ஸ்ரீதேவி மரணத்தால் கதறியழும் மகள் ஜான்வி; ஆறுதல் சொன்ன ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு துபாய் நாட்டில் மரணம் அடைந்தார் நடிகை ஸ்ரீதேவி.

மரணம் அடைந்து 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் துக்கம் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுது கொண்டே இருக்கிறாராம் இவரது மகள் ஜான்வி.

கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் கூடியுள்ளனர்.

போனிகபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் வீட்டில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தங்கியுள்ளார்.

இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் அங்கு சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் மும்பை சென்று ஓட்டலில் தங்கி உள்ளனர்.

அவர்கள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறியுள்னர்.

மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கமலின் முன்னாள் மனைவி சரிகா, மகள்கள் சுருதிஹாசன், அக்சரா ஆகியோரும் ஜான்விக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பாடகர்கள் சித்ரா-உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்த த்ரயா போஸ்ட் ப்ரோடக்க்ஷன் ஸ்டூடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் ஸ்டூடியோ. முகப்பேரில் டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங், அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் உதயமாகியுள்ளது த்ரயா ஸ்டூடியோ.

ஜீலியும் நான்கு பேரும் படத்தின் இசையமைப்பாளர் ” ரகு சவன் குமார் ” சினிமா மீதான காதலால் ஒலியை துல்லித்தன்மையுடன் உருவாக்க இந்த ஸ்டூடியோவை நிர்மாணித்திருக்கிறார்.

இங்கு பயன்படுத்தபடும் கருவிகள் மிகப்பெரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தன் கனவு ஸ்டூயோவை உருவாக்கியிருக்கிறார்.

ஒலி சம்மந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங் , மிக்‌ஷிங், மாஸ்டரிங் போன்ற எல்லா போஸ்ட் புரடக்‌ஷனஸ் வேலைகளுக்கு வெளியே எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்றவாறு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இங்கே மிக்ககுறைந்த பட்ஜெட்டில் மிக நவீனமான தரமான போஸ்ட்புரடக்‌ஷன் வேலைகளை செய்து முடிக்க முடியும்.கடந்த ஜனவரி மாதம் பாடகி சித்ரா, உண்னிகிருஷ்னன் மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தனர்.

மூவரும் இந்த ஸ்டூடியோ தனித்தனமையுடம் மிகுந்த நவீனமாக தரமுடன் இருப்பதாக பாரட்டினர். சென்னை முகப்பேரில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவில் பல படங்களின் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்டூடியோவில் பெரிய நிறுவனக்களின் ஸ்டுடியோ போல் லைவ் ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது.

ஒரே நேரத்தில் 12 வயலின்கள் இணந்து வாசிப்பதற்கான இடம் இங்கு அமைந்துள்ளது.

மேலும் சென்னையிலேயே மிகத்துல்லியமான சவுண்டை உருவாக்கும் உபகரணங்கள் இங்கு உள்ளது.

இங்கு திரைப்பட வேலைகளை மேற்கொண்டவர்கள் இந்த ஸ்டூடியோவின் ஒலித்திறனை வியந்து பாராட்டினர்.

சவுண்டுக்கு எனத்தனியே ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கும் ஒரே ஸ்டூடியோவான த்ரயா ஸ்டூடியோ அமைந்துள்ளது.

வெகு குறைந்த காலத்தில் திரைப்பட தொழிநுட்ப கலைஞர்களின் நற்பெயர் பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ இப்போது பல படங்களுக்கு ஒலி வேலைகளை செய்து வருகிறது.

Thraya Digital audio recording studio situated in Mogappair Chennai

 

பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தார்.

ஆனால் அவை சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்தார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 25 ஆண்டுகளுக்கு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ல் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை முடித்துவிட்டு இப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2

குஷ்பூ-சீமான் இருவரையும் இணைய வைத்த டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது.

கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர்.

ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் .

இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா, உபாசனா,கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர்.

அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .

சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு ,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு.

இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது.

இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் விக்கி கூறும் போது ” நம் சமுதாயத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக 18 ஆண்டுகள் போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவரது “ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதையைப் படித்த போது இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அவர் மன வலிமை உள்ளவர். ஆனால் பழக எளிமையானவர். எஸ்.ஏ.சி அவர்கள் நடிக்க முன் வந்ததுமே படம் பெரிய அளவில் மாறிவிட்டது. “என்கிறார்.

படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும் போது ” டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் பற்றி முழுதாக அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கும் அவருக்கும் காதல் திருமணம் ,சட்டப் போராட்டம் போன்று பலவற்றில் ஒற்றுமைகள் இருந்தன. அவரை நேரில் சந்தித்த போது 83 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று வியப்பூட்டினார்.

அவரது உடல் மொழிகளை நேரில் கவனித்துக் கற்றுக் கொண்டேன் அதன்படி படத்தில் நடித்தேன் ” என்கிறார்.

தன்னைப் பற்றி உருவாகிற படம் பற்றி டிராபிக் ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் பேசும் போது, “என்னைப் பற்றிப் படமெடுக்க முன் வந்தது மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன்வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள்.

இதுவே தமிழ் நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.” என்கிறார்.

Khusboo teams up with Seeman for Traffic Ramasamy

கார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

லைகா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியை எதிர்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அழுத்தமான வில்லன் கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movie

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்; மும்பை சென்றார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரவுள்ளதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் மும்பை சென்றுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் கமல்,

“உயிர்ழந்த ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தின் கலந்துகொள்வது வழக்கமில்லை என்று முடிவெடுத்த நிலையில், குடும்பத்தில் ஒருவராகக் கருதும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்கிறேன்.

பொதுமக்களுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதால், இடையூறுகள் ஏற்படும் என அதை தவிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், ராமநாதபுரத்தில் பேசிய போது தனக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வந்தனர்.

தற்போது கமல் இப்படி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows