அண்ணாத்த பர்ஸ்ட் லுக்கை ரஜினி வீட்டில் வைத்து வழிபட்ட ரசிகர்கள்

அண்ணாத்த பர்ஸ்ட் லுக்கை ரஜினி வீட்டில் வைத்து வழிபட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.

அதன்படி காலையில் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்த நிமிடமே அதனை ப்ளக்ஸ் பேனர்கள் போஸ்டர் என ரஜினி ரசிகர்கள் அடிக்கத் தொடங்கினர்.

அதுபோல் ஆட்டோக்களிலும் சிலர் ரஜினி அண்ணாத்த ஸ்டிக்கர்கள் ஒட்டி அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக் பேனருடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

சென்னையிலுள்ள சில ரசிகர்கள் ஒருபடி மேலே அதாவது… அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பேனர் போட்டு போயஸ் கார்டன் சென்று ரஜினி வீட்டில் வாசலில் வைத்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.

சிலர் அந்த பேனரை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த போட்டோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini fans celebrates Annaththe first look posters goes viral

33 பிரபலங்கள் வெளியிடும் ஹரி – அருண்விஜய் கூட்டணியின் படத்தலைப்பு இதோ..

33 பிரபலங்கள் வெளியிடும் ஹரி – அருண்விஜய் கூட்டணியின் படத்தலைப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதன் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது. அருண்விஜய் நடிக்கும் 33வது படமான இதை, விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், ஆர்யா, ஆதி, விஜய்ஆண்டனி, டோவினோ தாமஸ், அனுராக் காஷ்யப், விஷ்ணுவிஷால், சாந்தனு, அதர்வா, விக்ரம்பிரபு, சிபிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ்சிவன், சீனுராமசாமி, பிரசன்னா, அசோக்செல்வன், கிருஷ்ணா, ஆர்.பார்திபன், சேரன், கவுதம்வாசுதேவ்மேனன், வெங்கட்பிரபு, அறிவழகன்,சாம்.சி.எஸ், நவீன், வரலட்சுமி,ஐஸ்வர்யாராஜேஷ், ரெஜினாகசண்ட்ரே, நிக்கிகல்ரானி, மஹிமாநம்பியார், வேதிகா, கார்த்திக்நரேன், அஜய்ஞானமுத்து ஆகிய 33 சினிமா பிரபலங்கள் சேர்ந்து இன்று வெளியிடுகிறார்கள்.

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனபெயரிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட, படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க பரபர திரைக்கதையில்,
நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

Hari – Arun Vijay’s new film title is out

விஜய் கிட்ட 150 முறை சான்ஸ் கேட்டுட்டேன்.; சிம்பு திருமணத்திற்காக காத்திருக்கும் ஜெய்

விஜய் கிட்ட 150 முறை சான்ஸ் கேட்டுட்டேன்.; சிம்பு திருமணத்திற்காக காத்திருக்கும் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் பேச்சு…

இதில் நடிகர் ஜெய் பேசும்போது…

‘பகவதி’ படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன்.

ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்றார்.

இசையமைக்க சுசீந்திரன் கேட்டுக் கொண்டதால் ,தான் இசையமைப்பாளரானதாக விரைவில் அந்த பாடல்கள் வெளியாகும் என்ற சந்தோஷத்தை பகிர்ந்தார்..

பஞ்சு சுப்புவிடம்,…

‘கசடதபற’வில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு, “நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல. நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ‘அரசி’ சீரியலில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன். அதில் நடித்தபோது, ஊரே திட்டித் தீர்த்தது. ஆனால், மக்கள் மனதில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நின்று விட்டது.

என்னைப் பொருத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்த மாதிரி கதாபாத்திரமானாலும் நடிக்கத் தயார்தான்” என்றார்.

‘ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு,

“ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது.

சினிமா இருக்கும்வரை தியேட்டர்களும் இருக்கும்” என்றார்.

ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டதற்கு…

“அப்பா எடுத்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜாதான். நட்பு அன்பு காரணமாக அதை அவர் கொள்கையாகவே கடைப்பிடித்தார். இளையராஜா இல்லையென்றால் அவரது வாரிசுகள்தான் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார்கள். ஜெய் என் தம்பி எப்போதும் எங்கள் படங்களில் நடிக்கலாம்” என்றார்.

விரைவில் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக சொன்னார்

மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசும் போது, மதுரையில் மிடில் கிளாஸ் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியர்.

மாமியார் கணவர் எல்லாருமே கல்வி துறையில் இருந்தவர்கள். ஆனால் விஜயின் ஆரம்ப கட்ட படங்கள் சில தயாரித்தோம். பல்வேறு துறைகளில் நாங்கள் பயணிக்கிறோம் சரியான திட்டமிடல் அவசியம். பெண்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுக்கிறேன்.

அவரது திறமைகள் முடங்கிவிட கூடாது. அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். காலம் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் செய்வோம்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் என் மருமகன் படத்தை தயாரித்து வருகிறோம். என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது .

சங்க உறுப்பினர்களுக்கு பண்டிகைக்காலம் என்பதால் அரிசி போன்ற அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன .

நன்றி ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் கார்த்திக்..அவர்களுக்கு.

Jai talks about Vijay and Simbu in recent event

புலமைப்பித்தன் பாடல்களால் என் படங்களுக்கு பெருமை..; சிவகுமார் புகழஞ்சலி

புலமைப்பித்தன் பாடல்களால் என் படங்களுக்கு பெருமை..; சிவகுமார் புகழஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5 ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர்.

முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர்.

ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் “குடியிருந்த கோயில்” படத்திற்கு, ‘நான் யார் நான் யார் நீ யார்.. ‘ பாடல் எழுதி அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ள பாடல்கள் எழுதுவதில் தனித்துவமாக விளங்கினார்.

என் படங்கள் பல அவர் பாடல்களால் பெருமை பெற்றன.

‘ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்..” என்று ‘சாமந்திப்பூ’ படத்திற்கு பாடல் எழுதி கொடுத்தார். நாயகி சோபாவை நினைத்து படத்தில் நான் பாடிய பாடல்.

எனது 100 -வது படத்தின் உயிராக மக்கள் கொண்டாடிய பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமல பக்கத்திலே மேயுதின்னு சொன்னாங்க..’

1979-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலாக தமிழக அரசு விருது பெற்றது. இளையராஜாவும், எஸ்.பி.பி யும் அவர் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆர் அரசில் அரசவைக் கவிஞராகவும், மேல்சபைத் துணைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.

தமிழீழப் போராளி பிரபாகரனுக்கு துவக்க காலத்தில் தன் வீட்டில் அடக்கலம் கொடுத்தவர்.

திருமணத்திற்கு முன்னரே தன் புதல்வி தீ விபத்தில் அகால மரணமடைந்த போதும், தன் மகன் மோட்டார் விபத்தில் அகப்பட்டு ‘கோமா’ நிலையில் 11மாதங்கள் இருந்து இறந்த போதும் கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்.

சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர், பெரியாரின் முதல் வரிசை சீடர். அவரது இழப்பு கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.

அவரை தன்னுடைய 75வது வயதில் இழந்திருக்கும் அவரது துணைவியாருக்கும், மருமகளுக்கும், பேரன் திலீபனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Sivakumar’s condolence message for lyricist Pulamai Pithan

‘அண்ணாத்த’ ஆன் தி வே..; விநாயகர் சதுர்த்தியில் ரஜினியின் டபுள் ட்ரீட்

‘அண்ணாத்த’ ஆன் தி வே..; விநாயகர் சதுர்த்தியில் ரஜினியின் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் பரவியது.

இந்த நிலையில் நாளை (செப்டம்பர் 10) காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.

Annaatthe first look and motion poster release update

பெண்கள் மட்டுமே இணைந்து உருவாக்கிய படம்..; ரூபி பிலிம்ஸின் 5வது ருசி இதோ..

பெண்கள் மட்டுமே இணைந்து உருவாக்கிய படம்..; ரூபி பிலிம்ஸின் 5வது ருசி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களை மையப்படுத்திய படைப்புகள் அவ்வப்போது சில வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன..

ஆனால் அவை பெரும்பாலும் ஆண் படைப்பாளிகளின் எண்ணங்களில் தோன்றிய படைப்புகளாகவே தான் இருக்கின்றன.

ஆனால் ரூபி பிலிம்ஸ் ஹசீர் இதில் சற்றே வித்தியாசமான ஒரு முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆம். பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை பெண் இயக்குனர், பெண் ஒளிப்பதிவாளர், பெண் இசையமைப்பாளர் என பெண்கள் பணிபுரியும் கூட்டணியை வைத்தே தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனர் பாக்யா இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கிறார்.

சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணிபுரிந்த சின்னு குருவில்லா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி மற்றும் தற்போது ஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் என இதுவரை நான்கு படங்களை தயாரித்த ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படைப்பாக இந்தப்படம் உருவாகிறது.

விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

Ruby films 5th movie will be shoot by women technician

More Articles
Follows