தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன் ஜூலை 28ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு இன்று வரை சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது.
தன்னை கழுகு என்பது போல சொல்லிக் கொண்ட ரஜினிகாந்த் யாரை காக்கா என்று குறிப்பிட்டார் என்பது தான் தற்போது கோலிவுட் ஹாட் டாபிக்.
இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் முக்கியமாக விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வருகின்றது.
இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் பொள்ளாச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் கிளை மன்றங்கள் இணைந்து அங்குள்ள விஷால் சினிமாஸ் என்ற திரையரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
மேலும் அந்த திரையரங்கில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் ஜெயிலர் இன்ட்ரோ ஆகிய காட்சிகளை திரையிட்டு ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Rajini fans celebrated Jailer songs at Vishal Cinemas