ரஜினி காலடியில் உங்க ரெக்கார்டு; தல-தளபதி ரசிகர்களை கிழித்த தலைவர் ரசிகர்கள்

ரஜினி காலடியில் உங்க ரெக்கார்டு; தல-தளபதி ரசிகர்களை கிழித்த தலைவர் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar Chumma Kizhi song record Most viewed Tamil lyric Video in 24 hoursமுன்பெல்லாம் ஒரு படம் ரிலீசாகி எத்தனை நாட்கள் ஓடியது, எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் வைத்து தான் ரசிகர்களுக்குள் போட்டியிருக்கும்.

ஆனால் தற்போது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அது 100 நாட்கள் கூட ஓடுவதில்லை.

எனவே ரசிகர்களின் கவனம் யூடிப் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு பட டீசரோ, டிரைலரோ வெளியானால் எத்தனை லைக்ஸ், அதுவும் குறைந்த நேரத்தில் எத்தனை? என்பதை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரஜினியின் தர்பார் படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியானது.

இது வெளியாகி 24 மணி நேரத்தில் இந்த பாடல் லிரிக் வீடியோவை மட்டும் 1 கோடி அதிகமானோர் பார்த்துள்ளனர்.  இந்த வீடியோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தல அஜித், தளபதி விஜய் ஆகியோரின் முந்தைய சாதனைகளை நொறுக்கி அடித்துள்ளார் தலைவர் ரஜினிகாந்த்.

ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே அதிகம் என்பதால் யூடிப்பில் அவர்கள் சாதனை நிகழ்த்த முடியாது என விஜய், அஜித் அடிக்கடி கூறி வந்தனர். ஆனால் எங்கிட்ட மோதாதே என்ற பாணியில் ரஜினி ரசிகர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக பேர்களால் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை சும்மா கிழி என்ற பாடல் பெற்றுள்ளது.

இந்த சாதனையை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனையை தர்பார் பட தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#RecordBreakingChummakizhi #ChummakizhiMostViewedSong #RecordBreakingChummaKizhi #ChummaKizhiMostViewedSong

Rajini Chumma Kizhi record Highest Views South Indian Song in 24 hours

 

https://twitter.com/LycaProductions/status/1200060661734105089

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simha and vivekSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.
ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார். பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.

படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும் தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் பெரும் பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா & அபிராமி

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா & அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anushka and abirami கோலிவுட்டே ஆச்சரியப்படும் வகையில் நிறைய படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் ஐசரி கணேஷ்.

இவரது தங்கை மகன் வருண் நடிக்கும் ஜோஷ்வா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் கௌதம். இந்த படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இதில் பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் நடிகை அனுஷ்கா நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறாராம்.

இதில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமியும் நடிக்கிறாராம்.

கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இதேபோல் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் அபிராமி நடித்துள்ளார்.

இதில் துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாகவில்லை.

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் கவின்..?

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் கவின்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Kavin and Sivakarthikeyan மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் அடுத்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.

இதனையடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் & கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிவி சீரியல்களில் நடித்துள்ள கவின், ’நட்புனா என்னன்னு தெரியுமா’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அரசியலுக்கு வரட்டும்; I AM WAITING.. ; முதன்முறையாக சீமான் அழைப்பு

ரஜினி அரசியலுக்கு வரட்டும்; I AM WAITING.. ; முதன்முறையாக சீமான் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini seemanஎந்த மேடையாக இருந்தாலும் அதில் ஒரு வார்த்தையாவது ரஜினியை பற்றி விமர்சிக்காமல் இருக்கமாட்டார் சீமான். அப்படிதானே அவருக்கு பல மேடைகளில் கைத்தட்டல்கள் கிடைத்தது என்பது வேறுகதை.

ரஜினி தன் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றுகிறார். அவர் தமிழன் இல்லை. தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என மேடையில் பேசி வருகிறார்.

இப்போது ஆள்வது தமிழன்தானே அப்படி என்றால் சீமான் சும்மா இருப்பாரா.? அதற்கு அவர் வேறு ஒரு பதில் தருவார். சரி அதையெல்லாம் விடுங்க.. இதை சொல்ல காரணம் ரஜினியை எப்படியாவது விமர்சிக்க வேண்டும் என்பதே சீமானின் குறிக்கோள்.

இந்த நிலையில் முதன்முறையாக அவர் ரஜினியை அரசியலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது…

வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன் பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான் ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம்.

நடிகனை அரசியலுக்கு வா என அழைக்கும் அவலம் உள்ளது; ரஜினி அரசியலுக்கு வரட்டும்; I AM WAITING என கூறியுள்ளார் சீமான்.

தெலுங்கிலும் சூர்யா குரலை பதிவு செய்த ஜிவி. பிரகாஷ்

தெலுங்கிலும் சூர்யா குரலை பதிவு செய்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya recorded his voice in Soorarai Pottru Telugu version சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப்போற்று’.

இந்த படத்தில் மாறா மாறா என்ற தீம் மியூசிக் பாடலை நடிகர் சூர்யா பாடியிருந்தார்.

இந்நிலையில், இப்பட தெலுங்கு பதிப்பிலும், இதே பாடலை சூர்யா தெலுங்கிலும் பாடியிருக்கிறாராம்.

இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.

Suriya recorded his voice in Soorarai Pottru Telugu version

More Articles
Follows