Exclusive: மக்களுக்கு என்ன செய்யலாம்..? சமுத்திரக்கனியுடன் ரஜினி ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, நானா படேகர், ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தனுஷ் இப்படத்தை ரூ. 160 கோடியில் தயாரித்து வருகிறார். இசை சந்தோஷ் நாராயணன்.

இதன் சூட்டிங் தற்போது சென்னை, பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது.

சலவைத் தொழிலாளர்கள் ஒரு பகுதியில் வசித்து துணிகளை துவைத்து வருகின்றனர். ஆனால் அங்கே வரும் வில்லன் கும்பல் அந்த இடத்தை காலி செய்ய சொல்லி அவர்களை மிரட்டுகின்றனர்.

ஆனால் அங்குள்ள மக்கள் மறுக்கவே, நடுஇரவில் அந்த பகுதிகளை அழிக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க செட் போடப்பட்டுள்ளதாம். இதற்காக பல லட்சம் செலவழிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காலா வருகிறாராம்.

இக்காட்சியில் ரஜினி, (அவருடன் ஒரு நாய்) சமுத்திரக்கனி மற்றும் அருள்தாஸ் மற்றும் பல துணை நடிகர்கள் பங்கு பெற்று நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இவர்களுக்கு என்ன உதவி செய்யலாம்? என சமுத்திரக்கனியுடன் ஆலோசனை செய்வதாக காட்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Rajini consult with Samuthirakani for welfare of the people

விக்ரம் வேதா படம் பார்த்த சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் ஜீலை 21ஆம் தேதி வெளியான படம் விக்ரம் வேதா.

புஷ்கர், காயத்ரி இருவரும் இணைந்து இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பாராட்டு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையறிந்த ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க விரும்பி, பார்த்துள்ளார்.

படம் செம மாஸ். மாஸ் மட்டுமல்ல படம் கிளாஸ் ஆகவுள்ளது என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு தங்களுக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vikram Vedha mass film made with so much class says Rajinikanth

 

மெர்சலை தொடர்ந்து வேலைக்காரனை வாங்கிய நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்-ஏஆர்ரஹ்மான்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் மெர்சல் படத்தின் ஆடியோ அடுத்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் ரூ- 3.5 கோடிக்கு வாங்கியுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளது.

Sony Music bagged audio rights of Velaikkaran movie

 

தன் காதலனை கமலிடம் அறிமுகம் செய்துவைத்த ஸ்ருதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் காதலில் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் பிரிட்டீஸ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலித்து வருகிறாராம்.

அவரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதால், தன் தந்தை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைக்க இந்தியா வரவழைத்துள்ளாராம்.

லண்டனிலிருந்து மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதி வரவேற்று காரில் அழைத்துச் சென்றதாகவும், இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சிகளையும் மும்பையைச் சேர்ந்த மீடியாக்கள் படம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கமல் இவர்களை சந்தித்து பேசிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

’மைக்கேல் இந்தியா வந்துள்ளது உண்மைதான். ஆனால், திருமண தகவல் உண்மையில்லை’ என தெரிவித்தனர்.

Shrutihaasan fall in love with London-based actor named Michael Corsale

அப்துல்கலாம் மணிமண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம்.

இன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தில் இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு சேர்த்திருக்கிறார்.
இந்த மணிமண்டபத்தில் மொத்தம் 95 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் அப்துல் கலாமின் 2 சிலிக்கான் சிலையையும் உருவாக்கி இருக்கிறார்.

மணிமண்டபத்தை உருவாக்க 400 பேர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்த ஓவியங்களை பார்த்த முக்கிய பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டியுள்ளார்கள்.

மேலும் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயர் அவர்கள் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த மண்ணிற்கு நான் வந்ததை பாக்கியமாக கருதுகிறேன் என தமிழில் பேசினார் நரேந்திர மோடி.

மேலும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நிச்சயம் மணிமண்டபத்தை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்துல்கலாம் மணிமண்டபம்- சிறப்பு தகவல்கள்…

1.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம், ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் வகையிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

2.நாட்டின் ஒருமைப்பட்டை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல், கலாம் நினைவகப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.50 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நினைவிடத்தின் நுழைவுவாயிலானது, பிரிட்டிஷார் அமைத்த ‘இந்தியா கேட்’ போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.இதன் தரைதளம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட உயர் ரக கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

5.நினைவு மண்டபத்தின் வெளிப்பகுதி முழுவதும் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் கிரானைட் மற்றும் ஆக்ரா சிவப்பு கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.

6.கடற்கரைப் பகுதி என்பதால் உப்புக் காற்றினால் நினைவிடம் பாதிக்கப்படாமல் இருக்க, வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலான கன அளவு கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

7.நினைவு மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள நான்கு அரங்குகளில் கலாமின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரையப்பட்ட படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

8.இவை முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

9.கலாமின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரதான கூடத்தின் மேல் ஜனாதிபதி மாளிகையை நினைவுகூரும்வகையில் 12 மீட்டர் உயரத்தில் 9.62 மீட்டர் விட்டம் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

11.இதன்மேல் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. நினைவகத்தின் மேற்பரப்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெகவாட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

12.நினைவகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், கோள்கள், அறிவு மரம், ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், ராஜமுந்திரியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

13.இவற்றுக்கு முத்தாய்ப்பாக கலாமின் வெண்கலச்சிலை அருகே அவரால் கண்டுபிடிக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள

14.கலாம் நினைவிட நுழைவு வாயிலை காரைக்குடி செட்டிநாட்டில் செய்யப்பட்ட மலேசிய தேக்குமரக் கதவுகள் அலங்கரிக்கின்றன.

15.தான் வாழும்போது இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும் அவரின் நினைவிடத்தில், கலாமின் பணிகளைத் தொடரும்வகையில் கோளரங்கம், நூலகம், அறிவுசார் மையம் என பல மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலாம் ஆன்தம்

கவிஞா் வைரமுத்துவின் பாடல் வாரிகளில் உருவாகியுள்ள “கலாம் கலாம் சலாம் சலாம்“ என்ற பாடல் திரையிடப்பட்டது.

கலாமின் புழை வெளிப்படுத்தும் விதமாக தபால் துறை சார்பில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

மேலும் 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் காரணமாக பல்வேறு வழிபாட்டு தளங்கள், கட்டிடங்கள் இடிந்து நாசமான நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின்பு தனுஷ்கோடி முதல் அரிச்சல் முனை பகுதி வரை 59 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பிரதமா் திறந்து வைத்தார்.

Prime Minister Narendra Modi Inaugurates APJ Abdul Kalam Memorial at Rameswaram

 

ஆன்மிகத்தில் அப்பா வழியா? அக்கா வழியா? – அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராஹாசன் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில் இவரது ஆன்மிக நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது.

அதில்… ‘‘உங்கள் அப்பா பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி?’’ என்று கேட்டனர்.

அதற்கு அக்ஷராஹாசன் பதிலளித்துள்ளதாவது…

‘‘கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா ஒரே மாதிரிதான். எனக்கும் நம்பிக்கை இல்லை.

ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம்.

எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்த வழிபாடு அல்ல.

வாழ்வியலோடு கலந்த அதில் நிறைய விஷயங்களை கற்றுவருகிறேன்.’’ என்றார்.

Aksharahassan revealed her thoughts of Faith in God

More Articles
Follows