கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுக்கும் ரஜினி-வைரமுத்து

கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுக்கும் ரஜினி-வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vairamuthu offers their Marriage hall for Corona treatment இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

அதற்கு பிறகும் நீடிக்குமா? என்பது விரைவில் தெரிய வரும். ஒரு சில மாநில முதல்வர்கள் இந்த ஊரடங்கை நீடிக்குமாறு கேட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல நடிகர்கள் விஜயகாந்த், கமல் ஆகியோர் தங்கள் இடங்களை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கமல் தன் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அறிக்கை அளித்திருந்தார்.

அதுபோல் விஜயகாந்த் தன் கட்சி ஆபீஸ் மற்றும் காலேஜ்ஜை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் சிகிசைக்காக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஏற்கனவே, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மக்கள் தங்குவதற்காக (துப்புரவு பணியாளர்கள்) அந்த மண்டபத்தில் இடம் அனுமதிக்கப்பட்டு உணவளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் சூளைமேடில் இருக்கும் தன் பொன்மணி மாளிகையை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Rajini and Vairamuthu offers their Marriage hall for Corona treatment

விஜய்யின் குட்டி ஸ்டோரி இப்போ கொரோனா ஸ்டோரி ஆச்சே..

விஜய்யின் குட்டி ஸ்டோரி இப்போ கொரோனா ஸ்டோரி ஆச்சே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anthony Daasan changed Vijays Kutty story into Corona storyலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதில் முக்கியமான பாடல் குட்டி ஸ்டோரி பாடல் தான்.

இந்த பாடல் யூடிப்பில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் குட்டி ஸ்டோரி பாடலை கொரோனா ஸ்டோரி பாடலாக பாடகர் அந்தோணி தாசன் மாற்றியுள்ளார்.

அந்தோணி தாசன் அவரது நண்பர்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு வரிகளாக மாற்றி பாடியுள்ளனர்.

இந்த பாடலில் நடிகர் அப்புக்குட்டியும் இடம் பெற்றுள்ளார்.

வீட்டுல இருப்போம் அது தான் பெஸ்ட், வெளியில போனா கொரோனா மஸ்ட் போன்ற வார்த்தைகள் பாடலில் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இப்பாடலை வரி மாற்றி எழுதி மொபைல் போனில் எடிட் செய்தவர் சிகா. பாடியிருப்பவர் நவ்பால் ராஜா.

நாங்கள் அனைவரும் அரசு சொல்லுக்கு இணங்க தனிமையிலிருந்து இப்பாடலை பண்ணியிருக்கிறோம் நன்றி. என அந்தோணி தாசன் பதிவிட்டுள்ளார்.

Anthony Daasan changed Vijays Kutty story into Corona story

https://www.facebook.com/anthonydaasan/videos/3289673827728069/

செண்பகமே… செண்பகமே…; தீனாவை பால் கறக்க வைத்த கொரோனா

செண்பகமே… செண்பகமே…; தீனாவை பால் கறக்க வைத்த கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dheenas time pass in Corona lock down days விஜய் டிவி ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு காமெடி செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா.

தற்போது ஒரு சில சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

கார்த்தியின் கைதி படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே அடங்கியிருக்கிறார்.

ஆனால் வீட்டில் சும்மா இல்லாமல் தன் வீட்டில் உள்ள மாடுகளை பராமரித்து வருகிறார் தீனா.

மாட்டிற்கு தவிடு வைப்பது வைக்கோல் வைப்பது என செய்தும் பால் கறந்தும் வருகிறாராம்.

இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Dheenas time pass in Corona lock down days

BREAKING கொரோனா நிவாரணம்; பிரதமர்-முதல்வர்-பெப்சிக்கு அஜித் உதவி

BREAKING கொரோனா நிவாரணம்; பிரதமர்-முதல்வர்-பெப்சிக்கு அஜித் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Humongous Donation For Corona Relief fundகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில இதை தடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே பெப்சி தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நடிகர்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தன் சார்பில் நிதிகளை வழங்கியுள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி கொடுத்துள்ளார்.

ஆக ரூ. 1.25 கோடி கொடுத்துள்ளார். இவையில்லாமல் பிஆர்ஓ. யூனியனுக்கு ரூ. 2.5 லட்சமும் கொடுத்துள்ளார்.

இத்துடன் தமிழ் சினிமா பத்திரிகையாளர்களின் இரண்டு சங்கங்களுக்கும் சேர்த்து ரூ. 2.5 லட்சம் கொடுத்துள்ளார்.

Ajiths Humongous Donation For Corona Relief fund

மெகா ப்ராஜக்ட்க்கு ப்ளான் போடும் ‘திருட்டுப் பயலே’ சுசி கணேசன்

மெகா ப்ராஜக்ட்க்கு ப்ளான் போடும் ‘திருட்டுப் பயலே’ சுசி கணேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

susi ganeshanபைஃவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே’ மற்றும் ’திருட்டுப் பயலே 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன்.

தற்போது ’திருட்டுப்பயலே 2’ படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.

வினித் குமார் சிங் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தற்போது கொரேனாவில் தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் சுசி கணேசன் விரைவில் மெகா பட்ஜெட் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க இருக்கிறாராம்.

கொரோனா பிரச்சினை மற்றும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கொரோனா மருந்து கேட்டு இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

கொரோனா மருந்து கேட்டு இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trump modiஉலகின் மிக கொடிய நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

அதிலும் உலக நாடுகளில் இதன் பாதிப்பில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது.

ஒரே நாளில் மட்டும் 1,255 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

எனவே கொரோனா சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.

இதனையடுத்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இதனிடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

இதனால் மருந்துகளை பெறுவதில் அமெரிக்காவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் மருந்துக்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் அமெரிக்கா ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுப்பது போல தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது

உதவுவது நல்லது தான். அதே சமயம் நம் தேவைக்கு மருந்தை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு மிஞ்சியது தான் தானம் தர்மம் என்ற பாணியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் அனுபவத்தில் இப்படி ஒரு மிரட்டும் அரசு குறித்து கேள்விப்பட்டதில்லை என அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

More Articles
Follows