விஜய்-அஜித் ஒதுங்கினாலும், ரசிகர்களுக்காக நின்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சூட்டிங்கை தமிழ்நாட்டில் வைக்க மாட்டார்கள்.

சூட்டிங் நடப்பது அறிந்துவிட்டால், திரளும் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால், பெரும்பாலும் தமிழ்நாட்டில் சூட்டிங் வைப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

அண்மையில் விஜய்யின் பைரவா படத்திற்காக, தமிழக பின்னணியை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர்.

அதன்பின்னர் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை ஷூட் செய்தனர்.

அதுபோல் அஜித்தின் 57வது படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையின் முக்கியமான வீதிகளில் படமாக்க நினைத்தாராம் சிவா.

ஆனால் அஜித் மறுக்கவே, பின்னர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால், ரஜினியின் 2.ஓ சூட்டிங்கை சென்னையை அடுத்துள்ள திருக்கழுங்குன்றம் பகுதியில் நடத்தியுள்ளார் ஷங்கர்.

அங்கே ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இருந்தபோதிலும் தன் ரசிகர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் இந்த சூப்பர் ஸ்டார்.

விஜய்சேதுபதி ரூட்டுக்கு வந்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய படங்கள் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இவரது வழியில் ஜி.வி. பிரகாஷீம் தனது இரண்டு படங்களை ஒரே மாதத்தில் வெளியிடவிருக்கிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ தீபாவளிக்கு (அக்டோபர் இறுதி) ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பிராசந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ படத்தையும் நவம்பரில் வெளியிட இருக்கிறார்களாம்.

செல்வராகவன்-சூர்யா கூட்டணியில் இணைந்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தால் இந்த எதிர்பார்ப்பு உச்சம் தொடும்.

தற்போது அது போன்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சம் மறப்பதில்லை கௌதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, யுவன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.

கிட்டதட்ட 10 வருடங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெமோ-றெக்க-தேவி படங்கள்; 1 வாரம் – மொத்த வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விருந்தாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த றெக்க மற்றும் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய 3 படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த 3 படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இவை மூன்றும் ஓரளவு பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

தற்போது 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இவை மூன்றின் வசூல் நிலவரங்கள் தெரியவந்துள்ளது.

ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.31.8 கோடியை வசூல் செய்துள்ளது.

அதாவது சென்னையில் ரூ. 3.35 கோடியும், செங்கல்பட்டில் ரூ. 8.4 கோடியும், கோவையில் ரூ5.5 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

இந்த ஆறு நாட்களில், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ ரூ.9 கோடியும், பிரபுதேவாவின் ‘தேவி’ ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வித்தியாசமான டிசைனில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இரண்டு படங்களையும், நிவின்பாலி நடிக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கிறது.

எஸ்.கே. (சிவகார்த்திகேயன்) நடிக்கவுள்ள ஒரு படத்தை மோகன்ராஜாவும், மற்றொரு படத்தை பொன்ராமும் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தின் சூட்டிங் பற்றிய தகவலை வித்தியாசமாக சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை வருகிற 11-11-2016 தேதி தொடங்க உள்ளனர்.

இந்த டிசைனில் இப்படத்தில் பணியாற்ற உள்ள சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, அனிருத், நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், ரோகினி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

 

மெகா ஸ்டாருக்கே சூப்பர் ஸ்டார் சப்போர்ட் தேவைதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியளவில் பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே பிரபல நடிகர்களும் ரஜினி டயலாக்குகளை அல்லது காட்சிகளை தங்கள் படத்தில் வைத்து விடுகின்றனர்.

இதில் மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான மம்மூட்டி அவரது 3 படங்களில் ரஜினி தொடர்பான காட்சிகளை வைத்துள்ளார்.

‘புதிய நியமம்’ என்ற படத்தில் நயன்தாராவை கண்டிக்கும்போது ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று பன்ச் பேசுவார்.

அண்மையில் வெளியான ‘கசாபா’ படத்திலும் ரஜினி பட போஸ்டர்களை சில காட்சிகளில் காண்பித்திருப்பார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘தோப்பில் ஜோப்பன்’ படத்திலும் ஒரு காட்சி வைத்துள்ளார்.

அதில் ஒரு காட்சியில், போலீஸிடம்… “சாரே.. எல்லாரையும் அடிச்சுட்டு என் பிரண்டை கூட்டிட்டு போறதுக்கு நான் ஒன்னும் ரஜினி இல்லையே… நான் சாதாரண ஆள்தான்” என்று பேசியபடியே செல்வார்.

அட.. மெகா ஸ்டாருக்கே நம்ம சூப்பர் ஸ்டார் சப்போர்ட் வேனும் போலவே…

More Articles
Follows