ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி; மீம்ஸ் வாலாக்களை கலாய்த்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர் சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

அப்போது மீம்ஸ் போட்டு கலாய்க்கும் கும்பலுக்கும் அவர் பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

அவர் பேசியதாவது…

நான் கடந்த ஆண்டு 2017 டிசம்பர் 31ஆம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியிருந்தேன்.

ஆனால் அதற்கு முன்பே உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். அதுவும் ஒரு சின்ன மீடியா பையன்.

அதுபற்றி பேசும்போது எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி. என்று பேசியிருந்தேன்.

கொள்கை இல்லாதவரா? என்றெல்லாம் என்னை பேசினார்கள்.

அது ஒரு விவாதப்பொருளாக மாறியது.

இது எப்படி இருக்கிறது என்றால்…. பெண் பார்க்க செல்கிறேன் என்றால், அப்போதே திருமண பத்திரிகை எங்கே? என்று கேட்பதுபோல் உள்ளது.” என்று மீம்ஸ் போடுபவர்களையும் ஆர்வக் கோளாறு கேள்வியாளர்களையும் சாடினார் ரஜினிகாந்த்.

இந்த விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Oru nimisham Thala Suthidichu Rajini criticized Memes creators

எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி; அவரின் நல்லாட்சியை கொடுப்பேன்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் அறிவிப்பு பிறகு இன்று ஒரு எம்ஜிஆர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதிகள் திட்டுகிறார்கள். ஏளனமாக பார்க்கிறார்கள். வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

எம்ஜிஆர் மாதிரி யாரும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்கிறார்கள்.

எம்ஜிஆர் ஒரு யுக புருசன். அவர் ஒரு தெய்வப்பிறவி. அவரை போல் இனி எவராலும் வரமுடியாது.

இனி அவரே மீண்டும் மண்ணில் பிறந்தால்தான் உண்டு. நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் அவர் தமிழகத்திற்கு கொடுத்த நல்லாட்சியை கொடுப்பேன். என்னால் கொடுக்க முடியும்” என பேசினார் ரஜினிகாந்த்.

I will give good Govt for TN like MGR gave says Rajini

ஜெயலலிதா இருந்த போது அரசியலுக்கு வர பயமா..? ரஜினி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி விழாவில் எம்ஜிஆர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல்வாதிகள் மற்றும் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி பேசினார்.

ஜெயலலிதா இருந்தபோது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்கிறார்கள். அவர் உயிருடன் இருந்தபோதே அவரை எதிர்த்து நான் தைரியமாக பேசியிருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் 1996ல் நடந்த அரசியல்களை பற்றி நான் பேச விரும்பவில்லை.

இந்தியாவில் எவரும் செய்யாத அளவிற்கு தன் கட்சியை நன்றாக வழி நடத்தியவர் அவர்.

இன்று அவர் இல்லை. என் அருமை நண்பர் கலைஞரும் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை. அந்த வெற்றிடம் உள்ளது. அதான்யா நான் வரசியலுக்கு வருகிறேன்.” என பேசினார் ரஜினிகாந்த்.

I wont get afraid of Jayalalitha says Rajini at MGR Statue opening event

ரசிகர்கள் வைத்த பேனர்களால் மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு தனியார் கல்லூரியில் திறந்து வைத்தார்.

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே என தன் வழக்கமான உரையுடன் பேச்சை துவங்கினார் ரஜினிகாந்த்.

அதன்பின் அவர் பேசியதாவது….

இது ஒரு கல்லூரி விழா போல் இல்லை. என் ரசிகர்கள் ஒரு மாநாடு போல் நடத்திவிட்டனர்.

வருகிற வழியெங்கும் கட்அவுட் பேனர்கள் என வைத்துவிட்டனர்.

இதுபோல் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை நாம் மீறிவிட்டதாக நினைக்கிறேன். இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.

மக்களுக்கு இடைஞ்சல் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

Rajini apologies to TN People because of his fans banners on Chennai Road

அமைச்சர்கள்-அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்கனும்… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் கமல் பேசியதாவது…

“என்னை பார்த்து நீங்கள் தலைவா என சொல்ல வேண்டாம், உங்களை பார்த்துதான் தலைவா என நான் கூறவேண்டும்.

நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.

நம் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.

அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

நம்மிடம் இருந்தே எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவோம்.

பட்டதாரிகளும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்”

நாட்டில் மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாரயம் பெருகும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பவர்கள் ஒரேடியாக சாவார்கள்.” என கமல் பேசினார்.

Govt Staffs and Ministers children must study in Govt Schools says Kamal

Breaking: வரலட்சுமிக்கு தளபதி விஜய் தந்த பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

வரலட்சுமி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வரலட்சுமி கூறும்போது…

“பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது உற்சாகமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இவர்களுடன் ராதாரவி மற்றும் யோகிபாபுவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi teamsup with Keerthy suresh in Vijay 62 movie

More Articles
Follows