சித் விட்டுவிட்டார். அந்த தாராவி சேரி பகுதியில் ரஜினி வசிக்கிறார் என்பதற்காக அப்படியே விட்டுவிட்டாரா..?

ஆனால் மற்ற நடிகர்கள் அப்படியில்லையே என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக படத்தில் பன்ச் டயலாக் கூட இல்லை.

எந்திரன் படத்தில் கூட காட்சிக்கு தேவையான தத்துவ டயலாக் இருக்கும்.

சிட்டி ரோபோ ஒவ்வொரு நட்டாக கழட்டும்போது வாழ்க்கை சம்பந்தமான பன்ச் டயலாக்குகள் பல இருக்கும்.

ஆனால் கிட்டதட்ட அரசியல் படமான காலாவில் காலத்திற்கு சொல்லும் அளவுக்கு ஒரு பன்ச் டயலாக் கூட இல்லை.

யதார்த்தம் என்ற பெயரில் மாஸ் ஹீரோவான ரஜினியை நன்றாக பயன்படுத்திக் கொண்டுவிட்டார் ரஞ்சித். அவரின் ஒட்டு மொத்த கருத்தையும் மக்களுக்கு சொல்ல ரஜினி தேவைப்பட்டு இருக்கிறார்.

இது ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்காது என்பது உண்மை என்றாலும் இனி ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்பு அளிக்க கூடாது எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans disappointed scenes in Kaala movie

Overall Rating : Not available

Latest Post