சன் டிவிக்காக நிஜத்திலும் இணையும் ரஜினி-விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிக்கு அடுத்து தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்கின்றனர்.

ரஜினி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் நடிக்கும் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சன் டிவி தயாரிக்கும் படங்களில் இணைந்த இவர்கள் மற்றொரு நிகழ்ச்சியில் இணைந்து மேடையேற உள்ளனர்.

சன் டிவி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

அதில் ரஜினி மற்றும் விஜய் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini and Vijay may participate in Sun TV 25th year grand function

கமல்-விக்ரம் இணையும் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம் செல்வா.

இவரின் 2வது படத்தையும் கமல் தயாரிக்கவிருக்கிறார். ஆனால் இந்த முறை கமல் தயாரிப்பாளர் மட்டுமே.

படத்தில் நாயகனாக நடிப்பது சீயான் விக்ரம்.

இவருடன் கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசனும் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க தெலுங்கு நடிகர் நிதினை அனுகியுள்ளனர்.

ஆனால் அவர் கால்ஷீட் கொடுக்க முடியாத காரணத்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் மறுத்து விட்டாராம்.

Telugu actor rejected Kamalhaasan Vikram film

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை பற்றிய ஒரு புதிய படம் உருவாகவுள்ளது.

லைட்மேன், நீலம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.

தற்போது அதற்கான பணிகளில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கமர்ஷியல் சினிமாவாக இல்லாமல் உண்மை சம்பவத்தை யதார்த்தமாக கொடுக்கவிருக்கிறார்களாம்.

LTTE leader Velupillai Prabhakaran story biopic

கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரமுடன் இணைகிறார் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல், த்ரிஷா இணைந்து நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராஜேஷ் எம் செல்வா.

இவர் கமலிடம் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குனராக இருந்தவர்.

இவர் தற்போது தன்னுடைய 2வது படத்தை இயக்க உள்ளார் என்றும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதையும் பார்த்தோம்.

இதில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார் அக்‌ஷரா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் அது முடிந்தபிறகு இப்பட சூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Vikram and Aksharahaasan team up with Kamalhaasan

விஜய்-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் நயன்தாரா இணைவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கரு படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கப் போகும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கு முன் நாச்சியார் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருந்தார் ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’, செம, உள்ளிட்ட படங்கள் ஜிவி. பிரகாஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

Will Nayanthara joins with Vijay and GV Prakashs new project

திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கவுள்ள தமிழக அரசுக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

அப்போது அவர் திரைத்துறை வேலை நிறுத்தம் குறித்து பேசினார். அதில்…

““தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விரைவில் தயாரிப்பாளர்கள் பிரதிநிதிகளுடன், உயர்மட்ட அதிகாரிகள் குழு பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்க பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரணியை விஷால் வாபஸ் வாங்கி விட்டார்.

தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது. அரசு சில கொள்கை முடிவுகள் அறிவிக்கவுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்சினை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vishal said we trust TN government for Cinema industry issue

More Articles
Follows