ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Partyஅரசியலுக்கு வருவது உறுதி, எம்ஜிஆரை போல நல்லாட்சியை கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்துவிட்டு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்த பிறகு, அரசியல் கட்சி பெயரை அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் ரஜினிகாந்த் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம், ரஜினியின் அடுத்த அரசியல் வாரிசு தனுஷ் என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறும்போது… குடும்ப அரசியலை விரும்பாதவர் தலைவர் ரஜினி. எனவே இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கின்றனர்.

ம்ம்ம்ம்ம்… பொறுத்திருந்து பார்ப்போம்…

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Party

Overall Rating : Not available

Latest Post