BREAKING பால் கதை சொல்லி மீடியாக்களுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சற்றுமுன் நடைபெற்றது.

இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

இன்றைய சமுதாயம் ரொம்ப கெட்டுப்போடியிருக்கு,

தற்போதைய சூழலில் சோ போன்ற சிறந்த பத்திரிகையாளர் அவசியம் தேவை.

வாழ்க்கையில் கவலைகள் அன்றாடம் வரும். அதை நிரந்தரமாக்கி கொண்டால் அவன் நோயாகி. கவலைகளை தற்காலிகமாக்கி கொண்டால் அவன் அறிவாளி.

உண்மையான ஊடகங்களுக்கு சமுதாய பொறுப்பு வேண்டும். நிஜத்தை அப்படியே மக்களிடம் கொடுக்க வேண்டும்.

பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என மீடியாக்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்தார்.

Rajini advice to media to give real news to public

மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:-

எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன் இயக்குநர் சித்திக்கின் நண்பர் ஆவார். அவர் ஒருமுறை இயக்குநர் சித்திக்கை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அடுத்த நாளே மோகன்லால் ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கவில்லை. ஏனென்றால், அனைத்து கலைஞர்களின் தேர்வும் முடிந்திருந்தது. இது எனக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.

ஜுன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை ஏறத்தாழ 145 நாட்கள் படிப்பிடிப்பு நடித்தியிருக்கிறோம். மோகன்லாலுடன்
தமிழில் ‘காவலன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை இயக்கினார் சித்திக். அதன்பிறகு சித்திக் இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியது.

சமீபத்தில் தான் நடிகர் மோகன்லால் சினிமாத் துறைக்கு வந்து 41 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடினோம். மேலும், மலையாளத்தில் அறிமுக நாயகியாக மோகன்லாலுடன் ஜோடியாக நடித்தது பெருமையாக இருந்தது. மலையாள சினிமாவில் இனி நான் சாதிக்க வேறொன்றுமில்லை எனும் அளவிற்கு இந்த வாய்ப்பு மதிப்புமிக்கது.

‘பிக் பிரதர்’ மலையாளம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள். சல்மான்கானின் சகோதரர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால், இது மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.

தற்போது இசை வெளியீட்டு விழா முடிந்து ஜனவரி 16ஆம் தேதி வெளியாகிறது. இசை வெளியீட்டிற்குப் பிறகு அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் முற்றிலும் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொழுதுபோக்கான படம். மோகன்லால் நடிக்கும் படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கொடுக்கும். அதேபோல், இந்த படமும் மாபெரும் வெற்றியடையும்.

முதல் நாள் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்றதும் பதட்டத்துடன் தான் சென்றேன். ஆனால், அவருடன் கேமரா முன் நின்றதும் பதட்டம் மறைந்து விட்டது. மாபெரும் நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் இயல்பாக பழகினார். அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குழுவினருமே நகைச்சுவையோடு பேசி சிரித்து கலகலப்புடன் தான் இருப்பார்கள்.

மேலும், எனக்கு இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. ஓடுகின்ற காரில் நடக்கின்ற சண்டைக் காட்சியில் நடித்தது சவாலாக இருந்தது மற்றும் இது தான் எனது முதல் அனுபவம். அந்த சண்டைக் காட்சியில், மோகன்லாலுக்கு கையில் அடிபட்டுவிட்டது அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்து விட்டார். அதன்பின் செய்தித்தாள்களில் பார்த்து தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பது தெரியவந்தது. இம்மாதிரி அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய மோகன்லாலை பார்த்து வியந்தேன்.

இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றது. இசை வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீபக் தேவின் இசை படத்திற்கு பலமாக அமையும்.

பொதுவாக சித்திக் படம் என்றாலே திருவிழா மாதிரி வண்ணமயமாக இருக்கும். யதார்த்ததோடு கமர்ஷியலும் சேர்ந்திருப்பது இப்படத்தின் சிறப்பு. மேலும், ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் கவனித்து அமைத்திருக்கிறார். இதற்கு முன் இப்படியான பாத்திரங்களைப் பார்த்ததாக யாருக்கும் நினைவில் வராது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் என்று எல்லாம் கலந்த தொகுப்பு திரைப்படமாக ‘பிக் பிரதர்’ இருக்கும். இதுபோன்ற திரைப்படம் இனிமேல் வருமா என்று தெரியாது.

நான் இந்த படத்தில் வந்த பிறகு இன்னும் வண்ணமயமாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனென்றால், பெரிய தொழிலதிபரின் மகள், நன்றாக படித்த அறிவுமிக்க, சுட்டித்தனம் மிகுந்த பெண்ணாக நடிக்கிறேன். மோகன்லாலை தவிர மற்ற நடிகர், நடிகைகளுடன் நடிக்கும் போது அவர்கள் கேமரா முன் எப்படி நிற்கிறார்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டேன்.

மோகன்லாலிடம் எப்படி இவ்வளவு படங்கள் நடித்து விட்டு எளிமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, லேசான புன்னகையுடன் நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த சிறு சிறு விஷயங்களையும் விளக்கமாக கற்றுக் கொடுப்பார். மிகப்பெரிய நடிகருக்கு இவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்படத்தில் நடித்ததை விட அதிகமாக கற்று கொண்டேன் என்பது தான் மகிழ்ச்சியளிக்கிறது.

எந்த மொழியில் நடித்தாலும் நல்ல திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென்ற கனவு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. தமிழில் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ‘பிக் பிரதர்’ படத்திற்கு பிறகு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது பற்றிய செய்திகள் ‘பிக் பிரதர்’ படம் வெளியான பிறகு அறிவிப்பு வெளியாகும்.

மேலும், ‘பிக் பிரதர்’ படத்தை எந்த மொழியில் மறு உருவாக்கம் செய்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தில் நானே நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இவ்வாறு நடிகை மிர்னா ‘பிக் பிரதர்’ படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றிக் கூறினார்.

படமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்

இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

ஸ்டன்ட் – கனல் கண்ணன்

கலை – ஆண்டனி ஜோசப்

எடிட்டிங் – ஆதித்யன்

நடனம் – அபீப் உஷேன்

இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா

தாயாரிப்பு – THREE IS A COMPANY

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி.

படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது…

சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ” நானும் சிங்கிள் தான் ” என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. ஆக முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்கிறார்கள்.படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் #கட்டில் திரைப்பட குழுவினரின் #பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது “கட்டில்” திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை “கட்டில்” படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டிடாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இ.வி.கணேஷ்பாபு.

இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் “கட்டில்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

தர்பார் படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி’.

அப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால்டிப்போ’ கே.கதிரேசன் தயாரித்துள்ளார்.

இப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.

படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

“எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ ,’ குஸ்கா’ ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து ‘வாழ்க விவசாயி’, வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.

தை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

சாகுபடி செய்யும் போது ஒரு விவசாயி புயல், காற்று , கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l

இப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.

படம் பற்றி நடிகர் அப்புக்குட்டி கூறும்போது ” ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா?

‘ தர்பார்’ போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம் சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .

நாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.

விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.

படத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .

குறிப்பாக, ’அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம் …
வெள்ளாம எல்லாமே தண்ணீரிலே …”என் எல்லாமே உன் கண்ணீரிலே…’
என்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி..!

’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்

சந்தானத்தின் டகால்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ”
தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.

கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த்.

சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம்.

ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம்.

பாடகர் விஜயநாராயணன் இசைமைக்கும் முதல் படம்.

எஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல முதல்களுடன் ” டகால்டி ” வருகிறது.

More Articles
Follows