100 கோடி கிளப்பில் ரஜினி-விஜய் செய்த மற்றொரு சாதனை

100 கோடி கிளப்பில் ரஜினி-விஜய் செய்த மற்றொரு சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vijay movies in 100 crore clubsஇப்போதுதெல்லாம் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் என்பது சாதாரணமாகிவிட்டது.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இதை அசால்ட்டாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் ரஜினியும் விஜய்யும் மற்றொரு சாதனையும் செய்திருக்கிறார்களாம்.

அதாவது சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி என்று தொடர்ச்சியாக ரஜினி படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அதுபோல் விஜய்யின் சமீபத்திய படங்களான துப்பாக்கி, கத்தி, தெறி உள்ளிட்ட தொடர் வெற்றி படங்கள் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini and Vijay movies in 100 crore clubs

சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கா? விடை கிடைச்சிடுச்சு..!

சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கா? விடை கிடைச்சிடுச்சு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Connection between Soppana Sundari song and Manisha Yadhav weddingராமராஜன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்த கரகாட்டக்காரன் படம் வெளியாகி 28 ஆண்டுகளை கடந்துவிட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு காமெடி காட்சிகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வருகிறது.

1) ஒரு வாழைப்பழம் இங்கிருக்கு. இன்னொன்னு எங்கே..? இதற்கு இதுவரை விடை தெரியவில்லை.

2) சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா? என்ற கேள்விக்கு செந்திலை அடித்தார் கவுண்டமணி.

இந்த இரண்டாவது காமெடியான சொப்பன சுந்தரி யாருன்னு இதுவரை தெரியல.

ஆனால், நவீன சொப்பன சுந்தரி மனீஷா யாதவ் பற்றிய கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சி.

வெங்கட் பிரபு இயக்கி அண்மையில் வெளியான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் வரும் சொப்பன சுந்தரி பாடலுக்கு சொப்பன சுந்தரியாக ஆடியவர் மனிஷா யாதவ்.

இவர் இன்று திடீரென தனது 7 வருட காதலரான பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் Warnid அவர்களை திருமணம் செய்துக் கொண்டார்.

அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்போ சொல்லுங்க… இனிமே சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கான்னு கேட்க முடியுமா?

Connection between Soppana Sundari song and Manisha Yadhav wedding

Manisha Yadav ‏@ManishaYadavS 1h1 hours ago
I thnk media 4 respctin dis as pvt affair btwn families thnk evry director/actr/tamil industry persn 4 der http://blessins.Fans 4 der luv

Manisha Yadav ‏@ManishaYadavS 1h1 hour ago
Thanks 2 famly frens well wishrs who stud by us rock solid in our 7yr relationship turning into a beautiful wedding #happiestdayofmylife.

Chennai 600028 2nd Innings Teaser hot

விஜய்யை தொடர்ந்து இயக்குனரை கௌரவித்த சூர்யா பட நிறுவனம்

விஜய்யை தொடர்ந்து இயக்குனரை கௌரவித்த சூர்யா பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Rajsekar Pandiyan presented Gold Chain for Director Hariகடந்த ஜனவரி மாதம் விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்படக்குழுவினருக்கு விஜய் தங்க செயினை அணிவித்தார்.

இதுபோல், சூர்யா நடித்த சி3 படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.

இதனால் உற்சாகமடைந்துள்ள, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் இயக்குனர் ஹரிக்கு தங்கச்செயினை பரிசாக அளித்துள்ளார்.

அப்போது சென்னை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா மன்ற ரசிகர்கள் உடனிருந்தனர்.

Producer Rajsekar Pandiyan presented Gold Chain for Director Hari

25 வருடங்களில் ஷாரூக்-அமீர்கானுக்கு இதுதான் பர்ஸ்ட் டைம்

25 வருடங்களில் ஷாரூக்-அமீர்கானுக்கு இதுதான் பர்ஸ்ட் டைம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shah Rukh Khan and Ameerkhan took photograph first timeபாலிவுட்டில் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள்.

இவர்களிடையே 25 ஆண்டுகால நட்பு இருந்தாலும் தற்போதுதான் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்களாம்.

இப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்த ஷாரூக்கான் மேற்கூறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Shah Rukh Khan and Ameerkhan took photograph first time

Shah Rukh Khan Verified account ‏@iamsrk
Known each other for 25 years and this is the first picture we have taken together of ourselves. Was a fun night.

ரஜினிக்கு அடுத்த இடத்தை உறுதி செய்த சூர்யா

ரஜினிக்கு அடுத்த இடத்தை உறுதி செய்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Suriyaசிங்கம்3 படம் வெளியாவதை தொடர்ந்து அதன் ரிலீசுக்கு முன்னர் அப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ஆந்திர மார்கெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை சூர்யா பிடித்துள்ளார் என்றார்.

இதனையடுத்து சி3 படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது.

தற்போது ஞானவேல்ராஜா சொன்னதைப் போலவே, இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

அதாவது இரண்டு நாட்களில் அங்கு மட்டும் அங்கு ரூ. 13.5 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் அங்கு Yamudu 3 என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

After Rajinikanth suriya set record in Box office Collection

தமிழக அரசியல் பற்றி அமிதாப்பிடம் ரஜினி ஆலோசனை.?

தமிழக அரசியல் பற்றி அமிதாப்பிடம் ரஜினி ஆலோசனை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Amithabதமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அதிமுகவை சேர்ந்த, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா இடையே மோதல் வலுத்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இதுகுறித்து சில பிரமுகர்களுடன் ஆலோசித்து வருவதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

அதில்… சில நாட்களில் தன் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனுடன் ரஜினி ஆலோசனை கேட்டதாகவும் தெரிகிறது.

ஆனால், அரசியலில் இறங்க வேண்டாம் என ரஜினியிடம் அமிதாப் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Whether Rajini met Amithab to consult about entering politics

More Articles
Follows