தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூலை 13ஆம் தேதி தன் அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்தார் கமல்ஹாசன்.
இதனையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறார்.
தன் நீலாங்கரை வீட்டில் ஓய்வெடுக்க கமல் நினைத்தார்.
ஆனால் ஆஸ்பத்தியிலேயே ஒய்வு எடுக்குமாறு அவரை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இவரது உடல் நலம் குறித்து கமலின் உறவினர் சுஹாசினி லதா ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் கமலை உடனே சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என நினைத்தாராம் ரஜினி.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்றால் இன்ஃபெக்ஷன் ஆகும் என ரஜினியின் குடும்ப டாக்டர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம்.
எனவே கமலை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி இருக்கிறார் ரஜினி.